புதிய ஜிக்ஸெர் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சுஸுகி! இந்த முறையும் வெற்றி நிச்சயம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) நிறுவனம் பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிராஃபிக்ஸ் உடன் 2026 ஜிக்ஸர் 250 (Gixxer 250) மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் 250 (SF 250) பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அப்டேட், பைக்குகளின் தோற்ற அழகை மேம்படுத்துவதோடு, அவற்றின் நிரூபிக்கப்பட்ட இயந்திர செயல்திறனையும் தக்கவைத்துள்ளது.

அதிக பேனல்கள் உடன் முழு-ஃபேர்டு (Full-faired) கொண்ட ஜிக்ஸர் எஸ்எஃப் 250, தற்போது பளபளப்பான ஸ்பார்க்கிள் கருப்பு மற்றும் பியர்ல் கிளேசியர் வெள்ளை/ மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர் நம்பர்-2 ஆகிய புதிய நிறங்களில் கிடைக்கிறது. அதேநேரம், ஏற்கனவே உள்ள மெட்டாலிக் ட்ரைட்டான் நீலம்/ பியர்ல் கிளேசியர் வெள்ளை கலர் ஆப்ஷனும் தொடர்கிறது.

suzuki motorcycle launches new gixxer

பேனல்கள் இல்லாத நேக்கட் மோட்டார்சைக்கிளான ஜிக்ஸர் 250 பைக்கிற்கு பியர்ல் கிளேசியர் வெள்ளை/ மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர் நம்பர்-2, மெட்டாலிக் ட்ரைட்டான் நீலம்/ பளபளப்பான ஸ்பார்க்கிள் கருப்பு, பளபளப்பான ஸ்பார்க்கிள் கருப்பு என மூன்று புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய கலர் ஆப்ஷன்களினால் இரு பைக்குகளும் முன்பை விட ஷார்ப்பான, ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றுள்ளன.

இரு பைக்குகளுக்கும் 249சிசி, ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் SOHC என்ஜின் இயக்க ஆற்றலை அளிக்கிறது. இது 9,300 ஆர்பிஎம்-இல் 26.5 பிஎஸ் ஆற்றலையும், 7,300 ஆர்பிஎம்-இல் 22.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

suzuki motorcycle launches new gixxer

சுஸுகியின் இகோ பெர்ஃபார்மன்ஸ் (SEP) மற்றும் ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS) தொழில்நுட்பங்கள் என்ஜின் சிஸ்டத்தின் சீரான ஆற்றல் வெளியீடு, வலுவான செயல்திறன், மேம்பட்ட எரிபொருள் திறன் மற்றும் நீடித்த ஆயுளை உறுதி செய்கின்றன. ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்டர் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சமாக இந்த ஜிக்ஸெர் பைக்குகளில் உள்ளன.

ஜிக்ஸர் 250 பைக்குகள், உறுதியான அதேநேரம் எடை குறைவான சேஸிஸ் மீது கட்டமைக்கப்படுகின்றன. இது சமநிலையான ஹேண்ட்லிங் மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது. முன்புற டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புற ஸ்விங்-ஆர்ம் உள்ளிட்டவை இந்த பைக்குகளின் சஸ்பென்ஷனை கையாளுகின்றன. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

suzuki motorcycle launches new gixxer

அலாய் சக்கரங்களில் முன்புறம் 110/70 R17 அளவுள்ள டயர்களும், பின்புறம் 150/60 அளவுள்ள 17-இன்ச் டயர்களும் உள்ளன. இவை சிறந்த பிடிமானத்தையும், நம்பிக்கையான பயண அனுபவத்தையும் அளிக்கின்றன. ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்கின் நீளம் 2,010 மிமீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,345 மிமீ ஆகும்.

ஜிக்ஸர் 250 பைக்கின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,340 மிமீ. இரு பைக்குகளிலும் தரையில் இருந்து இருக்கை உயரம் 800 மிமீ, பைக்கின் அடிப்பகுதியின் உயரம் (Ground clearance) 165 மிமீ ஆகும். இவை தினசரி மற்றும் நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு ஏற்றவை.

suzuki motorcycle launches new gixxer

ஜிக்ஸர் 250 பைக்கின் எடை 156 கிலோ, ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக்கின் எடை 161 கிலோ ஆகும். இரு பைக்குகளும் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் வருகின்றன. ஃபுல்-எல்இடி விளக்குகள், சுஸுகி ரைடு கனெக்ட் வசதி கொண்ட புளூடூத் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், புதிய 10-ஸ்போக் அலாய் சக்கரங்கள் மற்றும் சுஸுகி ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி ஜிக்ஸர் 250 விலை ரூ.1,81,517 மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் 250 விலை ரூ.1,89,768 (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த இரு பைக்குகளுக்கும் சலுகைகள் உண்டு. ஜிக்ஸர் 250-க்கு ரூ.10,000 வரையிலும், எஸ்எஃப் 250-க்கு ரூ.12,000 வரையிலும் காப்பீட்டு சலுகைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டியை சுஸுகி தற்சமயம் வழங்குவதால், இந்த பண்டிகை காலத்தில் இது புதிய ஜிக்ஸெர் பைக்குகளை வாங்குவதற்கு ஏற்ற நேரமாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 16, 2026, 9:36 [IST]
English summary
Suzuki motorcycle launches new gixxer 250 and sf250 bikes check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X