யாரும் வாங்க போறது இல்லனு ஏளனம் செய்யப்பட்ட சுஸுகி ஸ்கூட்டர்! சைஸில் பெருசா இருந்தாலும் ஈசியா ஹேண்ட்லிங்!
சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டில் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான ஸ்கூட்டர்களை விட சற்று வித்தியாசமாக இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே இந்த சுஸுகி ஸ்கூட்டரை பலரும் ஆர்வமாக வாங்க ஆரம்பித்தனர். அது தற்போதும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் விளைவாக பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
ஜப்பானிய ஸ்டைலிலான சுஸுகி ஸ்கூட்டர்களில் உலகளவில் பல நாடுகளில் வரவேற்பை பெற்ற ஸ்கூட்டர்களுள் பர்க்மேன் ஒன்றாகும். இந்தியாவில் இருப்பதிலேயே தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்த சுஸுகி ஸ்கூட்டராக பர்க்மேன் ஸ்ட்ரீட் விளக்குகிறது. இதுவரையில், இந்தியாவில் சுமார் 14 இலட்சம் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனையில் 14 இலட்சம் என்கிற மைல்கல்லை தற்போது பர்க்மேன் ஸ்ட்ரீட் கடந்துள்ளது. துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், 14 இலட்சத்து 18 ஆயிரத்து 711 யூனிட்கள் ஆகும். உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு அதிகமாக பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகுவது இல்லை.
மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது மட்டுமின்றி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு இதுவரையில் 2.5 இலட்சத்திற்கும் அதிகமான பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் மட்டும் 40 ஆயிரத்து 853 பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஓர் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 177 பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 25.39% அதிகம் ஆகும். அதாவது, விற்பனை நான்கில் ஒரு பங்கு கூடுதலாக அதிகரித்துள்ளது. கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 19 ஆயிரத்து 337 பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், இது கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை விட 16.10% குறைவாகும். சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆனது ஓர் 125சிசி ஸ்கூட்டர் ஆகும். இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் சுஸுகி ஸ்கூட்டராக ஆக்ஸஸ் மாடலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இது உள்ளது.
இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சுஸுகி அவெனிஸ் உள்ளது. 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருடத்தில் இந்த மூன்று சுஸுகி ஸ்கூட்டர்கள் மட்டும் 11.5 இலட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் பங்களிப்பு மட்டும் ஏறக்குறைய 25% ஆகும்.
அதுவே, இந்த ஓர் ஆண்டு காலத்தில் இந்தியாவில் மொத்தம் 81.1 இலட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான ஸ்கூட்டராக 7வது இடத்தை சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு கடைசியாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி மை2026 அப்கிரேட்களை சுஸுகி வழங்கி இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 8 வருடங்களுக்குள் 14 இலட்சம் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்கள் விற்பனை என்பது ஆச்சிரியத்தை தருகிறது. ஏனெனில், ஆக்ஸஸ் போன்று இல்லாமல் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆனது ஓர் மேக்ஸி-ஸ்கூட்டர் வகையை சேர்ந்த பெரிய அளவிலான ஸ்கூட்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அப்கிரேட்களினால் வரும் மாதங்களிலும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications