யமஹா R15-க்குப் போட்டியாக புதிய பைக்கை வெளியிடுகிறதா சுஸூகி?

சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை செய்து வரும் 250 சிசி பைக் GXR250R. இந்த பைக்கை விரைவில் அப்டேட் செய்யவுள்ளது அந்நிறுவனம். அப்டேட் செய்யப்படும் புதிய பைக் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. புதிய பைக்கில் என்னென்ன மாற்றங்களை சுஸூகி செய்யவுள்ளது? இந்த 250 சிசி பைக் இந்தியாவில் வெளியிடப்படுமா? என்பதையெல்லாம் இங்கே நாம் பார்க்கலாம்.

இந்த GSX250R பைக்கை இந்தியாவில் சுஸூகி விற்பனை செய்து வரும் ஜிக்ஸர் 250 பைக்குடன் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஒன்று சிங்கிள் சிலிண்டர் பைக், இன்னொன்று ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக். இரண்டுமே மற்றிலும் வேறு வேறான பைக்குகள். வாங்க இந்த GSX250R பைக் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

Suzuki GSX250R

புதிய அப்டேட்டாக பைக்கின் இன்ஜினையே மேம்படுத்தவுள்ளது சுஸூகி. யமஹாவின் R15 பைக்கில் இருக்கும் வேரியபிள் வால்வு ஆக்சுவேசன் (VVA) அம்சத்தைப் போலவே, புதி. GSX250R பைக்கில் வேரியபிள் வால்வு டைமிங் (VVT) என்ற அம்சத்தை வழங்கவுள்ளது சுஸூகி. இதன் காரணமாக இன்ஜின் பவர் 25 hp-யில் இருந்து 4.2 hp வரை, 29.2 hp-யாக உயரவுள்ளது. டார்க்கில் எந்த மாற்றமும் இருக்காது. அதே 23.2 Nm தான்.

இந்த பைக்கில் 248 சிசி, பேரலல் ட்வின், லிக்விட்-கூல்டு இன்ஜினை சுஸூகி பயன்படுத்தி வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜிக்ஸர் SF 250 பைக்கானது 249 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜினையே கொண்டுள்ளது. எனவே பெர்ஃபாமன்ஸில் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் GSX250R பைக் பன்மடங்கு சிறந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Suzuki GSX250R

இந்த இன்ஜின் மேம்பாட்டுடன், புதிய பைக்கின் முகப்பு விளக்கு செட்டப், சுற்றியிருக்கும் ஃபேரிங் ஆகியவற்றை புதிய வடிவில் மாற்றியிருப்பதோடு, இன்டிகேட்டர்கள் இருந்த இடத்தில் விங்லெட்களைக் கொடுத்து, இன்டிகேட்டர்களை ஃபேரிங்கில் சற்று உயர்த்தி வைத்திருக்கிறது. மேலும், முந்தைய LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்குப் பதிலாக, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சத்துடன் கூடிய புதிய TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும் புதிய பைக்கில் சுஸூகி கொடுக்கவுள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்டப் பல்வேறு நாடுகளில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டாலும் இந்தியாவிற்கு இதுவரை இந்த பைக் வரவில்லை. வருவதற்கு வாய்ப்பும் இல்லை. விலை உயர்ந்த ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்குகளுக்கான மாஸ் மார்க்கெட் சந்தை இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை. எனவே தான் 250 சிசியிலேயே சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட ஜிக்ஸர் மற்றும் V-ஸ்டார்ம் பைக்குகளை சுஸூகி இங்கே விற்பனை செய்து வருகிறது.

ஜிக்ஸர் பைக்குகளைப் பற்றி பேசும் போது தான் ஞாபகம் வருகிறது, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் நான்கு ஜிக்ஸர் சீரிஸ் பைக்குகளையும் (150 சிசி மற்றும் 250 சிசி) சுஸூகி விரைவில் அப்டேட் செய்யவுள்ளது. 2019ல் வெளியிடப்பட்டதில் இருந்தே பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமலேயே இந்த பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே பெரிய அளவில் இவற்றை தற்போது அப்டேட் செய்ய சுஸூகி முடிவெடுத்திருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகியின் ஜிக்ஸர் சீரிஸ் பைக்குகளுக்கே இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இத்தனைக்கும் மிகவும் குறைவான விலையிலேயே இந்த பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சுஸூகியை இந்தியாவில் காப்பாற்றி வருவது அதன் அக்சஸ் 125 ஸ்கூட்டர் தான். எனவே ட்வின் சிலிண்டரை பைக்கை இந்தியாவிற்குக் கொண்டு வருவது குறித்து சுஸூகி நிறுவனம் கனவிலும் யோசிக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

Article Published On: Monday, June 29, 2026, 11:00 [IST]
English summary
Suzuki to update gsx250r sportbike with new features and powerful engine
மேலும்... #suzuki #bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out