இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 10 பைக்குகள் இவை தான்

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் குறித்த பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்த மாதம் எந்தெந்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

முதலிடத்தில் வழக்கம் போல ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே இருக்கிறது. கடந்த மே மாதம் மட்டும் 3.48 லட்சம் யூனிட்டுகள் வரை இந்த கம்யூட்டர் பைக் விற்பனையாகியிருக்கிறது. கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 12.17 சதவீதம் வரை இந்த பைக்கின் விற்பனை உயர்ந்தும் இருக்கிறது.

Honda Activa

இரண்டாவது இடத்தில் ஹோண்டாவின் ஸ்கூட்டரான ஆக்டிவா இருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் இரண்டாவது இருசக்கர வாகனமாகவும், முதல் ஸ்கூட்டராகவும் ஆக்டிவா இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 2.28 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது ஹோண்டா. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 20 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும்.

மூன்றாவது இடத்தில் ஸ்பிளெண்டருக்குப் போட்டியாக ஹோண்டா விற்பனை செய்து வரும் ஷைன் கம்யூட்டர் பைக் இருக்கிறது. இந்த பைக் 1.55 லட்சம் யூனிட்டுகள் வரை கடந்த மே மாதம் விற்பனையாகியிருக்கிறது. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 1.27 சதவீதம் விற்பனை குறைவாகும்.

TVS Jupiter

நான்காம் இடத்தில் டிவிஎஸ்ஸின் ஸ்கூட்டர் மாடலான ஜூப்பிட்டர் இருக்கிறது. டிவிஎஸ்ஸியம் நிறைய கம்யூட்டர் பைக்குகள் இருக்கும் போதிலும், ஜூப்பிட்டர் ஸ்கூட்டரே அதன் அதிகம் விற்பனையாகும் ஒரு வாகனமாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் 1.24 லட்சம் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது டிவிஎஸ். இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 27 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும்.

ஐந்தாம் இடத்தில் பஜாஜ் பல்சர் இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு வடிவங்களாக அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் நிறைய பல்சர் பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த பல்சர் பைக்குகள் 1.24 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை விட சில நூறு யூனிட்டுகளே குறைவு. விற்பனை வளர்ச்சி 1.73 சதவீதம் தான்.

ஆறாம் இடத்தில் சுஸூகியின் அக்சஸ் ஸ்கூட்டர் இருக்கிறது. இந்த கிளாஸியான ஸ்கூட்டர் மாடலானது கடந்த மே மாதம் 75,729 யூனிட்டுகள் வரை இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மே மாதம் 49 யூனிட்டுகள் மட்டும் குறைவாக விற்பனையாகியிருக்கிறது அக்சஸ்.

ஏழாம் இடத்தில் ஹீரோ HF டீலக்ஸ் பைக் இருக்கிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் இரண்டாவது ஹீரோ பைக் இது. கடந்த மே மாதம் 66,722 யூனிட்டுகள் வரை இந்த கம்யூட்டர் பைக்கை விற்பனை செய்துள்ளது ஹீரோ. கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 38 சதவீதம் வரை விற்பனை வீழச்சியை சந்தித்துள்ளது இந்த கம்யூட்டர் பைக். கடந்தாண்டு மேயில் 1 லட்சம் யூனிட்டுகளுக்கும் மேலாக இந்த பைக் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எட்டாம், ஒன்பது மற்றும் பத்து ஆகிய மூன்று இடங்களிலும் டிவிஎஸ் வாகனங்களே இருக்கின்றன. மூன்று இடங்களிலும் முறையே அப்பாச்சி, XL100 மற்றும் ஐக்யூப் ஆகிய மூன்று விதமான இருசக்கர வாகனங்கள் இடம்பிடித்துள்ளன. அப்பாச்சி பைக்கானது 53,900 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கும் நிலையில், XL100 மற்றும் ஐக்யூப் ஆகியவை முறையே 48,569 யூனிட்டுகள் மற்றும் 42,192 யூனிட்டுகள் வரை கடந்த மே மாதம் விற்பனையாகியுள்ளன. இந்த இரண்டு வாகனங்களும் முறையே 30 சதவீதம் மற்றும் 52 சதவீதம் விற்பனை வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பைக்குகளை விட ஸ்கூட்டர்களின் விற்பனை வளர்ச்சியே அதிகமாக இருந்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் நிறைய வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை வாங்க முன்வருவதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கிறது. வரும் ஆண்டுகளில் பைக்குகளுக்கு இணையான அளவில் ஸ்கூட்டர்களும் விற்பனையாகத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, June 18, 2026, 9:07 [IST]
English summary
These are the top 10 bikes and scooters that people brought most last month
மேலும்... #bikes #scooters #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out