ஆக்டிவாவை விட குறைவான விலை! 90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்கும் ஜப்பான் நிறுவனம்!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி (Suzuki) நிறுவனத்தின் டூவீலர்களுக்கு, இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டர் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக உள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியிலும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை சுஸுகி ஆக்ஸஸ் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 69,042 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 54,587 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 14,455 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 26.48 சதவீத வளர்ச்சி ஆகும்.

Suzuki Access

ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது. சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன் மட்டுமல்லாது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters January 2026), 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகிய ஸ்கூட்டர்கள் உள்ளன. இந்த வரிசையில் 3வது இடம் பிடித்துள்ள சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை வெறும் 82,106 ரூபாயாக மட்டுமே உள்ளது.

Suzuki Access 125

இது ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆகிய ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலையை விட குறைவு ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 92,670 ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 84,800 ரூபாயாக உள்ளது.

இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரானது, இந்திய சந்தையில் ஐசி இன்ஜின் வெர்ஷனில் (பெட்ரோல்) மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சுஸுகி இ ஆக்ஸஸ் (Suzuki e-Access) என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) ஆரம்ப விலை 1,91,962 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களை போல் அல்லாமல், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் 125 சிசி வெர்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகியவை 125 சிசி வெர்ஷன் உடன் சேர்த்து, 110 சிசி வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும் சுஸுகி நிறுவனம் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 25, 2026, 11:47 [IST]
English summary
Suzuki access scooter sales report january 2026 26 per cent growth
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+