தெரியாம இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கி விட்டீர்களா? நீங்கள் எதிர்பார்க்கும் 3 பைக்குகள்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் என்றாலே மார்க்கெட்டில் ஹிட் அடித்தவை என்றுதான் நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் சில ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மக்கள் மத்தியில் கவனத்தை பெறாமலும் போய் உள்ளன. அவ்வாறான ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் ஒன்றுதான், மீட்டியோர் 350 ஆகும். RE நிறுவனத்தின் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளான இது, முதல்முறையாக எடைமிக்க ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டிப் பழகுவதற்கு ஏற்ற பைக் ஆகும்.
இருப்பினும், மற்ற 350சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இணையாக இதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட புதியதில் ஓரளவிற்கு கிடைத்த போதிலும், அதன்பின் மீட்டியோர் 350 பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்தது. இப்போதும் இந்த பைக்கின் விற்பனை சுமாராகவே உள்ளது.

இந்தியாவில் பொதுவாகவே க்ரூஸர் பைக்குகளுக்கு பெரிய அளவிற்கு மார்க்கெட்டில் இல்லை. இதனாலேயே ராயல் என்ஃபீல்டு போன்ற முன்னணி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்ட போதிலும் மீட்டியோர் 350 அதிகளவில் விற்பனையாகவில்லை. இந்த பைக்கை வாங்கலாம் என யோசித்து வருகிறீர்களா அல்லது ஏற்கனவே வாங்கி பயன்படுத்தி அதற்கு பதிலாக வேறொன்றை வாங்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே வேறு மூன்று க்ரூஸர் பைக்குகள் இதோ...
கவாஸாகி எலிமினேட்டர் (Kawasaki Eliminitor)
மீட்டியோர் 350 போன்று கிளாசிக் தோற்றத்தில் இல்லாமல், மாடர்ன் தோற்றத்தில் க்ரூஸர் பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த கவாஸாகி பைக் ஏற்றதாக இருக்கும். மேலும், மாடர்ன் தோற்றத்திற்கேற்ப இதன் எடை குறைவு மற்றும் விலை அதிகமாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் சுமார் ரூ.6.16 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

இருப்பினும், ஒரு பக்காவான க்ரூஸர் பைக்கை குறைந்த விலையில் எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்றதாகும். இந்த பைக்கில் வழங்கப்படும் 451சிசி லிக்யுடு-கூல்டு இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 45 பிஎச்பி மற்றும் 42.6 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650)
பைக்கின் பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இது மீட்டியோர் 350 பைக்கின் சூப்பர் வெர்சன் ஆகும். ராயல் என்ஃபீல்டு பிராண்டில் இருந்து மாறாமல் அதற்குள்ளாகவே சிறந்த க்ரூஸர் பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்றது. மீட்டியோர் 350 பைக்கை போன்று கிளாசிக்கான ரெட்ரோ தோற்றத்தில் உருவாக்கப்படும் இந்த பைக்கில் 648சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 46.3 பிஎச்பி மற்றும் 52.3 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் ஆனது மென்மையான இயக்கத்தையும், நெடுஞ்சாலை பயணங்களில் மகிழ்ச்சியான பயணத்தையும் வழங்கக்கூடியதாக உள்ளது. இதற்கேற்ப, தரையில் இருந்து வெறும் 740மிமீ உயரத்தில் தாழ்வாக ரைடர் இருக்கை வழங்கப்படுவதால், முன்னால் கால்களை நீட்டிக் கொண்டு நன்கு சவுகரியமாக அமர்ந்தபடி இந்த பைக்கை ஓட்டலாம்.
கவாஸாகி வல்கன் எஸ் (Kawasaki Vulcan S)
கூடுதல் செலவு செய்து க்ரூஸர் பைக்கை வாங்க தயாராக இருப்பவர்கள் இந்த கவாஸாகி பைக்கை ட்ரை செய்துப் பார்க்கலாம். இந்த பைக்கிலும் 649சிசி 2-சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படுகிறது என்றாலும், இதில் வழங்கப்படுவது லிக்யுடு-கூல்டு என்ஜின் ஆகும். சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை காட்டிலும் அதிகமாக 59.9 பிஎச்பி மற்றும் 62.4 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இதன் என்ஜின் உள்ளது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் புது, புது ஸ்டைலில் பைக்குகள் வந்தாலும், க்ரூஸர் பைக்குகளை ஓட்டுவதே தனி சுகம் என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் இந்தியர்களை பெரியதாக கவராமல் போய்விட்டது. இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள மூன்று பைக்குகளும் மீட்டியோர் 350-ஐ காட்டிலும் பவர்ஃபுல்லான என்ஜினைக் கொண்டவை ஆகும். ஆதலால், குறைந்த விலையில் க்ரூஸர் பைக்கை வாங்க விரும்புபவர்களுக்கு இப்போதும் நாங்கள் பரிந்துரைப்பது மீட்டியோர் 350 ஆகும்.


Click it and Unblock the Notifications