அதிக மைலேஜ் தரும் 125 சிசி ஸ்கூட்டர் இது தான்.. கண்ணை மூடிட்டு வாங்கலாம்!

ஸ்கூட்டர்களை பிராக்டிகாலிட்டிக்காக மட்டுமில்லாமல் மைலேஜுக்கும் சேர்த்து தான் வாங்குவோம். சுஸூகி இந்தியாவில் பல்வேறு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதில் ஒரு ஸ்கூட்டரை சமீபத்தில் தான் அப்டேட் செய்தது. அது வேறெதுவும் இல்லை பர்க்மன ஸ்ட்ரீட் 125 தான். அப்டேட் செய்யப்பட்ட 125 சிசி ஸ்கூட்டரான பர்க்மன் ஸ்ட்ரீட் தினசரி பயன்பாட்டின் போது எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

பர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் மைலேஜ் அளவு குறித்து பார்க்கும் முன்பு இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜின் குறித்த தகவல்களைப் பார்த்து விடலாம். இந்த ஸ்கூட்டரில் 124 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 8.5 hp பவர் மற்றும் 10.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Suzuki Burgman Steet 125

பர்க்மன் ஸ்கூட்டரின் இந்த 125 சிசி இன்ஜினானது சராசரியாக லிட்டருக்கு 50 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. மிகவும் நெரிசலான நகரச் சாலைகளில் சில கிமீ குறைவாகவும், நெரிசல் இல்லாத நேரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சில கிமீ அதிகமாகவும் இருக்கலாம். ஆனால் சராசரியாக 50 கிமீ வரையிலான மைலேஜை நாம் பெறலாம். இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் பலரும் இந்த மைலேஜ் அளவு சராசரியாகக் கிடைப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தான் பல்வேறு புதிய மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த பர்க்மன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரை அப்டேட் செய்தது சுஸூகி. தற்போது ரைடு கனெக்ட் எடிஷன் மற்றும் ரைடு கனெக்ட் TFT எடிஷன் என இரண்டு வேரியன்ட்களாக மட்டுமே இந்த 125 சிசி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரைடு கனெக்ட் எடிஷனானது 1.02 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், ரைடு கனெக்ட் TFT எடிஷனானது 1.13 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளது.

Suzuki Burgman Street 125

125 சிசி பிரிவில் மேக்ஸி ஸ்கூட்டர் போலான தனித்துவமான டிசைனைக் கொண்டிருக்கும் ஒரு ஸ்கூட்டராக இந்த பர்க்மன் ஸ்ட்ரீட் 125 இருக்கிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் விலை சற்று அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ப ப்ரீமியமான வசதிகளை இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. குறிப்பாக டாப் எண்டு வேரியன்டில் 4.2 இன்ச் TFT டிஸ்பிளே, சுஸூகி ரைடு கனெக்ட் செயலி மூலமாக ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

குறிப்பாக சாவியை ஸ்கூட்டரில் செருகாமலேயே பயன்படுத்தும் வகையிலான கீலெஸ் இக்னிஷன் வசதியை தங்களது இந்திய லைன்-அப்பில் முதல் முறையாக பர்க்மன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரிலேயே சுஸூகி கொடுத்திருக்கிறது. இதுதவிர USB சார்ஜிங் போர்ட், ஆன்ஸர் பேக் ஃபங்ஷன், இன்ஜின் ஸ்டாப்/ ஸ்டார்ட் சிஸ்டம், 24.6 லிட்டர் அண்டர்ஸீட் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளையும் இந்த பர்க்மன் ஸ்ட்ரீட் 125 கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் நல்ல மைலேஜ் கொடுக்கக்கூடிய, ப்ரீமியமான வசதிகளுடன் மேக்ஸி ஸ்கூட்டர் போன்ற லுக்கைக் கொண்ட ஒரு 125 சிசி ஸ்கூட்டராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது சுஸூகி பர்க்மன் ஸ்ட்ரீட் 125. இதன் மூலம் தனக்கென தனி வாடிக்கையாளர்கள் வட்டத்தையும் இந்த பர்க்மன் ஸ்கூட்டர் உருவாக்கியிருக்கிறது. 2018ல் வெளியானதில் இருந்து இப்போது வரை சுமார் 14 லட்சம் பர்க்மன் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய 125 சிசி ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்கள் கண்களை மூடிக் கொண்டு இந்த பர்க்மன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரை வாங்கலாம். என்ன விலை தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும், மற்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது. ஆனால் அந்த விலைக்கு நியாயம் சேர்க்கவும் செய்கிறது சுஸூகி பர்க்மன். மைலேஜும் சிறப்பாகக் கொடுக்கும் போது வேறு என்ன வேண்டும் நமக்கு.

Article Published On: Wednesday, May 20, 2026, 13:59 [IST]
English summary
This is suzuki burgman street 125 scooter s real world mileage
மேலும்... #suzuki motorcycle #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+