அதிக மைலேஜ் கொடுக்கும் தரமான பைக்கை அப்டேட் செய்யும் நிறுவனம்.. இன்னும் அதிக வசதிகளோட!

சுஸூகி என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருவது ஸ்கூட்டர்கள் தான். ஆனால் அந்நிறுவனம் இந்தியாவில் பைக்குகளையும் விற்பனை செய்கிறது என்பதை நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோம். அதனை நினைவுபடுத்துவதற்காகவே இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஜிக்ஸர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்யத் திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

இந்தியாவில் ஜிக்ஸர் சீரிஸின் கீழ் ஐந்து பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது சுஸூகி, ஜிக்ஸர் 150, ஜிக்ஸர் SF 150, ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 மற்றும் ஜிக்ஸர் SF 250 FFV. இதில் SF என்பது ஸ்போர்ட்டியான ஃபேரிங் கொண்ட டிசைனைக் குறிக்கிறது.

Suzuki Gixxer

FFV என்பது ஃப்ளெக்ஸ் ஃப்யூஸ் வெஹிக்கிள் என்பதன் சுருக்கமாக இருக்கிறது. இந்த FFV பைக்கில் E20 முதல் E85 வரையிலான எரிபொருள்களை நாம் பயன்படுத்த முடியும். E85 என்பது 85% எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது E20 பெட்ரோலே இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கிறது.

இந்த பைக் மாடல்களை பிரதானமாக சுஸூகி அப்டேட் செய்து பல வருடங்கள் ஆகி விட்டது. இதனை பைக்கை பார்க்கும் போதும் நாம் உணர முடிகிறது. இதனால் இப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த பைக் மாடல்களை சுஸூகி அப்டேட் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Suzuki Gixxer SF 150

புதிய பைக் மாடல்களில் TFT டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன், க்ரிப்பியான டயர்கள், கோல்டன் நிறத்திலான USD ஃபோர்க் சஸ்பென்ஷன், LED விளக்குகள் ஆகிய அம்சங்களைக் கொடுத்து சுஸூகி அப்டேட் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன மற்ற சில மேம்பட்ட அம்சங்களையும் கூட சுஸூகி கொடுக்கலாம்.

கடந்த ஆண்டு அக்சஸ் 125 ஸ்கூட்டரையும், இந்தாண்டு பர்க்மன் 125 ஸ்கூட்டரையும் அப்டேட் செய்தது சுஸூகி. இரண்டு ஸ்கூட்டர்களிலும் ஸ்கூட்டரின் அடிப்படைக் கட்டுமானம் மற்றும் இன்ஜின் உட்புறத்தையும் மேம்படுத்தியது சுஸூகி. பயடுத்தும் போது ஸ்மூத்தாகவும், ஸ்டேபிளாகவும் இருக்க இந்த மேம்பாடுகளைச் செய்தது சுஸூகி. அதே போன்ற அப்டேட்களை புதிய பைக்குகளிலும் அந்நிறுவனம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு மேம்படுத்தப்பட்ட ஜிக்ஸர் பைக் மாடல்களை சுஸூகியிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். தற்போது விற்பனையில் இருக்கும் ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF ஆகிய பைக் மாடல்களில், 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 13.4 hp பவர் மற்றும் 13.8 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் SF 250 பைக் மாடல்களில், 249 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 26.1 hp பவர் மற்றும் 22.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேம்படுத்தப்படும் புதிய பைக்கின் பவர் மற்றும் டார்க் அளவுகளில் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிக்ஸர் பைக் மாடலானது இப்போது ரூ.1.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஜிக்ஸர் SF பைக் மாடலானது ரூ.1.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜிக்ஸர் 250 பைக் மாடலானது ரூ.1.81 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், ஜிக்ஸர் SF 250 ரூ.1.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்படும் புதிய பைக் மாடல்கள் இவற்றை விட சற்று கூடுதல் விலையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தான் இது குறித்த தகவல்கள் கசியத தொடங்கியிருக்கின்றன. இந்த 2026ம் ஆண்டின் இறுதியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட பைக்குகளின் வெளியீடு இருக்கலாம் எனத் தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 150 சிசி மற்றும் 250 சிசி பிரிவில் சிறப்பான பைக் மாடல்களாகவே இந்த ஜிக்ஸர் 150 மற்றும் ஜிக்ஸர் 250 பைக் மாடல்கள் இருக்கின்றன. பட்ஜெட் விலையில், அதே நேரம் நல்ல பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜைக் கொடுப்பவையாக இந்த பைக்குகள் இருக்கின்றன. இந்தியாவில் அப்பாச்சி மற்றும் பல்சர் 150 சிசி மற்றும் 200 சிசி பைக்குகளுக்குப் போட்டியாக இந்த ஜிக்ஸர் பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 16, 2026, 10:03 [IST]
English summary
Suzuki to update gixxer and gixxer sf bike models in india soon check all details here
மேலும்... #suzuki #bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+