உலகையே திரும்பி பார்க்க வைக்கும் மைலேஜ்! டிவிஎஸ் நிறுவனத்தை கதற விட போகும் ஜப்பான் கம்பெனியின் ஸ்கூட்டர்!
ஜப்பானை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற வாகன நிறுவனங்களில் ஒன்று சுஸுகி (Suzuki). இந்நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து, இந்தியாவில் டூவீலர்களை உற்பத்தி செய்து வருகிறது. அதாவது சுஸுகி நிறுவனம் இந்தியாவில் டூவீலர் உற்பத்தியை தொடங்கி, சுமார் 20 வருடங்கள் கடந்து விட்டன.
இந்த சூழலில், சுஸுகி நிறுவனம் இந்தியாவில் டூவீலர் உற்பத்தியில் புதிய மைல்கல் (Milestone) ஒன்றை கடந்துள்ளது. 10 மில்லியன், அதாவது 1 கோடி டூவீலர்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இந்தியாவில் சுஸுகி நிறுவனத்தின் டூவீலர் தொழிற்சாலை ஹரியான மாநிலம் குர்கானில் (Gurgaon) செயல்பட்டு வருகிறது.

அங்குதான் 1 கோடியாவது சுஸுகி டூவீலர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அது சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டர் ஆகும். இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் சுஸுகி நிறுவனத்தின் டூவீலர்களில் ஒன்றாக இது உள்ளது.
சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அத்துடன் சுஸுகி நிறுவனம் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரின் மைலேஜ் சுமார் 90 கிலோ மீட்டர்கள் அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டருக்கு போட்டியாக, சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர் இருக்கும்.
ஆனால் சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரின் இந்திய வருகை, இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சுஸுகி நிறுவனம் ஆக்ஸஸ் தவிர, அவ்னிஸ், பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் போன்ற ஸ்கூட்டர்களையும் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இவை எல்லாம் தவிர, ஜிக்ஸர் எஸ்எஃப்/ஜிக்ஸர், ஜிக்ஸர் எஸ்எஃப் 250/ஜிக்ஸர் 250, வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ், வி-ஸ்ட்ரோம் 800 டிஇ, ஜிஎஸ்எக்ஸ்-8ஆர், ஹயபுசா போன்ற பைக்குகளையும், சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் 1 கோடி டூவீலர்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டியிருப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சுஸுகி நிறுவனம் இந்தியாவில் 5 மில்லியன், அதாவது 50 லட்சம் டூவீலர்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்ட, சுமார் 14 ஆண்டுகளை எடுத்து கொண்டது (2020ம் ஆண்டில்தான் இந்த மைல்கல் எட்டப்பட்டது).
ஆனால் அடுத்த 50 லட்சம் டூவீலர்களை உற்பத்தி செய்து, ஒட்டுமொத்தமாக 1 கோடி டூவீலர்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்ட சுஸுகி நிறுவனம் வெறும் 6 ஆண்டுகளை மட்டுமே எடுத்து கொண்டுள்ளது. இந்தியாவில் சுஸுகி டூவீலர்களின் உற்பத்தி மிக வேகமாக அதிகரித்து வருவதை இந்த புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications








