ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான டாப் 10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்... நம்பர்-1 இடத்தை பிடித்தது யார்?

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்திலும் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இடையே போட்டா போட்டி நிலவுகிறது. முன்னணி நிறுவனங்களின் பிரபலமான மாடல்களுடன், சமீபத்தில் அறிமுகமான ஸ்கூட்டர்களும் குறிப்பிடத்தக்க விற்பனையை பதிவு செய்துள்ளன.

விலை, ரேஞ்ச், விற்பனைக்கு பிந்தைய சேவை உள்ளிட்ட அனைத்து விதங்களிலும் சில மாடல்கள் சிறப்பாக இருப்பதால், அதன் விற்பனையும் பெரிய அளவில் உள்ளது தெரிய வருகிறது. இதில், வாடிக்கையாளர்களின் அதிக ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Bajaj Chetak

1. பஜாஜ் சேத்தக்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 52,248 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 14,014 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது சேத்தக் விற்பனை 273 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டை விட 38,234 யூனிட்டுகள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.

Also Read

2. டிவிஎஸ் ஐக்யூப்

கடந்த மாதம் டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 42,882 யூனிட்டுகள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 24,434 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விற்பனை 75 சதவீதம் அதிகரித்துள்ளது. சேத்தக் ஸ்கூட்டரும், ஐக்யூப் ஸ்கூட்டரும் விற்பனையில் மிக அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. இரண்டும் இணைந்து 95,130 யூனிட்கள் விற்பனையாகி, பட்டியலின் மொத்த விற்பனையில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்கியுள்ளது.

Hero Vida

3. ஹீரோ விடா

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 25,558 யூனிட்டுகள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 12,273 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 108 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் விற்பனை இரட்டிப்பு எண்ணிக்கையை தாண்டியுள்ளது. வலுவான விற்பனையுடன் ஹீரோ விடா ஸ்கூட்டர்கள் டாப்-3 பட்டியலில் தனது இடத்தை தக்க வைத்துள்ளது.

Also Read

4. ஏத்தர் ரிஸ்டா

ஏத்தர் நிறுவனத்தின் குடும்ப பயன்பாட்டை மையமாகக் கொண்ட ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 22,586 யூனிட்டுகள் விற்பனையுடன் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 17,344 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 30 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மற்ற முன்னணி மாடல்களுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும், மாதாந்திர விற்பனை அளவில் ரிஸ்டா தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது.

TVS Orbiter

5. டிவிஎஸ் ஆர்பிட்டர்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டர் 14,641 யூனிட்டுகள் விற்பனை செய்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐக்யூப் ஸ்கூட்டருடன் சேர்த்து பார்க்கும்போது, பட்டியலில் டிவிஎஸ் நிறுவனத்தின் இரண்டு மாடல்களும் சேர்ந்து 57,523 யூனிட்கள் விற்பனை செய்துள்ளன. இது சேத்தக் ஸ்கூட்டரின் தனிப்பட்ட விற்பனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஆம்பியர் மேக்னஸ்

கடந்த மாதம் ஆம்பியர் மேக்னஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 9,772 யூனிட்டுகள் விற்பனையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 4,924 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விற்பனை 98 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள மேக்னஸ், நடுத்தர விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் தனது விற்பனை நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

7. ஏத்தர் 450

கடந்த மாதம் ஏத்தர் 450 மாடல் 6,891 யூனிட்டுகள் விற்பனை செய்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 5,413 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 27 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரிஸ்டாவுக்கு அடுத்ததாக ஏத்தர் நிறுவனத்தின் மற்றொரு மாடலும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

8. ரிவர் இண்டி

பெங்களூரைச் சேர்ந்த ரிவர் நிறுவனத்தின் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 6,567 யூனிட்டுகள் விற்பனையுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 2,229 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது 194 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விற்பனை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஒரே ஆண்டில் 4,338 யூனிட்கள் கூடுதலாக விற்பனையாகியிருப்பதுடன் விற்பனை வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

9. ஆம்பியர் ரியோ

கடந்த ஆகஸ்ட்டில் ஆம்பியர் ரியோ 1,911 யூனிட்டுகள் விற்பனையாகி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 514 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 272 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. எண்ணிக்கையில் முன்னணி மாடல்களைவிட குறைவாக இருந்தாலும், ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதம் ரியோவின் விற்பனை வேகத்தை வெளிப்படுத்துகிறது.

10. ஹோண்டா QC1

கடந்த மாதம் ஹோண்டா QC1 ஸ்கூட்டர் 1,902 யூனிட்டுகள் விற்பனை செய்து இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஆம்பியர் ரியோவை விட வெறும் 9 யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்பனையாகியுள்ளதால், 9 மற்றும் 10வது இடங்களுக்கு இடையிலான போட்டி மிகவும் நெருக்கமாக இருந்துள்ளது. வரும் மாதங்களில் ஹோண்டா தனது வலிமையை காட்டி இந்த பட்டடியலில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மொத்த விற்பனை

இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மொத்தமாக 1,88,714 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 81,681 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், மொத்த விற்பனை 131 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக சேத்தக், ஐக்யூப் மற்றும் விடா ஆகிய மூன்று மாடல்கள் இணைந்து ஏற்பட்ட வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

Article Published On: Monday, September 21, 2026, 15:57 [IST]
English summary
Top 10 electric scooters august 2026 sales bajaj chetak tvs iqube hero vida
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X