ஸ்விக்கி ஆப்பில் ஹீரோ பைக்குகளை வாங்குவதற்கு டெலிவிரி பார்ட்னர்களுக்கு புதிய வசதி!

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பல ஆண்டுகளாகத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், தற்போது தனது வர்த்தக எல்லைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளது. இதன்படி, நாட்டின் முன்னணி உணவு மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கியுடன் (Swiggy) கைகோர்த்துள்ளது. இதன்மூலமாக ஸ்விக்கி டெலிவிரி பார்ட்னர்கள் எளிதாக ஹீரோ பைக்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ஷோரூம்கள் வழியாக மட்டும் பைக்குகளை விற்பனை செய்து வந்த பாரம்பரிய முறையைத் தாண்டி, தற்போது நேரடியாக ஸ்விக்கி ஆப் மூலமாக அதன் டெலிவரி பார்ட்னர்களிடம் தனது பைக்குகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த புதிய வர்த்தக யுக்தியை ஹீரோ கொண்டு வந்துள்ளது.

Hero Flexi Fuel Bikes

சிறப்பு சலுகை மற்றும் நிதியுதவி

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களின் இந்த கூட்டணியின் மூலமாக உணவு மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவிரி செய்யும் ஸ்விக்கி டெலிவிரி பார்ட்னர்கள் தங்களின் ஸ்விக்கி ஆப் மூலமாகவே தங்களுக்குப் பிடித்த ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகனங்களை தேர்வு செய்து கொள்ள முடியும். ஸ்விக்கி ஆப் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் இணையதளங்களுக்கு இடையே செய்யப்பட்டுள்ள ஏபிஐ (API) இணைப்பு மூலம் இந்தச் செயல்முறை மிக எளிமையாக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தை தேர்வு செய்யும் டெலிவிரி பார்ட்னர்கள் தங்களது அருகாமையிலுள்ள ஹீரோ மோட்டோகார்ப் ஷோரூம்கள் மூலமாக வாகனத்தை டெலிவிரி பெற முடியும். அத்துடன், வாகனத்தின் விலையில் 90 சதவீதம் வரை கடன் உதவி (90% LTV Financing) மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் சுலபமான தவணை முறைகள் வழங்கப்படுகின்றன.

பைக் வாங்க விரும்பும் டெலிவரி ஊழியர்கள் ஆப் மூலம் பதிவு செய்துவிட்டு, அருகிலுள்ள ஹீரோ ஷோரூமிற்குச் சென்று மிக விரைவாகச் சொந்தமாக ஒரு பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். அத்துடன், சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளையும் ஸ்விக்கி டெலிவிரி பார்ட்னர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் வழங்குகிறது.

Also Read

வர்த்தக வாய்ப்பு

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கிக் எகானமி (Gig Economy) எனப்படும் விரைவு டெலிவரி துறை அபார வளர்ச்சி அடைந்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் ஸ்விக்கி, ஸோமாட்டோ போன்ற நிறுவனங்களில் தினமும் பல நூறு கிலோமீட்டர்கள் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.

பொதுவாக, ஒரு தனிநபர் பைக் வாங்குவதை விட, தினமும் பல மணிநேரம் சாலையில் இயங்கும் ஒரு டெலிவரி பார்ட்னருக்கு நம்பகமான, அதிக மைலேஜ் தரும் இருசக்கர வாகனம் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இதைச் சரியாகக் கணித்த ஹீரோ மோட்டோகார்ப் தற்போது ஸ்விக்கி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன்மூலமாக ஹீரோவின் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க விற்பனை எண்ணிக்கையை கூடுதலாக வழங்கும்.

மேலும், ஹீரோவின் எச்எஃப் டீலக்ஸ் 100, கிளாமர், சூப்பர் ஸ்பிளெண்டர் போன்ற கம்யூட்டர் பைக்குகளுக்கு சீரான மற்றும் நிலையான விற்பனை உறுதி செய்யப்படுகிறது. மேலும், பைக் வாங்குவதற்கான கடன் வசதியையும் எளிதாக்குவதன் மூலம், பொருளாதார ரீதியாகச் சவால்களைச் சந்திக்கும் டெலிவரி ஊழியர்களை உடனடியாக வாடிக்கையாளர்களாக மாற்றும் வாய்ப்பை ஹீரோ பெற்றுள்ளது.

கடும் நெருக்கடி

நாட்டின் இருசக்கர வாகன விற்பனையில் நம்பர்-1 இடத்தில் இருந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு சமீப காலகமா ஹோண்டா மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்கள் மூலமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, தான் இழந்த அந்த முதலிடத்தை மீண்டும் பிடிப்பதற்கு இவ்வாறான பல்வேறு வியாபார நடைமுறைகளை ஹீரோ மோட்டோகார்ப் மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, ஹீரோ குழுமத்தின் அங்கமான ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரூ.1,000 கோடி மதிப்பிலான ஐபிஓ (IPO) பொதுப் பங்குகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐபிஓ செப்டம்பர் 16 அன்று தொடங்கி செப்டம்பர் 18 வரை முதலீட்டாளர்களின் சந்தாவிற்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Wednesday, September 16, 2026, 12:07 [IST]
English summary
Swiggy app hero motocorp bikes special financing for delivery partners
மேலும்... #hero motocorp
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out