ஜூன் 2026-ல் இந்தியாவில் அதிகம் விற்ற 10 இருசக்கர வாகனங்கள்.. நம்பர்-1 யார்?

இந்திய இருசக்கர வாகன சந்தை தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தேவை, எளிதான நிதி வசதிகள் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கான குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை விற்பனையை உயர்த்த முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த நிலையில், கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்கள் மற்றும் எவ்வளவு யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் VAHAN வாகனப் பதிவு தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட சில்லறை விற்பனை விவரங்களின்படி, பைக் மற்றும் ஸ்கூட்டர் பிரிவுகளில் ஹீரோ, ஹோண்டா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது. குறிப்பாக ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா, ஹோண்டா ஷைன் மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகிய மாடல்கள் தொடர்ந்து வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளன.

Bike Scooter Sales

1. ஹீரோ ஸ்பிளெண்டர்

வழக்கம்போல் கடந்த ஜூனிலும் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்தான் விற்பனையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் மொத்தம் 3,53,024 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. அதிக மைலேஜ், எளிதான கையாளுமையுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த பைக்கில் 97.2சிசி ஏர்-கூல்டு இன்ஜின் உள்ளது.இந்த கம்யூட்டர் வகை பைக்கில் i3S தொழில்நுட்பம் இருப்பதால் சிக்னலில் நிற்கும்போது இன்ஜின் தானாக அணைந்து எரிபொருளை மிச்சப்படுத்தும். LED DRL இரவு நேரத்தில் காட்சித்திறனை மேம்படுத்துகிறது. டிஜிட்டல் LCD மீட்டர் எரிபொருள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெளிவாக காட்டுகிறது.

2. ஹோண்டா ஆக்டிவா

ஸ்கூட்டர் பிரிவில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் ஹோண்டா ஆக்டிவா, கடந்த ஜூன் மாதத்தில் 2,18,932 யூனிட்டுகள் விற்பனையாகி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவமைப்பு, நம்பகமான இன்ஜின் மற்றும் சிறந்த மறுவிற்பனை மதிப்பு ஆகியவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதில் 109.51சிசி PGM-FI ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. Honda Smart Key வசதி மூலமாக சாவி (Smart FOB) உங்கள் பாக்கெட்டிலோ அல்லது பையிலோ இருந்தாலே போதும்; அதை இக்னிஷனில் சொருக வேண்டிய அவசியமில்லை. அடுத்து Idling Stop System வசதி மூலமாக தேவையில்லாத நேரங்களில் இன்ஜினை அணைத்து எரிபொருளை சேமிக்க உதவுகிறது. Silent Start ACG மோட்டார் சத்தமின்றி இன்ஜினை இயக்கும் வசதியை வழங்குகிறது.

3. ஹோண்டா ஷைன்

125சிசி கம்யூட்டர் பைக் பிரிவில் தொடர்ந்து வலுவான இடத்தை தக்க வைத்துள்ள ஹோண்டா ஷைன், கடந்த ஜூன் மாதத்தில் 1,67,572 யூனிட்டுகள் விற்பனையாகி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மென்மையான ஓட்டுதல் அனுபவம், சீரான செயல்திறன், நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இதன் பலமாக உள்ளன. இதில் 123.94சிசி PGM-FI இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ESP (Enhanced Smart Power) தொழில்நுட்பம் சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜை வழங்குகிறது. இந்த பைக்கில் Silent Start வசதி சத்தமின்றி இன்ஜினை இயக்க உதவுகிறது. Side Stand Engine Cut-off பாதுகாப்பை அதிகரிக்கிறது.

4. டிவிஎஸ் ஜூபிடர்

ஹோண்டா ஆக்டிவாவுக்கு கடுமையான போட்டியை கொடுத்து வரும் டிவிஎஸ் ஜூபிடர், கடந்த மாதம் 1,36,683 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. வசதியான இருக்கை, அதிக ஸ்டோரேஜ் மற்றும் குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் இதன் பிரபலத்திற்கு காரணமாக உள்ளன. இதில் 113.3சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. iGO Assist தொழில்நுட்பம் மேம்பாலங்கள் மற்றும் ஏற்றங்களில் கூடுதல் இழுவிசையை வழங்குகிறது. 33 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்களை எளிதாக வைக்க உதவுகிறது. வெளிப்புற பெட்ரோல் நிரப்பும் வசதி சீட்டை திறக்காமல் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கிறது.

5. பஜாஜ் பல்சர்

இளைஞர்களின் விருப்பமான ஸ்போர்ட்டி மோட்டார்சைக்கிளாக இருக்கும் பல்சர் வரிசை, கடந்த ஜூன் மாதத்தில் 1,18,463 யூனிட்டுகள் விற்பனையாகி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. பல்வேறு இன்ஜின் தேர்வுகள் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகும். பல்சர் வரிசை 125சிசி முதல் 400சிசி வரை பல இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. LED Projector Headlamp இரவில் சிறந்த வெளிச்சத்தை வழங்குகிறது. USD Front Fork அதிக நிலைத்தன்மை மற்றும் சிறந்த ஹேண்ட்லிங்கை வழங்குகிறது. Bluetooth Digital Console அழைப்புகள் மற்றும் வழிகாட்டல் தகவல்களை திரையில் காட்டுகிறது.

6. சுசுகி ஆக்சஸ் 125

125சிசி ஸ்கூட்டர் பிரிவில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சுசுகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர், கடந்த மாதம் 74,568 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. மென்மையான இன்ஜின், நல்ல மைலேஜ் மற்றும் வசதியான ரைடிங் அனுபவம் இதன் பலமாக உள்ளது. இதில் 124சிசி SEP இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. Ride Connect Bluetooth வசதி மூலம் மொபைலை இணைக்க முடியும். External Fuel Lid எரிபொருள் நிரப்புவதை எளிதாக்குகிறது. Engine Start/Stop Switch நகர்ப்புற போக்குவரத்தில் எரிபொருளை சேமிக்க உதவுகிறது.

7. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் காரணமாக கிராமப்புற சந்தைகளில் அதிக வரவேற்பைப் பெற்று வரும் ஹீரோ HF டீலக்ஸ், கடந்த ஜூன் மாதத்தில் 65,931 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதில் 97.2சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. i3S தொழில்நுட்பம் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துகிறது. Side Stand Engine Cut-off பாதுகாப்பை உறுதி செய்கிறது. டியூப்லெஸ் டயர்கள் பஞ்சரானாலும் பாதுகாப்பாக பயணிக்க உதவுகின்றன.

8. டிவிஎஸ் அப்பாச்சி

பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் தொடர்ந்து வலுவான விற்பனையை பதிவு செய்து வரும் டிவிஎஸ் அப்பாச்சி வரிசை, கடந்த மாதம் 58,330 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. செயல்திறன், ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இதன் பலமாக உள்ளன. அப்பாச்சி வரிசை 160சிசி முதல் 310சிசி வரை பல இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. Ride Modes சாலை நிலைக்கு ஏற்ப செயல்திறனை மாற்ற உதவுகின்றன. SmartXonnect மொபைல் கனெக்டிவிட்டி வசதியை வழங்குகிறது. Dual Channel ABS திடீர் பிரேக்கிங்கின்போது பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

9. டிவிஎஸ் XL100

சிறு வியாபாரிகள் மற்றும் கிராமப்புற பயன்பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் டிவிஎஸ் XL100, கடந்த ஜூன் மாதத்தில் 47,902 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. அதிக சுமைகளை சுலபமாக எடுத்துச் செல்லும் திறன் இதன் மிகப்பெரிய பலமாகும். இதில் 99.7சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ETFi தொழில்நுட்பம் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. அதிக சுமை தாங்கும் திறன் வணிக பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது. Electric Start தினசரி பயன்பாட்டை மேலும் எளிதாக்குகிறது.

10. டிவிஎஸ் ரைடர்

125சிசி பிரிவில் இளைஞர்களின் விருப்பமான மாடலாக மாறியுள்ள டிவிஎஸ் ரைடர். கடந்த ஜூன் மாதத்தில் 44,601 யூனிட்டுகள் விற்பனையாகி டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஸ்டைலான வடிவமைப்பு, நல்ல செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இதன் பிரபலத்திற்கு காரணமாக உள்ளன. இதில் 124.8சிசி 3-வால்வு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. Eco மற்றும் Power Ride Modes தேவைக்கேற்ப செயல்திறனை மாற்ற உதவுகின்றன. SmartXonnect TFT Display வழிகாட்டல் மற்றும் அழைப்பு தகவல்களை காட்டுகிறது. ISG (Integrated Starter Generator) சத்தமின்றி இன்ஜினை இயக்கி, மென்மையான ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது.

சந்தையில் என்ன மாற்றம்?

ஜூன் மாத விற்பனை பட்டியலைப் பார்க்கும்போது, 100சிசி கம்யூட்டர் பைக்குகள் மற்றும் குடும்ப பயன்பாட்டுக்கான ஸ்கூட்டர்கள்தான் இன்னும் இந்திய சந்தையை ஆட்சி செய்கின்றன என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், 125சிசி மற்றும் பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. VAHAN பதிவு தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து

இந்த பட்டியலில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை என்றாலும், ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஆகிய இரு மாடல்களின் ஆதிக்கம் இன்னும் தொடர்கிறது. அதே நேரத்தில், டிவிஎஸ் ஜூபிடர், அபாச்சி, ரைடர் போன்ற மாடல்கள் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயல்திறன் காரணமாக தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மைலேஜ் மட்டுமல்லாமல், பாதுகாப்பு, கனெக்டிவிட்டி மற்றும் வசதிகளையும் இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது முக்கியமாகக் கருதத் தொடங்கியிருப்பதை இந்த பட்டியல் தெளிவாக காட்டுகிறது.

Article Published On: Tuesday, July 21, 2026, 16:03 [IST]
English summary
Top 10 best selling two wheelers india june 2026 vahan retail sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out