யமஹா EC-06 vs சுஸூகி e-அக்சஸ், எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது?

மற்ற எந்த வெளிநாட்டு நிறுவனங்களை விடவும், ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் சிறப்பாகவே செயல்படும். இந்தியாவின் இருசக்கர வாகனங்களை விற்பனையில் சுஸூகி மற்றும் யமஹா ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டன.

சுஸூகி நிறுவனமானது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பரீட்சியமான பெயரில் e-அக்சஸ் (e-Access) என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. யமஹா நிறுவனமானது EC-06 என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்த EC-06 முழுவதுமாக யமஹாவின் தயாரிப்பு இல்லையென்றாலும், இது தான் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். சரி இந்த இரண்டு ஸ்கூட்டர்களில் எது சிறந்தது, எதை வாங்கலாம்?

Suzuki e-Access

விலை:

முதலில் விலையில் இருந்து தொடங்குவோம். யமஹா EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 1.68 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் நிலையில், சுஸூகி e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 1.92 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இரண்டுமே சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. விலையைப் பொறுத்தவரை யமஹா தான் வின்னர். e-அக்சஸை விட 24,000 ரூபாய் வரை குறைவான விலையைக் கொண்டுள்ளது.

எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி பேக் மற்றும் ரேஞ்சு:

யமஹா EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 169 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இதனை 8 மணி நேரத்தில் 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது யமஹா.

Yamaha EC-06

இத்துடன் 6.7 kW பவர் மற்றும் 26 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையும் EC-06 கொண்டுள்ளது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்புடன் மணிக்கு 79 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.072 kWh என்ற சிறிய பேட்டரி பேக்கையே சுஸூகி கொடுத்திருக்கிறது. 95 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையே இந்த பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி பேக்கை 0-80 சதவீதம் வரை 4.30 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிட முடியும் என சுஸூகி குறிப்பிட்டுள்ளது.

இந்த பேட்டரி பேக்குடன் 4.1 kW பவர் மற்றும் 15 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புடன் அதிகபட்சமாக மணிக்கு 71 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றுள்ளது சுஸூகி e-அக்சஸ்.

பிற அம்சங்கள்:

டிசைன் என்று பார்க்கும் போது e-அக்சஸை விட EC-06 கொஞ்சம் ப்ரீமியமான ஒன்றாக, கூலான டிசைனைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தனித்துவமான டிசைனாக இருக்கிறது. EC-06 ஸ்கூட்டரின் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருப்பதோடு, மூன்று ரைடிங் மோடுகள், ஹில்-ஹோல்டு அசிஸ்ட், 24.5 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், சிம்பிள் LCD கண்சோல் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

e-அக்சஸ் ஸ்கூட்டரில் கலர் TFT டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கீலெஸ் சிஸ்டம், ஆன்ஸர்பேக் ஃபங்ஷன், ரிவர்ஸ் மோடு, ரியர் பிரேக் லாக், டிப் ஓவர் சென்சார், முன்பக்க USB சார்ஜிங் போர்ட், மூன்று ரைடிங் மோடுகள் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது?

இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எதை வாங்குவது என்றால் கண்களை மூடிக் கொண்டு யமஹாவின் EC-06 என சொல்லிவிடலாம். e-அக்சஸ் ஸ்கூட்டரில் சுஸூகி பல்வேறு ஃபேன்ஸியான அம்சங்களைக் கொடுத்துள்ளது. ஆனால் அடிப்படை அம்சங்கள் என்று பார்க்கும் போது யமஹாவின் EC-06 ஸ்கூட்டரே பிராக்டிகலாக இருக்கிறது. ஒரு ஸ்கூட்டரில் நாம் எதிர்பார்ப்பது பிராக்டிகாலிட்டியைத் தான். அந்த வகையில் யமஹா EC-06 சரியான தேர்வாக இருக்கும். பொதுவாக மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது EC-06 நல்ல தேர்வாகவே இருக்கும்.

Article Published On: Monday, June 15, 2026, 21:54 [IST]
English summary
Suzuki e access vs yamaha ec 06 which electric scooter should you buy
மேலும்... #yamaha #suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out