சுஸுகி ஜிக்ஸர் பைக்குகளுக்கு புதிய நிறங்கள் அறிமுகம்... முழு விபரம்!

இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட பைக்குகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகள் சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், பண்டிகை காலம் நெருங்குவதையடுத்து புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வாங்க திட்டமிட்டிருப்பவர்களை கவரும் விதமாக ஜிக்ஸெர் (Gixxer) பைக் வரிசையில் உள்ள மாடல்களுக்கு புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஜிக்ஸெர் 155சிசி மாடல்கள்

சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF ஆகிய இரு மாடல்களுக்கும் மெட்டாலிக் ஓர்ட் க்ரே (Metallic Oort Gray) மற்றும் பியர்ல் பிளேஸ் ஆரஞ்ச் (Pearl Blaze Orange) என்ற புதிய வண்ணத் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஜிக்ஸெர் நேக்கட் வகை ஸ்ட்ரீட் பைக் மாடலாகவும், ஜிக்ஸெர் SF முழுமையான ஃபேரிங் அமைப்புடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. இரண்டு மாடல்களிலும் சிங்கிள் சிலண்டர் கொண்ட 155சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது 13.6 பிஎச்பி பவரையும் 13.8 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

ஜிக்ஸெர் 250சிசி மாடல்கள்

சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் SF 250 ஆகிய மாடல்களிலும் புதிய வண்ணத் தேர்வுகள் வந்துள்ளன. இதன்படி, க்ளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் (Glass Sparkle Black) என்ற வண்ணத் தேர்வும், மெட்டாலிக் ஓர்ட் க்ரே (Metallic Oort Gray) என்ற புதிய இரட்டை வண்ணத் தேர்வும் கொடுக்கப்படுகின்றன.

இந்த இரண்டு பைக்குகளிலுமே 250சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த எஞ்சின் 26 பிஎச்பி பவரையும் மற்றும் 22.2 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜிக்ஸெர் SF 250 பைக்கில் Flex Fuel மாடலுக்கும் புதிய வண்ணத் தேர்வுகள் கிடைத்துள்ளன. இந்த மாடலுக்கு க்ளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் (Glass Sparkle Black) மற்றும் மெட்டாலிக் ஓர்ட் க்ரே (Metallic Oort Gray) ஆகிய வண்ணக் கலவையுடன், தனியாக க்ளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் என்ற நிறமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த Flex Fuel மாடல் 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் எஞ்சின் 27.5 பிஎச்பி பவரையும் 22.5 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

விலை விபரம்

சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளில் புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டாலும், விலையில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. ஜிக்ஸெர் பைக் ரூ.1.37 லட்சத்திலும், ஜிக்ஸெர் SF மாடல் ரூ.1.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

அதேபோன்று, ஜிக்ஸெர் 250 பைக்கிற்கு ரூ.1.84 லட்சமும், ஜிக்ஸெர் SF 250 மாடல் ரூ.1.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஜிக்ஸர் SF 250 (Flex Fuel) மாடலின் ஆரம்ப விலை ரூ.1.98 லட்சமாக இருக்கிறது.

புதிய நிறங்களுடன் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சுஸுகி சில சலுகைகளையும் வழங்குகிறது. ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF மாடல்களுக்கு ரூ.1,500 வரை சேமிப்பு பலன்களும், 250cc மாடல்களுக்கு ரூ.3,000 வரை சேமிப்புச் சலுகைகளும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக் மாடல்களை தேர்வு செய்பவர்களுக்கு இந்த புதிய வண்ணத் தேர்வுகள் நிச்சயம் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.

Article Published On: Friday, September 11, 2026, 15:01 [IST]
English summary
Suzuki gixxer gixxer sf 250 new colour options price specifications
மேலும்... #suzuki motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out