10 லட்சம் மைல்கல்... விற்பனையில் சக்கைப் போடு போடும் ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்... என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஹெல்மெட் சந்தையிலும் பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் பிரபலமான SBA-20 ஹெல்மெட் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெல்மெட், இதுவரை 10 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. பாதுகாப்பு, வசதி, ஸ்டைல் என மூன்றையும் ஒருங்கே வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹெல்மெட், தினசரி இருசக்கர வாகனப் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Steelbird SBA 20 Helmet

என்ன ஸ்பெஷல்?

ஸ்டீல்பேர்டு SBA-20 ஹெல்மெட்டில் அதிக தாக்கத்தைத் தாங்கக்கூடிய தெர்மோபிளாஸ்டிக் வெளிப்புற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே அதிக அடர்த்தி கொண்ட EPS (Expanded Polystyrene) அடுக்கு இடம்பெற்றுள்ளது. இது விபத்தின்போது ஏற்படும் தாக்கத்தைத் தணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெல்மெட் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) IS 4151:2015 பாதுகாப்பு தரத்திற்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயணத்தின்போது காற்றோட்டத்தை மேம்படுத்தும் வகையில் டைனமிக் ஏர்ஃப்ளோ வென்டிலேஷன் அமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.

Also Read

ஃபிளிப்-அப் வடிவமைப்பு

இந்த ஹெல்மெட் ஃபிளிப்-அப் வடிவமைப்பை பெற்றுள்ளது. முன்பக்க பகுதியை மேலே தூக்கிக்கொள்ள முடியும் என்பதால், ஹெல்மெட்டை முழுவதுமாக கழற்றாமல் பேசுவதற்கு வசதியாக இருக்கும். மேலும், வெயிலிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவும் உள்ளமைக்கப்பட்ட சன் ஷீல்டும் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் மைக்ரோமெட்ரிக் பக்கிள், பாலிகார்பனேட் ஸ்பாய்லர், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் விண்ட் டிஃப்ளெக்டர் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ஹெல்மெட்டின் உட்புறப் பகுதிகளை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் பொருத்திக்கொள்ள முடியும் என்பதும் கூடுதல் வசதியாகும்.

Also Read

இரவு நேரப் பயணத்திற்கும் வசதி

ஸ்டீல்பேர்டு SBA-20 ஹெல்மெட்டில் கீறல் எதிர்ப்பு பூச்சுடன் கூடிய பாலிகார்பனேட் வைசர் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மோக் மற்றும் குரோம் ஆகிய இரண்டு வகையான ஃபினிஷிங்களில் கிடைக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பிரதிபலிப்பு தன்மை கொண்ட அமைப்பு, குறைந்த வெளிச்சத்தில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு கவனத்தை பெற உதவுகிறது.

விலை எவ்வளவு?

ஸ்டீல்பேர்டு SBA-20 ஹெல்மெட் பல்வேறு அளவுகள் மற்றும் வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை வேரியண்டைப் பொறுத்து ரூ.1,869 முதல் ரூ.2,459 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை சாதனை குறித்து ஸ்டீல்பேர்டு ஹை-டெக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் கபூர் கூறுகையில், SBA-20 ஹெல்மெட் 10 லட்சம் விற்பனையை எட்டியிருப்பது வாடிக் கையாளர்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றார். பாதுகாப்பு, வசதி, வடிவமைப்பு மற்றும் அனைவருக்கும் ஏற்ற விலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஹெல்மெட்களை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Article Published On: Monday, November 2, 2026, 12:39 [IST]
English summary
Steelbird sba 20 helmet crosses 10 lakh sales
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out