வேற எந்த பைக்கும் வேண்டாம்.. இதை மட்டும் குடுங்க போதும்.. அசத்தும் சுஸூகி பைக்!
இந்தியாவில் உயர்ரக பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் சில நிறுவனங்களில் சுஸூகியும் ஒன்று. அக்சல் மற்றும் பர்க்மன் என ஸ்கூட்டர்களைப் போலவே சுஸூகியின் உயர்ரக பைக்குகளும் தனித்துவமானவை, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவை. அதில் அதிக விலை கொண்ட பைக் மாடல் ஒன்று இந்தியாவில் இதுவரை எப்போது இல்லாத வகையிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது மூன்று உயர்ரக பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது சுஸூகி. ஒன்று GSX-8R, மற்ற இரண்டு, V-ஸ்டார்ம் 800DE மற்றும் ஹயபூஸா ஆகிய பைக் மாடல்கள் ஆகும். இங்கே நாம் பார்க்கவிருப்பது ஹயபூஸா (Hayabusa) பைக் மாடலைப் பற்றித் தான்.

இந்தியாவில் பல்வேறு பைக் தயாரிப்பு நிறுவனங்களும் உயர்ரக பைக் மாடல்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், இந்த ஹயபூஸா பைக் மட்டும் பார்த்தவுடனே நீங்கள் கண்டுபிடித்து விடும் வகையில் மிகவும் தனித்துவமான டிசனைக் கொண்டிருக்கும். இதனாலேயே இந்த பைக்கை வாங்க வேண்டும் என்பது பலரது கனவாகவுமே இருந்து வருகிறது.
இந்த ஹயபூஸா பைக் மாடலை ரூ.18.06 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது சுஸூகி. கடந்த 2026ம் நிதியாண்டில் சுமார் 543 ஹயபூஸா பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து அசத்தியிருக்கிறது சுஸூகி. இதுதான் இதுவரை ஓரே நிதியாண்டில் இந்த பைக்கின் அதிகபட்ச விற்பனை அளவாகும்.

2025ம் நிதியாண்டில் 511 ஹயபூஸா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதற்கு முன்னர் 296 யூனிட்டுகள் மற்றும் 274 யூனிட்டுகள் என விற்பனை அளவு குறைவாகவே இருந்திருக்கிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் அதிகபட்சமாக 130 யூனிட்டுகள் வரை ஹயபூஸா பைக்குகளை விற்பனை செய்துள்ளது சுஸூகி. அந்த மாதம் தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை மாற்றியது மத்திய அரசு.
350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்களின் விலைகள் உயரக்கூடும் என்ற தகவலையடுத்து அதிகளவிலான ஹயபூஸா பைக்குகள் அந்த மாதம் விற்பனையாகியிருந்திருக்கின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மாற்றத்திற்கு பின்பு இந்த பைக் மாடலின் விலை ரூ.1.16 லட்சம் வரை உயர்ந்திருக்கிறது. அதற்கு முன்னர் ரூ.16.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையே கொண்டிருந்திருக்கிறது.
1000 சிசி முதல் 1600 சிசி வரையிலான பைக் பிரிவில் ஹயபூஸாவே அதிகம் விற்பனை செய்யப்படும் பைக் மாடலாக இருந்து வருகிறது. இந்தப் பிரிவில் சுமார் 49% விற்பனைப் பங்குகளைக் கொண்டிருக்கிறது ஹயபூஸா. BMW, கேடிஎம், கவாஸாகி, டுகாட்டி, ஹோண்டா எனப் பல்வேறு நிறுவனங்களும் 1000 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்களை விற்பனை செய்து வருகின்றன. அவற்றிற்கு மத்தியில் சுஸூகியின் இந்த ஹயபூஸாவே அதிகம் விற்பனையாகும் ஒரு பைக் மாடலாக இருந்து வருகிறது.
இந்தியாவில் விற்பனையாகும் இரண்டு 1000 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்களில் ஒன்று ஹயபூஸாவாக இருக்கிறது. இதனைக் கொண்ட இந்த பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பைப் பெற்ற ஒன்றாக இருக்கிறது என்பதனை நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்த பைக்கின் சிறப்பம்சங்களை அடுத்து பார்க்கலாம்.
சுஸூகி ஹயபூஸா சிறப்பம்சங்கள்:
இந்த சூப்பர் பைக் மாடலில் 1340 சிசி, இன்-லைன் ஃபோர் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொடுத்திருக்கிறது சுஸூகி. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 190 hp பவர் மற்றும் 142 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
பைக்கின் முன்பக்கம் பிரெம்போ ஸ்டைலமா, 4 பிஸ்டர், ட்வின் டிஸ்க் மற்றும் பின்பக்கம் நிஸ்ஸின், சிங்கிள் பிஸ்டன், சிங்கிள் டிஸ்க் பிரேக்கிங் சிஸ்டம் இரண்டு பக்கமும் ABS வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 10 நிலைகளிலான ட்ராக்ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், ஆண்டி லிஃப்ட் கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்பீடு லிமிட்டர், க்விக் ஷிப்டர் உள்ளிட்ட மேம்பட்ட எலெக்ட்ரானிக் அம்சங்கள், IMU கண்காணிப்புடன் செயல்படும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மணிக்கு 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.6 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டிருக்கும் இந்த பைக்கானது, அதிகபட்சமாக மணிக்கு 299 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இது எலெக்ட்ரானிக்கலாகக் கட்டுப்படுத்தப்பட்ட வேகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 லிட்டர் எரிபொருள் டேங்குடன் இந்த பைக் 266 கிலோ எடையையும் கொண்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறப்பான பெர்ஃபாமன்ஸ் கொண்ட 1000 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் வேண்டும் என்றால், ஹயபூஸாவை விட சிறப்பான தேர்வு இருந்து விட முடியாது. இன்ஜின் பெர்ஃபாமன்ஸைக் கடந்து, அந்த இன்ஜினில் இருந்து எல்லா வகையிலும், எல்லா நேரங்களிலும் பெறும் வகையிலான எலெக்ட்ரானிக் அம்சங்களை இந்த பைக் கொண்டிருக்கிறது.
இதனால் எந்த விதமான பயணங்களிலும் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய முடியும். விலை உயர்ந்த பைக் என்றாலும், கொடுக்கும் விலைக்கேற்ற தரமான சூப்பர் பைக்காக சுஸூகி ஹயபூஸா இருந்து வருகிறது. இதனால் தான் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கப்படும் ஒரு சூப்பர் பைக் மாடலாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








