ஆக்டிவாவை விட குறைவான விலை! 90 கிமீ மைலேஜ்! இந்தியாவை மிரள விட போகும் ஜப்பான் நிறுவனத்தின் தயாரிப்பு!

பைக்குகளை போல், அடிக்கடி கியரை மாற்றி கொண்டே இருக்க தேவையில்லை என்பது போன்ற காரணங்களால், இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. குறிப்பாக ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பான ஆக்ஸஸ் 125 (Suzuki Access 125) ஸ்கூட்டர், இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டுள்ளது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 70,137 சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Suzuki Access ABS

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 59,039 சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 11,098 சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர் விற்பனையில் 18.80 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters February 2026), சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகிய ஸ்கூட்டர்கள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.

Suzuki Access 125

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 82,106 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது நேரடி போட்டி மாடலான ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை விட குறைவான விலை ஆகும். ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 89,256 ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை 1,02,301 ரூபாயாக இருக்கிறது. அத்துடன் சுஸுகி நிறுவனம் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது. சுஸுகி இ ஆக்ஸஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) விலை 1,91,962 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே சுஸுகி மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இதில், சுஸுகி இ ஆக்ஸஸ் (Suzuki e-Access) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு வேளை சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதற்கு பிறகு சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது அதிக மைலேஜ் (Mileage) தரும் ஸ்கூட்டராக இருக்கும்.

அனேகமாக சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் 88-90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரின் வருகைக்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Monday, March 23, 2026, 13:49 [IST]
English summary
Suzuki access 125 sales report february 2026 19 per cent growth
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+