ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர் கிடையாது! இந்தியாவில் இதை செய்ய போகும் முதல் ஸ்கூட்டர் சுஸுகி ஆக்ஸஸ்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டர், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் வெறும் 75,729 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 0.06 சதவீத வீழ்ச்சி ஆகும்.
இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், சுஸுகி ஆக்ஸஸ் கூடிய விரைவிலேயே மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என்று கருதப்படுகிறது. விற்பனையில் சிறிய வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters May 2026), சுஸுகி ஆக்ஸஸ் வழக்கம் போலவே 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகிய ஸ்கூட்டர்கள் உள்ளன. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது. சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், பெட்ரோல் வெர்ஷனின் ஆரம்ப விலை 84,869 ரூபாயாக உள்ளது. மறுபக்கம் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 1,92,088 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஒரு ஸ்கூட்டர் கூட பெட்ரோல், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என 3 பவர்ட்ரெயின்களில் விற்பனை செய்யப்படுவது இல்லை. ஒரு சில கார்கள் வேண்டுமானால் இப்படி பெட்ரோல், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என 3 பவர்ட்ரெயின்கள் உடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இது போல் இந்தியாவில் பெட்ரோல், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என 3 வெர்ஷன்களில் கிடைக்கும் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை சுஸுகி ஆக்ஸஸ் பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
தற்போது பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனும் விற்பனைக்கு வரவுள்ளது. சுஸுகி நிறுவனம் தனது தாய் நாடான ஜப்பானில், ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை காட்சிப்படுத்தி விட்டது. எனவே எதிர்காலத்தில் அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் நேரடி போட்டி மாடல்களாக ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் உள்ளன. அவை இரண்டுமே 110 சிசி மற்றும் 125 சிசி என 2 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சுஸுகி ஆக்ஸஸ் 125 சிசி இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கிறது. எனவே சுஸுகி நிறுவனமும் இன்னும் விலை குறைவான 110 சிசி வெர்ஷனை அறிமுகம் செய்தால், அதன் விற்பனை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications