ஹெல்மெட் மட்டுமில்ல.. என்ன வேணா இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரோட ஸ்டோரேஜ்ல வச்சுக்கலாம்.. அவ்வளவு பெருசு!

பிராக்டிகாலிட்டி அம்சங்களிலேயே பைக்குகளில் இருந்து ஸ்கூட்டர்கள் பெருமளவில் வேறுபடுகின்றன. பைக்குளின் பெர்ஃபாமன்ஸ் பெரும்பாலும் ஸ்கூட்டர்களில் இருப்பதில்லை. ஆனால், அதற்கு ஈடு செய்யும் வகையில் நிறைய பிராக்டிகாலிட்டி அம்சங்களை ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கும். நகரங்களில் தினசரிப் பயன்பாட்டிற்கு சிறந்த வாகனங்கள் ஸ்கூட்டர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் ஒரு சாரர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலும் ஸ்கூட்டர்கள் இருப்பது அதன் முக்கியமான பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. வாகனங்கள் மின்சாரமயமாக்கப்படும் இந்த நேரத்தில் எலெக்ட்ரிக் பைக்குகளை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே சந்தையில் கோலோச்சி வருகின்றன. ஸ்கூட்டர்களின் பிராக்டிகாலிட்டி அம்சத்தை நிர்ணயிப்பதில் அண்டர்சீட் ஸ்டோரேஜ் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக ஸ்டோரேஜ் வசதி கொண்டது எது என்பதைப் பார்க்கலாம்.

River Indie

1. ரிவர் இண்டீ (River Indie)

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே மிக அதிகமாக 43 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும் ஒரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். இந்த அண்டர்சீட் ஸ்டோரேஜ் மட்டுமின்றி, முன்பக்கம் 12 லிட்டர் கிளவ் பாக்ஸையும் இந்த ஸ்கூட்டர் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டோரேஜ்களும் போதவில்லை என்றால் சைடு பேனியர்கள் மற்றும் டாப் பாக்ஸ் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளும் வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் கொடுத்திருக்கிறது ரிவர் மொபிலிட்டி. ரூ.1.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் (சென்னை) விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான EC-06ம் இந்த இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Top 5 EVs with large underseat storage

2. கைனடிக் டிஎக்ஸ் (Kinetic DX)

இரண்டாவது இடத்தில் கைனடிக் டிஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சுமார் 37 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முதன்மை ஸ்டோரேஜுக்குக் கீழே மறைக்கப்பட்ட வகையில் மற்றொரு சிறிய ஸ்டோரேஜ் ஸ்பேஸும் இந்த ஸ்கூட்டரில் இருக்கிறது. இதனை சார்ஜர் மற்றும் முக்கியமான ஆவணங்கள் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலானது ரூ.1.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

3. பஜாஜ் சேட்டக் (Bajaj Chetak) மற்றும் சிம்பிள் ஒன் எஸ் (Simple One எஸ்)

மூன்றாவது இடத்தில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. ஒன்று பஜாஜின் சேட்டக் மற்றொன்று சிம்பிள் எனர்ஜியின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுமே 35 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளன. பஜாஜ் சேட்டக்கில் 5 லிட்டர் கிளவ் பாக்ஸும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிய ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தாலும், பார்ப்பதற்கு இரண்டுமே சிறிய அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போலான தோற்றத்தையே கொண்டிருக்கும்.

பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது ரூ.89,500 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும், சிம்பிள் ஒன் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது ரூ.1.50 லட்சம் லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிம்பிள் ஒன் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1 லிட்டர் கிளவ் பாக்ஸும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

4. டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter) மற்றும் ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta)

நான்காம் இடத்தில் இங்கே டிவிஎஸ் ஆர்பிட்டர் மற்றும் ஏத்தர் ரிஸ்டா ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இருக்கின்றன. இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏத்தர் ரிஸ்டாவிற்குப் போட்டியாகவே ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்தாண்டு டிவிஎஸ் வெளியிட்டது. இரண்டு மிகவும் சிம்பிளான, ஃபேமிலி ஸ்கூட்டருக்கான உண்டான டிசைனைக் கொண்டிருப்பவையாக இருக்கினறன.

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது ரூ.1.05 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கும் நிலையில், டிவிஎஸ் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது வாடகை பேட்டரி (BaaS) திட்டத்துடன் ரூ.49,999 என்ற விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. BaaS திட்டம் இல்லாமல் ரூ.84,500 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் வாங்கலாம்.

5. டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube)

அதிக அண்டர்சீட் ஸ்டோரேஜ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்த டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 32 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிலர் அண்டர்சீட் ஸ்டோரேஜை பெரியளவில் எடுத்துக் கொள்ளாமலும் இருப்பார்கள். ஆனால் தினசரிப் பயன்பாட்டின் போது நிறையே நேரங்களில் மனநிம்மதியைக் கொடுப்பதாக அண்டர்சீட் ஸ்டோரேஜ்கள் இருக்கும். நம்முடைய பொருட்களை பொது இடங்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான சிறந்த இடமாக இவை இருக்கின்றன. எனவே ஸ்கூட்டர் வாங்கும் போது இந்த அம்சத்தின் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2026, 11:20 [IST]
English summary
Top 5 electric scooters with large underseat storage check all details here
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+