டிவிஎஸ், ஹோண்டாவிற்கு எமனாக மாறிய ஜப்பான் தயாரிப்பு! இனி மார்க்கெட்ல போட்டி அனல் பறக்க போறது உறுதி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access). டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125) மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Active 125) போன்ற ஸ்கூட்டர்கள் உடன், சுஸுகி ஆக்ஸஸ் போட்டியிட்டு வருகிறது.

இந்த சூழலில், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் தற்போது 2 புதிய வேரியண்ட்கள் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை ரைடு கனெக்ட் ஏபிஎஸ் எடிசன் (Ride Connect ABS Edition) மற்றும் ரைடு கனெக்ட் டிஎஃப்டி ஏபிஎஸ் எடிசன் (Ride Connect TFT ABS Edition) ஆகியவை ஆகும்.

Suzuki Access ABS

இந்த 2 வேரியண்ட்களிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரைடு கனெக்ட் ஏபிஎஸ் எடிசனின் விலை 92,328 ரூபாய் எனவும், ரைடு கனெக்ட் டிஎஃப்டி ஏபிஎஸ் எடிசனின் விலை 98,378 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் 2 வேரியண்ட்களிலும் 124 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 8.43 பிஹெச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 10.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Suzuki Access 125

இதில், ரைடு கனெக்ட் ஏபிஎஸ் எடிசன் வேரியண்ட் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். அவை மெட்டாலிக் மேட் பிளாக் நம்பர் 2, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ, பியர்ல் க்ரேஸ் ஒயிட், சாலிட் ஐஸ் க்ரீன் மற்றும் பியர்ல் ஷைனி பெய்கி ஆகியவை ஆகும்.

அதேபோல் ரைடு கனெக்ட் டிஎஃப்டி ஏபிஎஸ் எடிசன் வேரியண்ட்டும் 5 கலர் ஆப்ஷன்களில்தான் கிடைக்கும். அவை மெட்டாலிக் மேட் பிளாக் நம்பர் 2, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ, பியர்ல் க்ரேஸ் ஒயிட், சாலிட் ஐஸ் க்ரீன் மற்றும் பியர்ல் மேட் அக்வா சில்வர் ஆகியவை ஆகும்.

ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளதால், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் பாதுகாப்பு அதிகரிக்கும். இதன் மூலம் ரைடர்கள் இன்னும் அதிக நம்பிக்கையுடன் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரை இயக்க முடியும். இந்திய சந்தையில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாகதான் இருந்து வருகிறது. தற்போது ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளதால், அதன் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஏபிஎஸ் என்பது மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாகும். வாகனம் 'ஸ்கிட்' ஆகி விபத்தில் சிக்குவதை, ஏபிஎஸ் பிரேக் வசதி தடுக்கிறது. குறிப்பாக வழுக்கும் தன்மை உள்ள சாலைகளில் வாகனத்தின் ஸ்திரத்தன்மையை ஏபிஎஸ் பிரேக் வசதி மேம்படுத்துகிறது. எனவே ஏபிஎஸ் வசதியுடன் கூடிய ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் 2 புதிய வேரியண்ட்களை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 4, 2026, 15:54 [IST]
English summary
Suzuki access launched with single channel abs price colour options and more details
மேலும்... #suzuki motorcycle #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+