சுஸூகி இந்தியாவில் காட்சிப்படுத்திய புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடல்.. எப்போது வெளியாகிறது தெரியுமா?

மும்பையில் மட்சுரி என்ற நிகழ்வை நடத்தியிருக்கிறது சுஸூகி. தங்களுடைய பைக் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்யவும், சுஸூகியின் இருசக்கர வாகங்களைக் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவும் இந்த நிகழ்வில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏப்ரல் 12ம் தேதியன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்நிறுவவனம் புதிதாக அறிமுகப்படுத்திய பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கே பிரதான இடம் வழங்கப்பட்டிருந்தது.

இதில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத மற்றொரு அம்சத்தையும் செய்திருந்தது சுஸூகி. அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் பெரிய இன்ஜின் கொண்ட பர்க்மன் 400 ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியிருந்தது. வெளிநாடுகளில் மட்டுமே சுஸூகி விற்பனை செய்து வரும் இந்த ஸ்கூட்டர் மாடல முதல் முறையாக இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 12) தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Suzuki Burgman 400

புதிய பர்க்மன் 400 ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் நேரடியாக பார்வையிடும் வாய்ப்பை அளிப்பதோடு, இந்த பெரிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் குறித்து வாடிக்கையாளர்கள் கருத்துக்களையும் இந்த நிகழ்வில் சுஸூகி நேரடியாகப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் இந்த பெரிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் வெளியிடலாமா, வேண்டாமா என்ற முடிவை அந்நிறுவனம் எடுக்கலாம்.

ஏப்ரிலியாவின் SR 175 ஸ்கூட்டர் தான் மாஸ் மார்க்கெட் பிரிவில் தற்போது பெரிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டராக இருந்து வருகிறது. அதனை விட்டால் BMW-வின் C 400 GT ஸ்கூட்டர் இருக்கிறது. அதிக பெர்ஃபாமன்ஸ் மற்றும் அதிக விலை கொண்ட சொகுசு ஸ்கூட்டர் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த BMW ஸ்கூட்டர். ஹோண்டா நிறுவனம் இடையில் சில காலம் மட்டும் ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட X-ADV 750 என்ற அட்வென்சர் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனை செய்தது.

Suzuki Burgman 400 Scooter

150 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களுக்கு தற்சமயம் இந்தியாவில் சிறப்பான ரெக்கார்டு இல்லை. எனவே வாடிக்கையாளர்களின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ள இந்த 400 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் மாடலினை இந்தியாவில் காட்சிப்படுத்தியிருக்கிறது சுஸூகி. இதனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுமா இல்லையா என்பது விரைவில் நமக்குத் தெரியவரும்.

இந்த ஸ்கூட்டரில் 400 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின், CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 30 hp பவர் மற்றும் 36 Nm டார்க்கைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் பவர் மற்றும் டார்க் லே-எண்டிலேயே குறைவான rpm-லேயே கிடைப்பது தான்.

இது தவிர இந்த ஸ்கூட்டரில் டூயல் LED முகப்பு விளக்குகள், ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், டூயல் சேனல் ஏபிஎஸ், கூடுதல் பாதுகாப்பிற்காக மூன்று டிஸ்க் பிரேக்குகள் கொண்ட செட்டப், 15 இன்ச் வீல்கள், லிங்க் வகை பின்பக்க சஸ்பென்ஷன் ப்ரீலோடு அட்ஜஸ்ட்மென்ட் வசதியுடன், அனலாக் டயல்களுடன் கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கூட்டர்கள் என்றாலே குறைவான தூரம் பயன்படுத்தும் வகையான வாகனங்கள் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களிடம் இருக்கிறது. ஆனால் இந்த பர்க்மன் 400 ஸ்கூட்டரை நீண்ட தூர ரைடிங்குகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கியிருக்கிறது சுஸூகி. பெரிய பாடி, சொகுசான சீட்கள், ரிலாக்ஸ்டான ரைடிங் பொசிஷன், நிலையான பெர்ஃபாமன்ஸ் என அனைத்துமே நீண்ட தூரப் பயன்பாட்டிற்கும் மிகவும் ஏற்றவையாக இருக்கின்றன.

வெளிநாடுகளில் இந்த ஸ்கூட்டர் மாடலை இந்திய மதிப்பிற்கு ரூ.7.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது சுஸூகி. இந்தியாவில் 350 சிசி இன்ஜின் கொண்ட BMW-வின் C 400 GT ஸ்கூட்டருக்குப் போட்டியாக இது இருக்கும். இந்த BMW ஸ்கூட்டர் மாடலானது இந்தியாவில் ரூ.10.83 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பர்க்மன் 400 ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட சுஸூகி திட்டமிட்டு, அதனை இந்தியாவிலும் தயாரிக்கத் முடிவு செய்தால் சற்று குறைவாக ரூ.5 லட்சத்தை ஒட்டிய விலையில் இந்த ஸ்கூட்டரின் விற்பனையை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், சுஸூகி என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வந்தால் நீங்க வாங்குவீங்களா?

More from DriveSpark

Article Published On: Monday, April 13, 2026, 10:13 [IST]
English summary
Suzuki showcases burgman 400 scooter in matsuri event held at mumbai
மேலும்... #suzuki motorcycle #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+