இன்பிலிட் நேவிகேஷன் வசதி கொண்ட சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இவை தான்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தான். எரிபொருள் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கூடுதல் விலையைக் கொண்டிருந்தாலும், அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு அம்சம் தான் இன்பில்ட் நேவிகேஷன் (Inbuilt Navigation).

இந்த வசதி இருந்தால், ஸ்மார்ட்போனின் தேவையில்லாமல் ஸ்கூட்டரின் டிஸ்பிளே மூலமாகவே மேப் பார்த்து நாம் செல்லும் இடங்களுக்கு எளிதாக சென்று வரலாம். அதுவும் குறிப்பாக நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் இந்த வசதி மிகவுமே உபயோகமானதாக இருக்கும். இந்தியாவில் இன்பில்ட நேவிகேஷன் வசதியுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் 5 சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

Bajaj Chetak

பஜாஜ் சேட்டக் C3501

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் பஜாஜின் சேட்டக்கும் ஒன்று. இதன் டாப் எண்டான C3501 மாடலில் TFT டிஸ்பிளேவுடன், நேவிகேஷன் வசதியையும் வழங்கியிருக்கிறது பஜாஜ். ரூ.1.22 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் இந்த மாடலில் 5 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்பிளே மூலம் மேப்ஸ் வசதியை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

முழுமையான மேம்பாகவும் பார்த்துக் கொள்ளலாம், இல்லையெனில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியையும் நம் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமின்றி கால் அலர்ட்கள், மியூசிக் கண்ட்ரோல், ஆவண காப்பகம் ஆகிய வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hero Vida V2 Plus

ஹீரோ விடா V2 பிளஸ்

விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் பிளஸ் வேரியன்டில் 7 இன்ச் TFT டச்ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திாவில் விடா பிராண்டின் மூலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப். இந்தக் குறிப்பிட்ட வேரியன்டை ரூ.1.07 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது விடா.

டிவிஎஸ் ஐக்யூப் ST

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்த ஐக்யூப் தான். இதன் டாப் எண்டு வேரியன்டான ST-யில் 7 இன்ச் TFT டச்ஸ்கிரீன் டிஸ்பிளேவுடன், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம். இது மட்டுமின்றி, 100 வகையான கனெக்டட் வசதிகளுடன், அலெக்ஸா மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்ட் வசதியும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலை ரூ.1.58 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ்.

ஓலா S1 ப்ரோ+

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ப்ரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான S1 ப்ரோ+ல் 7 இன்ச் டச்ஸ்கிரீன் TFT டிஸ்பிளே உடன், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்கி வருகிறது ஓலா எலெக்ட்ரிக். ரூ.1.24 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த ஸ்கூட்டர் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி மட்டுமின்றி GPS கனெக்டிவிட்டியையும் கொண்டிருக்கிறது இந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

ஏத்தர் 450X

ஏத்தரின் 450X ஸ்கூட்டர் மாடலிலும் 7 இன்ச் டச்ஸ்கிரீன் TFT டிஸ்பிளேவுடன், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டு வருகிறது. ரூ.1.19 லட்சம் என்ற விலையில் தொடங்கி ஏத்தர் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டாலும், நேவிகேஷன் வசதி கொண்ட 450X ஸ்கூட்டர் மாடலானது ரூ.1.47 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையே கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நேவிகேஷன வசதி ஸ்கூட்டரிலேயே இன்-பில்ட் ஆகக் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பான விஷயம் தான். இது ஸ்மார்ட்போன் மூலம் நேவிகேட் செய்யும் போது ஏற்படும் கவனச் சிதறலைத் தடுத்து, பாதுகாப்பான பயணத்திற்கும் வழி வகை செய்யும். எனவே நீங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கச் செல்லும் போது இந்த வசதி இருக்கும் ஒரு மாடலையோ, வேரியன்டையோ பார்த்து வாங்குங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2026, 15:04 [IST]
English summary
Top 5 best electric scooters with inbuilt navigation feature on sale in india
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+