பாக்கதான் ஸ்கூட்டர்... ஆனா கார் மாதிரி ஹைவேஸ்ல போகலாம்... விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான மேக்ஸி ஸ்கூட்டர்களில் (Maxi Scooter) ஒன்று சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் (Suzuki Burgman Street). பொதுவாக வழக்கமான கம்யூட்டர் ஸ்கூட்டர்களில் (Commuter Scooters) தொலை தூர நெடுஞ்சாலை பயணங்களை பலரும் மேற்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் மேக்ஸி ஸ்கூட்டர்களில் தொலை தூர நெடுஞ்சாலை பயணங்களையும் சுலபமாக மேற்கொள்ள முடியும். அதற்கு ஏற்ற வகையில் சக்தி வாய்ந்த இன்ஜின் மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்க கூடிய பெரிய டயர்கள், நீளமான வீல்பேஸ் மற்றும் கனமான ஃப்ரேம்கள் ஆகியவற்றுடன் மேக்ஸி ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Suzuki Burgman Street

மேலும் வழக்கமான கம்யூட்டர் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, மேக்ஸி ஸ்கூட்டர்களில் பொருட்களை வைத்து கொள்வதற்கான இடவசதியும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அத்துடன் மேக்ஸி ஸ்கூட்டர்களில் விண்டுஷீல்டு போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுவதால், கற்கள் மற்றும் குப்பைகளால், ஓட்டுபவர்களுக்கு காயங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.

இது போன்ற காரணங்களால்தான் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் போன்ற மேக்ஸி ஸ்கூட்டர்களின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கு நன்றாக அமையவில்லை. ஆம், விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் சந்தித்துள்ளது.

Suzuki Burgman Street

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23,050 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 19,337 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இம்முறை 3,713 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 16.11 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters April 2026) சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கு 8வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள எஞ்சிய 9 ஸ்கூட்டர்களும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

ஆனால் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மட்டும் விற்பனையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் ஆகியவை ஆகும். இதில், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1.06 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1.13 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும் (Chennai Ex-showroom Price).

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு மேக்ஸி ஸ்கூட்டரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இது யமஹா ஏரோக்ஸ் (Yamaha Aerox) போன்ற மேக்ஸி ஸ்கூட்டர்களுடன் போட்டியிட்டு வருகிறது.

Article Published On: Friday, May 22, 2026, 23:11 [IST]
English summary
Suzuki burgman street sales report april 2026 16 per cent down
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+