ஒட்டுமொத்த உலகையும் மிரள விடும் மைலேஜ்! டிவிஎஸ், ஹோண்டாவை வெடவெடத்து போக வைத்த ஜப்பான் நிறுவனத்தின் ஸ்கூட்டர்!

கார் (Car) அல்லது டூவீலர் (Two Wheeler) என எதுவானாலும், ஜப்பான் (Japan) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் சிறப்பான வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது.

Suzuki Access

இதன்படி பார்த்தால் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 69,622 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 52,180 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 17,442 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் 33.43 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers December 2025), சுஸுகி ஆக்ஸஸ் 6வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

Suzuki Access 125

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), ஹோண்டா ஷைன் (Honda Shine), டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மற்றும் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் 6வது இடத்தை பிடித்துள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரில், 124 சிசி எஸ்ஓஹெச்சி 2 வால்வு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6.2 kW பவர் மற்றும் 10.2 Nm டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

வசதிகளை (Features) பொறுத்தவரையில் கலர் டிஎஃப்டி டிஜிட்டல் கன்சோல், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், முன் பகுதியில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், முன் பகுதியில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஸன், பின் பகுதியில் ஸ்விங்ஆர்ம் சஸ்பென்ஸன் மற்றும் முன் பகுதியில் டிஸ்க் பிரேக் போன்ற அம்சங்களை எல்லாம் சுஸுகி ஆக்ஸஸ் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை வெறும் 81,607 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 97,799 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை சுஸுகி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் மாதங்களில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Suzuki e-Access Electric Scooter) டெலிவரி பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ளன. எனவேதான் இந்திய சந்தையில் வரும் மாதங்களில் சுஸுகி ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் சுஸுகி நிறுவனம் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கும் என கருதப்படுகிறது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களுக்கு மிக கடுமையான நெருக்கடி ஏற்படலாம். ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, January 25, 2026, 17:18 [IST]
English summary
Suzuki access sales report december 2025 33 43 per cent growth
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+