242 கிமீ ரேஞ்சு தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஆனால் விலை ரொம்ப ரொம்ப கம்மி.. எவ்வளவு தெரியுமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் போது அனைத்து வாடிக்கையாளர்களும் முக்கியமாகப் பார்க்கும் ஒன்று அல்லது பார்க்க வேண்டிய ஒன்று ரேஞ்சு. குறைவான விலையில் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் பெரும்பான்மை வாடிக்கையாளர்களின் தேடலாக இருக்கும். அப்படியான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

நீண்ட நாட்களாக ஓலா லைம் லைட்டில் இல்லாமலேயே இருந்தது. காரணம் அந்நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட ஏராளமான குற்றச்சாட்டுகளும், ஓலாவின் சர்வீஸில் இருந்த குறைபாடுகளும் தான். தற்போது அவற்றை அந்நிறுவனம் சரி செய்து வரும் நிலையில், அந்நிறுவனம் குறைவான விலையில் விற்பனை செய்து வரும், ஆனால் அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.

Ola S1 Pro

இந்தியாவில் S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால் அதனையே பல்வேறு வசதிகள் மற்றும் பேட்டரி பேக் தேர்வுகள் கொண்ட காம்போவுடன் அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

X, X+, ப்ரோ மற்றும் ப்ரோ+ எனப் பல்வேறு வேரியன்ட்களாக ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நாம் இப்போது பார்க்கப் போவது S1 X வேரியன்டைத் தான். அதிலும் குறிப்பாக 4 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் மாடலைத் தான். இது தான் நாம் கேட்பது போல அதிக ரேஞ்சு மற்றும் குறைவான விலையைக் கொண்டிருக்கிறது.

Ola S1 X

'ஓலா S1 X 4 kWh' வேரியன்டானது 242 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சுடன், 1.14 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறெந்த நிறுவனமும் இவ்வளவு குறைவான விலையில், இவ்வளவு அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்யவில்லை. சர்வீஸ் சிறப்பாக இருந்து, ஓலாவின் நிறைய குற்றச்சாட்டுகள் வரவில்லை என்றால் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை ஓலாவே ஆண்டு கொண்டிருக்கும். மற்ற நிறுவனங்கள் அதன் அருகில் கூட நெருங்கியிருக்க முடியாது.

ஆனால் விரைவிலேயே மீண்டும் ஓலா கம்பேக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிகுறிகளை அதன் விற்பனையில் நாம் பார்க்க முடிகிறது. ஓராண்டிற்கும மேலாக ஓலாவின் விற்பனை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே விரைவில் ஒரு பெரிய கம்பேக்கை ஓலாவிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.

சரி இப்போது நாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்கூட்டருக்கு வருவோம். குறைவான விலையில் அதிக ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய ஸ்கூட்டர் இது தான். 180 கிமீ முதல் 200 கிமீ வரையிலான உண்மையான மைலேஜை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நாம் எதிர்பார்க்கலாம். இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 750 W போர்டபிள் சார்ஜையும் கொடுக்கிறது ஓலா. இதன் மூலம் 80 சதவீதம் வரை 4.50 மணி நேரத்தில் நாம் சார்ஜ் செய்துவிட முடியும்.

அதிகபட்சமாக மணிக்கு 123 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. பேட்டரி மற்றும் பெர்ஃபாமன்ஸை திறம்பட நிர்வகிப்பதற்காக ஸ்போர்ட், நார்மல் மற்றம் எக்கோ என மூன்று ரைடிங் மோடுகள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 113 கிலோ எடையும் அனைத்து தரப்பினரும் எளிதாக கையாளும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே இந்த S1 X இருக்கும்.

இன்னும் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்யலாம் என்றால் S1 X+ 4 kWh வேரியன்டைத் தேர்வு செய்யலாம். 1.19 லட்சம் விலையுடன் இதே 242 கிமீ ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்டும் கொண்டிருக்கிறது. மேலும், நாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப சில கூடுதல் அம்சங்களையும் நாம் பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னருடன் ஒப்பிடும் போது ஓலாவின் சர்வீஸ் செண்டர் இப்போது மேம்பட்டிருப்பதாகவே தெரிகிறது. உங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே ஓலாவின் நம்பகமான சர்வீஸ் செண்டர் இருக்கும் பட்சத்தில் இந்த வேரியன்டை வாங்குவதை குறித்து பரிசீலனை செய்யலாம். ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யும் முன்பு சர்வீஸ் செண்டரை நேரடியாக செக் செய்வது சிறப்பு.

Article Published On: Friday, June 5, 2026, 20:09 [IST]
English summary
This low price ola electric scooter gives more range than any other electric scooter
மேலும்... #ola #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out