ஹோண்டா, டிவிஎஸ்-க்கு எமனாக மாற போகும் ஜப்பான் ஸ்கூட்டர்! 90 கிமீ மைலேஜ் குடுத்தாலும் விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகிய ஸ்கூட்டர்கள் உடன், விற்பனையில் போட்டியிட்டு வரும் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access). ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பான ஆக்ஸஸ் ஸ்கூட்டருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 72,658 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 66,362 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில 6,296 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் விற்பனையில் 9.49 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters March 2026) சுஸுகி ஆக்ஸஸ் 3வது இடத்தையும் தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் 2,59,670 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஹோண்டா ஆக்டிவா முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 1,24,771 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் டிவிஎஸ் ஜூபிடர் 2வது இடத்தை பெற்றுள்ளது. இந்த வரிசையில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் 124 சிசி 4 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6.2 kW பவரையும், 10.2 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. சுஸுகி ஆக்ஸஸ் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 82,906 ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனில் 60 Ah, 3.072 kWh திறன் உடைய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரைடிங் ரேஞ்ச் 95 கிலோ மீட்டர்கள் என சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1,91,962 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் மட்டுமே சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இதன் சிஎன்ஜி வெர்ஷனும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 90 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








