விற்பனையில் கலக்கும் டாப்-10 ஸ்கூட்டர்களில் 3 எலக்ட்ரிக் மாடல்கள்... இந்திய சந்தையில் மாறும் டிரெண்ட்!

ஓட்டுவதற்கு எளிதாக இருப்பதாலும், குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதாலும் இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் போன்ற பெட்ரோல் மாடல்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வேகமாக முன்னேறி வருகின்றன. அதற்கு ஜூன் 2026 விற்பனை புள்ளிவிவரங்களே சிறந்த உதாரணமாக அமைந்துள்ளன. முதல் ஐந்து இடங்களுக்குள் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடம்பிடித்திருப்பது, இந்த சந்தையில் உருவாகி வரும் புதிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

எட்டாத உயரத்தில் ஆக்டிவா

வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஜூன் 2026 விற்பனைக்காக அனுப்பிய (Wholesale Dispatch) தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், ஜூன் மாதத்தில் ஹோண்டா ஆக்டிவா 2,18,932 யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் 1,36,805 யூனிட்களுடன் உள்ளது. தொடர்ந்து சுஸுகி அக்ஸெஸ் 63,121 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த மூன்று மாடல்களும் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான தேவை இன்னும் குறையவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

Top selling scooters india

வேகமாக முன்னேறும் இ ஸ்கூட்டர்கள்

ஆனால் இந்த பட்டியலில் அதிக கவனம் ஈர்த்திருப்பது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன்னேற்றம்தான். மிக முக்கியமான நான்காவது இடத்தில் 47,331 யூனிட்கள் விற்பனையுடன் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து ஐந்தாவது இடத்திலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான். இந்த ஐந்தாவது இடத்தை பஜாஜ் சேத்தக் 40,376 யூனிட்கள் விற்பனையுடன் பிடித்து அசத்தி இருக்கிறது.

கலக்கும் டிவிஎஸ் ஐக்யூப்

குறிப்பாக டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வளர்ச்சி கவனம் ஈர்க்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த மாடல் 232 சதவீத ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேபோல் பஜாஜ் சேத்தக்கும் மூன்று இலக்க ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இனி மாற்று தேர்வாக இல்லாமல் பல வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் மாறி வருவதை இந்த விற்பனை எண்ணிக்கைகள் காட்டுகின்றன.

டாப்-10 பட்டியலில் டிவிஎஸ் என்டார்க், ஏதர் ரிஸ்டா, யமஹா ரே இசட்ஆர், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் ஹீரோ டெஸ்டினி 125 ஆகிய மாடல்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் குடும்ப பயன்பாடு, ஸ்போர்ட்டி ரைடிங், பிரீமியம் மற்றும் எலக்ட்ரிக் என அனைத்து வகை ஸ்கூட்டர்களுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பது தெளிவாகிறது.

இந்த பட்டியல் சொல்லும் மிக முக்கியமான விஷயம் ஒன்றுதான். பெட்ரோல் ஸ்கூட்டர்களின் சந்தை இன்னும் வலுவாக இருந்தாலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வளர்ச்சியை இனி புறக்கணிக்க முடியாது. குறிப்பாக டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் ரிஸ்டா போன்ற மாடல்கள் தொடர்ந்து அதிக விற்பனையை பதிவு செய்து வருவதால், அடுத்த சில மாதங்களில் டாப்-5 பட்டியலிலேயே எலக்ட்ரிக் மாடல்களின் பங்கு மேலும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ரேங்க் மாடல் ஜூன் 2026
மொத்த விற்பனை*
1 Honda Activa 2,18,932
2 TVS Jupiter 1,36,805
3 Suzuki Access 63,121
4 TVS iQube 47,331
5 Bajaj Chetak 40,376
6 TVS Ntorq 31,381
7 Ather Rizta 28,951
8 Yamaha RayZR 17,514
9 Suzuki Burgman Street 17,082
10 Hero Destini 125 15,917

*இந்த எண்ணிக்கைகள் வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்ட ஜூன் 2026 மொத்த விற்பனை (Wholesale Dispatch) தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு டாப்-10 ஸ்கூட்டர் பட்டியலில் ஒரு எலக்ட்ரிக் மாடல் இடம்பெறுவதுதான் பெரிய விஷயமாக இருந்தது. இன்று மூன்று EV ஸ்கூட்டர் மாடல்கள் டாப்-10 பட்டியலில் உள்ளன. அதே நேரத்தில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் போன்ற பெட்ரோல் மாடல்கள் இன்னும் மிகப்பெரிய விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இதனால், இந்திய ஸ்கூட்டர் சந்தை தற்போது "பெட்ரோல் vs எலெக்ட்ரிக்" என்ற போட்டி கட்டத்தை கடந்து தற்போது இரண்டுக்கும் வலுவான தேவை உள்ள சமநிலை சந்தையாக மாறி வருவதை ஜூன் மாத விற்பனை தரவுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. வரும் காலத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சந்தைப் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உறுதியாகிறது.

Via- Autopunditz

Article Published On: Monday, July 27, 2026, 14:23 [IST]
English summary
Top 10 best selling scooters india june 2026 activa jupiter iqube bajaj chetak
மேலும்... #tvs motor #electric scooter #top 10
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out