பெட்ரோல் ஆக்சஸ் ஸ்கூட்டரை வாங்குவதை விட இது பெஸ்ட்டு! புது கஸ்டமரா இருந்தா கூடுதல் சலுகை!

இந்திய எலெக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-wheelers) சந்தையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இ-ஆக்சஸ் (e-Access)-க்கு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க நிதிப் பயன்களை வழங்குகின்றன.

சுஸுகி இ-ஆக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 மதிப்பில் லாயல்ட்டி போனஸ் (Loyalty Bonus) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதி சலுகையாக ரூ.9,800 அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, இந்த சலுகை காலத்தில் ரூ.19,800 வரை இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரை வாங்குபவர்கள் சேமிக்க முடியும். இது இல்லாமல், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,000 வெல்கம் போனஸ் (Welcome Bonus) கிடைக்கும் என்பது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே வழங்கப்பட்டுவரும் சலுகை ஆகும்.

suzuki e-access electric scooter offer

இ-ஆக்சஸ் ஸ்கூட்டருக்கான சிறப்பு கடன் திட்டங்களின் வட்டி விகிதங்கள் இப்போது 5.99 சதவீதத்தில் இருந்து தொடங்குகின்றன. இத்துடன், பேட்டரி மற்றும் ஸ்கூட்டர் என இரண்டிற்கும் 7 ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ வரையிலான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை சுஸுகி வழங்குகிறது. இதற்கான கட்டணம் வெறும் ரூ.4,000 மட்டுமே.

மேலும், ரூ.18,000 மதிப்புள்ள சார்ஜரையும் ஸ்கூட்டரின் விலையுடன் சேர்த்து சுஸுகி வழங்குகிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, வாங்கி 3 வருடங்களான பின்பும் ஸ்கூட்டரின் மதிப்பில் 60%-ஐ வழங்குவதாக சுஸுகி தெரிவிக்கிறது. அதாவது, 3 வருடங்கள் கழித்து ஸ்கூட்டரை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்தால், அதனை வாங்கிய விலையில் 60% வரையில் திரும்ப கிடைகும்.

suzuki e-access electric scooter offer

சுஸுகி இ-ஆக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Delhi Ex-Showroom Price) ஆக ரூ.1.88 லட்சம் தற்சமயம் உள்ளது. இந்தியாவின் பிரீமியம் தரத்திலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் இடம்பெறும் சுஸுகி இ-ஆக்ஸஸ் ஆனது முதன்முதலாக 2025ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் 3.07 kWh லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரியால் இயக்கப்படுகிறது. இது நீண்ட ஆயுள் மற்றும் நீடித்துழைக்கும் தன்மைக்குப் பெயர் பெற்றது. இந்த LFP பேட்டரி தொழில்நுட்பம் வழக்கமான நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் (NMC) பேட்டரிகளை விட குறிப்பிடத்தக்க வகையில் அதிக ஆயுட்காலத்தை வழங்கும் என சுஸுகி தெரிவிக்கிறது.

இந்த பேட்டரி ஆனது ஸ்கூட்டரின் சேசிஸ் அமைப்பிற்குள் பொருத்தப்படுகிறது. இ-ஆக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.1 kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இது 15 என்.எம் வரையிலான டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது. பேட்டரி சார்ஜ் 10 சதவீதமாகக் குறைந்தாலும், சீரான செயல்திறனை இது பராமரிக்கும் என சுஸுகி உறுதியளிக்கிறது.

ஈக்கோ (Eco), ரைட் ஏ (Ride A) மற்றும் ரைட் பி (Ride B) என மூன்று ரைட் மோட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம். அன்றாட பயன்பாட்டை மேம்படுத்த, பின்னோக்கி இயங்கும் வசதி (reverse assist) மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (regenerative braking) போன்ற நடைமுறை அம்சங்களும் இதில் அடங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.19,800 வரையிலான புதிய சலுகைகள் சுஸுகி இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த மதிப்பை அதிகரிக்கக் கூடியவைகளாக உள்ளன. இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஸ்கூட்டர்களுள் ஒன்று, சுஸுகி ஆக்ஸஸ் ஆகும். இத்தகைய பிரபலமான ஸ்கூட்டராக இருப்பினும், இதன் எலெக்ட்ரிக் வெர்சனை வாடிக்கையாளர்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்க இவ்வாறான சலுகைகள் அவசியமாகின்றன. இருப்பினும், இந்த சலுகைகள் எத்தனை நாட்களுக்கு வழங்கப்பட உள்ளன என்கிற விபரத்தை சுஸுகி வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 25, 2026, 22:44 [IST]
English summary
Suzuki 2 wheelers announced upto rupees 19800 benefits for e access electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+