புதிய ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்திய சுஸூகி.. வசதிகள் எல்லாம் பிச்சு விட்டாங்க!

இந்தியாவில் சமீபத்தில் தான் மேம்படுத்தப்பட்ட பர்க்மன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரை வெளியிட்டது சுஸூகி. அதே கையோடு அப்படியே சர்வதேச அளவில் மற்றுமொரு புதிய ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். அது வேறெதுவும் இல்லை பர்க்மன் 125 ஸ்கூட்டரின் பெரிய வெர்ஷனான பர்க்மன் 150 தான்.

ஆம், பெரிய பர்க்மன் 150 ஸ்கூட்டர் மாடலே பர்க்மன் 15 என்ற பெயரில் தற்போது சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சுஸூகி. பெரிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை இந்தியாவில் சுஸூகி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேறொரு பெரிய இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டரை தற்போது சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சுஸூகி.

Suzuki Burgman 15

பார்த்தவுடன் இது சுஸூகி பர்க்மன் ஸ்கூட்டர் என்று சொல்லிவிடும் வகையில் ப்ரீட்சியமான டிசைன் லாங்குவேஜையே இந்தப் புதிய மேக்ஸி ஸ்கூட்டரும் கொண்டிருக்கிறது. ப்ரொஜெட்டருடன் கூடிய பெரிய LED முகப்பு விளக்கு பொட்டு வைத்தது போல முகப்புப் பக்கத்தில் நடுவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் இரண்டு பக்கமும் LED DRL-கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெரிய வைஸர் மற்றும் எக்சாஸ்ட் கொடுக்கப்பட்டிருப்பது இந்த ஸ்கூட்டரை 150 சிசிக்கும் மேலான இன்ஜினைக் கொண்டதாக இருப்பதைப் போல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பெரிய வைஸர் இருப்பதால் நெடுஞ்சாலைகளில் காற்றைக் கிழித்துச் செல்லும் போது விண்டு பிளாஸ்டில் இருந்து தப்பிக்கலாம். சீட் உயரம் வெறும் 760 மிமீ தான் என்பதால், எல்லோருமே இந்த ஸ்கூட்டரை எளிதாக ஓட்டலாம். ஆனால் எடை சற்று அதிகமாக 145 கிலோவாக இருக்கிறது.

Suzuki Burgman 15

ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய TFT டிஸ்பிளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எஸ்எம்எஸ் மற்றும் கால் அலர்ட்கள், கீலெஸ் இக்னிஷன் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட மற்றும் ப்ரீமியமான வசதிகளை இந்த 150 சிசி மேக்ஸி ஸ்கூட்டரில் கொடுத்து அசத்தியிருக்கிறது சுஸூகி. பிராக்டிகாலிட்டிக்காக 25 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது இந்த மேக்ஸி ஸ்கூட்டர்.

டூயல் சேனல் ABS மற்றும் ஸ்விட்சபிள் ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை எலெக்ட்ரானிக் அம்சங்ளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 150 சிசி ஸ்கூட்டர் என்பதால் இந்த வசதிகள் இருப்பது சிறப்பு தான். இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் செட்டப்புகள் ஆகிய மெக்கானிக்கல் அம்சங்கள் இந்த சுஸூகி ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஜினை மறந்துவிட்டோமோ. இந்த ஸ்கூட்டரில் 149 சிசி, சிங்கள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 8,500 rpm-ல் 14.2 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 14.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஐடியல் ஸ்டாப்/ ஸ்டார்ட் வசதியும் கொடுக்கப்பட்டிருப்பதால் மேக்ஸி ஸ்கூட்டராக இருந்தாலும் ஓரளவிற்கு நல்ல மைலேஜே கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடும் திட்டம் எதுவும் தற்போது வரை சுஸூகியிடம் இல்லை. அது போல எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. எனினும் இந்தியாவில் வெளியானால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் வாடிக்கையாளர்களிடம் இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே அனைத்து நிறுவனங்களும் மேக்ஸி ஸ்கூட்டர்கள் பிரிவில் குதித்து விட்டன.

ஏராக்ஸ் 155 மூலம் யமஹா, என்டார்க் 150 மூலம் டிவிஎஸ், ஸூம் 160 மூலம் ஹீரோ என பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய மேக்ஸி ஸ்கூட்டர் பயணங்களைத் தொடங்கி விட்டன. இந்த ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெறும் போது வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூட சுஸூகி நினைத்திருக்கலாம். தேவை ஏற்படும் போது இந்த மேக்ஸி ஸ்கூட்டரை சுஸூகி இந்தியாவிற்குக் கண்டிப்பாகக் கொண்டு வரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

Article Published On: Tuesday, May 19, 2026, 12:25 [IST]
English summary
Suzuki burgman 15 maxi scooter revealed overseas will it launch in india
மேலும்... #suzuki motorcycle #scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+