20 வருஷம் போனதே தெரியல... ஜப்பான் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான நாடாக மாறிய இந்தியா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து லரும் டூவீலர் நிறுவனங்களில் ஒன்று சுஸுகி (Suzuki). ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது 2 தசாப்தங்களை நிறைவு செய்துள்ளது. சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2006ம் ஆண்டு நுழைந்தது.

இந்திய சந்தையில் சுஸுகி நிறுவனம் முதன் முதலில் ஹீட் 125 (Heat 125) மற்றும் ஜூயஸ் 125 (Zeus 125) ஆகிய 2 பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சரியாக அதற்கு ஒரு வருடம் கழித்து, சுஸுகி நிறுவனம் ஆக்ஸஸ் 125 (Suzuki Access 125) ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

Suzuki Access

இது இந்திய சந்தையில் தற்போது மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை சுஸுகி நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு அடுத்தபடியாக சுஸுகி நிறுவனம் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்திய சந்தையில் இந்த இடைப்பட்ட 20 ஆண்டுகளில், சுஸுகி நிறுவனம் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் (Suzuki Burgman Street) மற்றும் சுஸுகி அவ்னிஸ் (Suzuki Avenis) ஆகிய ஸ்கூட்டர்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அத்துடன் சுஸுகி நிறுவனம் ஏராளமான பைக்குகளையும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Suzuki Access ABS

இதில், சுஸுகி ஜிக்ஸர் (Suzuki Gixxer), சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் (Suzuki V-Strom SX), சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa), சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-8ஆர் (Suzuki GSX-8R) மற்றும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் 800 டிஇ (Suzuki V-Strom 800 DE) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அதே நேரத்தில் இந்திய சந்தையில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லை சுஸுகி நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு கடந்தது. அதை தொடர்ந்து 50 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல் 2020ம் ஆண்டு கடக்கப்பட்டது. இதன் உச்சமாக 1 கோடி வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லை சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு எட்டியது.

இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்படும் டூவீலர்களை சுஸுகி நிறுவனம் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்வதில்லை. கூடவே இந்தியாவில் இருந்து 77 நாடுகளுக்கு சுஸுகி நிறுவனம் அவற்றை ஏற்றுமதியும் செய்கிறது. எனவே சுஸுகி நிறுவனத்தின் மிக முக்கியமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகவும் இந்தியா திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அதன் காரணமாகவே இந்திய சந்தையில் சுஸுகி மிகவும் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

எதிர்காலத்தில் இந்திய சந்தையில் சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் சுஸுகி நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு கிலோவிற்கு 90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதுதான் இதற்கு காரணம்.

Article Corrections

கடைசி பத்தி சேர்க்கப்பட்டுள்ளது.
Article Published On: Friday, April 24, 2026, 12:57 [IST]
English summary
Suzuki motorcycle completes 2 decades in india check all details here
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+