இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு நாள் ஓட்டீட்டு கூட திருப்பி குடுத்தரலாம்! ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தான்யா!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) என்ற பெருமையை சுஸுகி இ ஆக்ஸஸ் (Suzuki e-Access) பெற்றுள்ளது. சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.072 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 95 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தினசரி பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்ற ரேஞ்ச் (Range) ஆக இருக்கும்.

Suzuki e-Access Side View

ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை, வெறும் 2 மணி நேரம் மற்றும் 12 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், கலர் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளே, எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படுகிறது.

Suzuki e-Access

சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி பார்த்தால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) 1,91,962 ரூபாயாக இருக்கிறது. எனவே சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனையில் சாதிக்குமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

இந்த சூழலில், சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சந்தா (Subscription) மற்றும் வாடகை (Rental) திட்டங்களை சுஸுகி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 1 நாள் முதல் 1 வருடம் வரை சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, சந்தா மற்றும் வாடகை திட்டத்தின்கீழ் எடுத்து நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதற்காக ராயல் பிரதர்ஸ் ரென்டல்ஸ் (Royal Brothers Rentals) நிறுவனத்துடன் சுஸுகி நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. தற்போதைய நிலையில் பெங்களூர், ஐதராபாத், அஹமதாபாத், விசாகப்பட்டிணம், புவனேஸ்வர், ஜெய்ப்பூர் மற்றும் குருகிராம் ஆகிய 7 நகரங்களில் மட்டுமே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் கூடிய விரைவில் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தற்போதைய நிலையில் சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மட்டுமே சந்தா மற்றும் வாடகை திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடிய விரைவில் சுஸுகி நிறுவனத்தின் மற்ற டூவீலர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறுகிய காலத்திற்கு தேவைப்படுபவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்படி உள்ளது? என்பதை பரிசோதிப்பதற்கும் கூட, இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். அதற்கு பிறகு வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவை நீங்கள் எடுக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 2, 2026, 22:59 [IST]
English summary
Suzuki e access subscription and rental plans check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+