1.22 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டியை வாங்கியிருக்காங்க! கம்பெனி செம சூப்பரா இருக்குதே!

இந்தியாவில் 125சிசி ஸ்கூட்டர் தயாரிப்பில் முக்கியமான நிறுவனமாக இருப்பது சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தான். இந்நிறுவனம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனை விபரங்களையும் 2025ம் ஆண்டு முழு ஆண்டு விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் நல்ல விற்பனை அதிகரிப்பில் நிறைவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சுசூகி நிறுவனம் இந்தியாவில் ஆக்சிஸ் என்ற 125 சிசி ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் அதிகமாக இந்நிறுவனம் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அதிகமாக விற்கும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இதுபோக இந்நிறுவனம் பர்க்மேன் என்ற மேக்ஸி ஸ்கூட்டரில் அதே நேரத்தில் ஜிக்ஸர் என்ற பெயரில் பைக்குகளையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

Suzuki 2W Sales Dec 2025

இந்நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 1,22,366 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் மட்டும் 97,823 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன இது போக 24,543 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி உள்ளது.

இதுவே கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனை ஒப்பிடும்போது அந்த மாதம் வெறும் 96,804 வாகனங்கள் தான் விற்பனை ஆகியிருந்தது அப்பொழுது 78,834 வாகனங்கள் உள்நாட்டிலும் 17,970 வாகனங்கள் வெளிநாட்டிலும் விற்பனையாகி இருந்தன. இதில் உள்நாட்டு விற்பனையில் 24.09 சதவீத வளர்ச்சியும் ஏற்றுமதியும் 36.5 சதவீத வளர்ச்சியையும் தற்போது பெற்றுள்ளது மொத்தமாக இந்நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 26.41 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

Suzuki 2W Sales Dec 2025

இதுவே கடந்த நவம்பர் மாத விற்பனை ஒப்பிடும்போது லேசான வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது கடந்த நவம்பர் மாதம் 1,22,300 விற்பனையாகியுள்ளன. அதைவிட டிசம்பர் மாதத்தில் வெறும் 66 வாகனங்கள் தான் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதம் 96,360 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது வெளிநாட்டுக்கு 25,940 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது ஏற்றுமதியில் 5.5 சதவீத சரிவை சந்தித்து இருந்தாலும் உள்நாட்டு விற்பனையில் 1.52 சதவீதம் விற்பனையை பெற்றுள்ளது ஒட்டுமொத்தத்தில் 0.05 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது அதன்படி இந்நிறுவனம் மொத்தம் 10, 62,167 வாகனங்களை விற்பனை செய்துள்ளது அதில் உள்நாட்டில் மட்டும் 8 ,69 ,572 வாகனங்களும் 1,92,595 வாகனங்களும் உள்ளது.

Suzuki 2W Sales Dec 2025

இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது அப்பொழுது வெறும் 9,33,608 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது அதில் உள்நாட்டில் மட்டும் 7,79, 138 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. 54,470 வாகனங்கள் ஏற்றுமதி ஆகியிருந்தன. உள்நாட்டு விற்பனையில் 11.61 சதவீத வளர்ச்சியும் ஏற்றுமதியில் 24.6 சதவீதம் வளர்ச்சியும் தற்போது பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீபகாலமாக டூவீலர் விற்பனை அதிகமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக ஜிஎஸ்டி வரி குறிப்பதற்கு பிறகு வாகனங்களின் விலை கணிசமாக குறைந்த நிலையில் மிக அதகிமாகியுள்ளது.இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையில் நல்ல வளர்ச்சியைபெற்று வருகின்றன. இது இந்த சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் உங்களுக்கு பிடித்த வாகனம் எது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Sunday, January 4, 2026, 10:57 [IST]
English summary
Suzuki 2w sales dec 2025 positive yoy mom growth
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X