மிக மிகக் குறைவான சீட் உயரம் கொண்ட டாப் 5 பைக் மாடல்கள் இவை தான்!

ஒரு பைக் வாங்கும் போது அந்த பைக்கின் அனைத்து அம்சங்களும் நமக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம். நமக்கு ஏற்ற வகையில் என்னும் போது சீட் உயரம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. நம்முடைய உயரத்திற்கு ஏற்ப, எளிதாக ஹேண்டில் செய்யக்கூடிய வகையிலான சீட் உயரத்தை நாம் வாங்கும் பைக் கொண்டிருப்பது அவசியம்.

பைக் தயாரிப்பாளர்கள் இந்திய வாடிக்கையாளர்களின் சராசரி உயரத்தை வைத்தே தங்களுடைய பைக்குகளின் சீட் உயரத்தைக் கணக்கிடுகிறார்கள். எனினும் குறைவான உயரம் கொண்டவர்களுக்கான தேர்வுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் பைக் மாடல்களில் மிகவும் குறைவான சீட் உயரத்தைக் கொண்ட டாப் 5 பைக் மாடல்களை இங்கே நாம் பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற பைக்கை தேர்ந்தெடுப்பதற்காக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனவே, விலை உயர்ந்த சொகுசு பைக் மாடல்கள் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன.

Bajaj Avenger Street 160

பஜாஜ் அவெஞ்சர்

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மாஸ் மார்க்கெட் பைக் மாடல்களில் மிகவும் குறைவான சீட் உயரத்தைக் கொண்டிருப்பது இந்த பைக் தான். இதன் சீட் உயரம் வெறும் 737 மிமீ தான். இந்த பைக் ரிலாக்ஸ்டான ரைடிங் பொசிஷனுடன், க்ரூஸர் பைக் வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது. இதன் மற்றொரு முக்கியமான அம்சம் இதன் விலை தான். வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையிலான விலையையும் கொண்டுள்ளது.

இந்த பைக்கை இரண்டு வகையான இன்ஜின்களுடன் இரண்டு மாடல்களாக விற்பனை செய்து வருகிறது பஜாஜ். ஒன்று 160 சிசி இன்ஜின் கொண்ட அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160, மற்றொன்று 220 சிசி இன்ஜின் கொண்ட அவெஞ்சர் க்ரூஸ் 220. இரண்டு பைக்குகளுமே ஒரே அளவிலான சீட் உயரத்தையே கொண்டிருக்கின்றன. 160 சிசி மாடலை ரூ.1.12 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், 220 சிசி மாடலை ரூ.1.26 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

Jawa 42 Bobber

ஜாவா 42 பாபர்

இரண்டாவது இடத்தில் 740 மிமீ சீட் உயரத்துடன் ஜாவா 42 பாபர் பைக் மாடல் இருக்கிறது. குறைவான சீட் உயரத்தைக் கொண்டிருப்பது மட்டுமின்றி ஸ்வாகான ரைடிங் பொசிஷன் மற்றும் டிசைனையும் கொண்டிருக்கிறது இந்த பைக். 334 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக் மாடலை ரூ.2.04 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி வாடிக்கையாளர்கள் வாங்கலாம். கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் இந்த பைக்கை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

ராயல் என்ஃபீல்டு கோவான் கிளாஸிக் 350

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உரிய மவுசை வேறு எந்த பைக்காலும் தர முடியாது. ராயல் என்ஃபீல்டின் 350 சிசி இன்ஜினுடன், குறைவான சீட் உயரம் கொண்ட பைக்கை 2024ல் தான் வெளியிட்டது அந்நிறுவனம். இந்த கோவான் கிளாஸிக் 350 பைக் மாடலானது 750 மிமீ சீட் உயரத்தைக் கொண்டுள்ளது. கிளாஸிக் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்டு பாபர் வகை டிசைனுடன் இந்த கோவான் கிளாஸிக் 350 உருவாக்கப்பட்டது.

ராயல் என்ஃபீல்டின் மற்ற 350 சிசி பைக்குகளில் இருக்கும் அதே 349 சிசி இன்ஜின் தான் இந்த பைக்கிலும் உள்ளது. பெர்ஃபாமன்ஸில் எந்த மாற்றமும் இருக்காது. மேலே கூறிய ஜாவா 42 பாபரைப் போல இல்லாமல், கோவான் கிளாஸிக் 350-க்கு சர்வீஸ் நெட்வொர்க்கும் பரந்து விரிந்திருக்கும். இந்த பைக்கானது ரூ.2.24 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிவிஎஸ் ரெய்டர் 125

டிவிஎஸ்ஸின் ஸ்போர்ட்டி கம்யூட்டர் பைக்கானது குறைவான சீட் உயரம் மற்றும் ஆல்-ரவுண்டிங் பெர்ஃபாமன்ஸைக் கொண்ட ஒரு பைக் மாடலாக இருக்கும். இதன் சீட் உயரம் வெறும் 780 மிமீ தான். பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் எளிதாக அனுகக்கூடிய வகையிலேயே இந்த சீட் உயரம் இருக்கிறது. 124.8 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக்கை, ரூ.82,000 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி நாம் வாங்கலாம்.

BSA கோல்டு ஸ்டார் 650

மேலே நாம் பார்த்த ஜாவா 42 பாபர் பைக்கை விற்பனை செய்து வரும் அதே கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனமே இந்த BSA கோல்டு ஸ்டார் 650 பைக்கையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கின் சீட் உயரம் 782 மிமீ ஆக இருக்கிறது.

குறைவான சீட் உயரத்துடன், பெரிய இன்ஜின் மற்றும் அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட பைக் மாடல் வேண்டும் என்னும் வாடிக்கையாளர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த பைக் மாடலானது ரூ.3.22 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு குறிப்பு: ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ்

டாப் 5 பைக் மாடல்களைக் கடந்து மற்றொரு பைக்கையும் இந்த இடத்தில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டியுள்ளது. அது ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் பிளஸ் தான். இந்த மாஸ் மார்க்கெட் கம்யூட்டர் பைக்கானது 785 மிமீ சீட் உயரத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனை செய்யப்படும் ஒரு பைக் மாடலாக ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருக்கிறது.

இந்த பைக் குறித்து தனியாக நாம் பேசத் தேவையில்லை. அனைத்து வீடுகளிலும் ஒரு ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் இருக்கும், இந்த பைக்கை ஒரு முறையாவது நாம் அனைவரும் ஓட்டியிருப்போம். குறைவான சீட் உயரத்துடன், மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பைக் மாடலாக ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருக்கிறது.

இதனை ரூ.76,177 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி நாம் வாங்க முடியும். குறைவான சீட் உயரம் மட்டுமின்றி, விரிவான சர்வீஸ நெட்வொர்க்க, சிறப்பான மைலேஜ் மற்றும் ஸ்மூத்தான இன்ஜின் என அனைத்து அம்சங்களையும் ஒருசேரக் கொண்டிருக்கும் பைக் மாடல் இது. பட்ஜெட்டில் பைக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கண்களை மூடிக்கொண்டு இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான சீட் உயரத்துடன் தேர்ந்தெடுப்பதற்கு குறைவான தேர்வுகளே இருந்தாலும், போதுமான தேர்வுகள் இருக்கின்றன. அனைத்து வகையான வகைகளிலும் மேலே பைக் மாடல்களை நாம் பார்த்தோம். பட்ஜெட்டில் தொடங்கி, பெரிய இன்ஜின் கொண்ட பைக் வரை போதுமான தேர்வுகள் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும் கண்டிப்பாக இதிலிருந்து ஒரு தேர்வு பொருத்தமானதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 10, 2026, 9:09 [IST]
English summary
Top 5 bikes in india on sale with lowest seat height check all details here
மேலும்... #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+