ஏற்கனவே பெரிய பைக் இருக்கு... ஆனால் தினசரி பயன்பாட்டுக்கு எளிதான EV ஸ்கூட்டர் வேணுமா? 5 பெஸ்ட் ஸ்கூட்டர்கள்!

வீட்டில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக், புல்லட், பஜாஜ் டோமினார் போன்ற பெரிய பைக் இருக்கலாம். ஆனால் தினமும் அலுவலகம், கடை, பள்ளி, கல்லூரி என 5 முதல் 20 கிலோமீட்டர் பயணங்களுக்கு அந்த பைக்கையே எடுப்பதும், போக்குவரத்து நெரிசலில் ஓட்டிச் செல்வதும் பலருக்கு சிரமமாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதுவாக குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன், மகள் என பலரும் பயன்படுத்த வேண்டுமென்றால், எளிதாக கையாளக்கூடிய மின்சார ஸ்கூட்டர் ஒரு நல்ல இரண்டாவது வாகனமாக இருக்கும்.

அதன்படி, இந்தியாவில் விற்பனையில் உள்ள சிறந்த EV ஸ்கூட்டர்களில் 110 கிலோ எடைக்குள் இருக்கும் மாடல்களை முதலில் எடுத்துப் பார்த்தோம். அதன்பிறகு இருக்கை உயரம், பயண தூரம், பொருட்களை வைக்கும் இடம், பிரேக் வசதி, பின்னோக்கி இயக்கும் வசதி, மின்கல தொழில்நுட்பம் மற்றும் தினசரி பயன்பாட்டில் உண்மையில் உதவும் அம்சங்களை வைத்து இந்த ஐந்து மாடல்களைத் தேர்வு செய்துள்ளோம்.

Best Light Weight EV Scooters

1. டிவிஎஸ் ஆர்பிட்டர்

டிவிஎஸ் ஆர்பிட்டர் இந்த பட்டியலில் பலருக்கும் சிறந்த தேர்வாக அமையலாம். இதன் வி1 மாடலின் எடை வெறும் 101 கிலோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தரையிலிருந்து 760 மில்லிமீட்டர் இருக்கை உயரம் இருப்பதால், உயரம் குறைவானவர்கள் கூட ஸ்கூட்டரை நிறுத்தும்போது அதிக சிரமம் இல்லாமல் கையாள முடியும். 34 லிட்டர் பொருட்கள் வைக்கும் இடம் இருப்பதும் குடும்பப் பயன்பாட்டுக்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது.

வி1 மாடலில் 1.8kWh பேட்டரி, சோதனை நிலைகளின்படி, ஒரு முழு சார்ஜிற்கு 86 கிலோமீட்டர் வரை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், இதன் வி2 மாடல் 112 கிலோ எடை கொண்டதாகவும், 3.1kWh பேட்டரி மற்றும் 158 கிலோமீட்டர் பயண தூரம் கிடைக்கும். தினசரி 10 முதல் 20 கிலோமீட்டர் மட்டுமே பயணம் என்றால், இலகுவான வி1 மாடல் பல குடும்பங்களுக்கு போதுமானதாக இருக்கலாம். இந்த ஸ்கூட்டர் ரூ.1.03 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Bajaj Chetak

2. பஜாஜ் சேத்தக் சி2501

பஜாஜ் சேத்தக் சி2501 இந்த பட்டியலுக்கு மிகவும் இயல்பாக பொருந்துகிறது. இந்த ஸ்கூட்டர் 107 முதல் 108 கிலோ எடையுடன், 763 மில்லிமீட்டர் இருக்கை உயரம் ஆகியவை நகரப் போக்குவரத்து மற்றும் குறுகிய இடங்களில் ஸ்கூட்டரை எளிதாக கையாள உதவுகின்றன. வயதானவர்களும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த மாடல் வழங்கும்.

இந்த ஸ்கூட்டரில் 2.5kWh பேட்டரி மூலம் 113 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மணிக்கு 60 கிலோமீட்டர் அதிகபட்ச வேகமாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 25 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைக்கும் இடம் கிடைக்கிறது. முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக், ரிவர்ஸ் வசதி மற்றும் விரைவான சார்ஜிங் வசதியும் உள்ளன. பஜாஜ் நிறுவனத்தின் நம்பகமான விற்பனைக்கு பிந்தைய சேவையும் பக்கபலமாக குறிப்பிடப்படலாம். இந்த ஸ்கூட்டர் ரூ.96,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Hero Vida VX2 GO

3. ஹீரோ விடா விஎக்ஸ்2 கோ

குடும்பத்தில் பலரும் பயன்படுத்தும் ஸ்கூட்டரில் எடை மட்டுமல்ல, மின்னேற்ற வசதியும் முக்கியம். அதில் விடா விஎக்ஸ்2 கோ தனியாக கவனம் பெறுகிறது. இதன் எடை சுமார் 105 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. 777 மில்லிமீட்டர் இருக்கை உயரமும், 155 மில்லிமீட்டர் தரை இடைவெளி இருப்பதால், நகரப் பயன்பாட்டில் கையாளுவதற்கும் சாலைகளில் ஓட்டுவதற்கும் வசதியாக உள்ளது.

விஎக்ஸ்2 கோவின் மிகப்பெரிய நடைமுறைச் சாதகம் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி இருக்கிறது. வீட்டில் ஸ்கூட்டரை மின்னேற்றும் இடத்திற்கு அருகில் நிறுத்த முடியாதவர்கள், மின்கலத்தை வெளியே எடுத்து வீட்டிற்குள் கொண்டு சென்று மின்னேற்றம் செய்யலாம். 2.2kWh பேட்டரி கொண்ட இந்த மாடலுக்கு 93 கிலோமீட்டர் பயண தூரம் கிடைக்கிறது. தினசரி குறுகிய பயணங்களுக்கு இது போதுமானதாக இருக்கும். ரூ.95,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Honda QC1

4. ஹோண்டா க்யூசி1 - இலகுவான மாடல்

இந்த பட்டியலில் மிகவும் இலகுவான தேர்வுகளில் ஒன்றாகும். இதன் எடை வெறும் 89.5 கிலோ மட்டுமே என்பதால், வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் எளிதாக ஓட்டவும், நிறுத்தவும், பின்னோக்கி நகர்த்தவும் முடியும். 704 மி.மீ. இருக்கை உயரமும் இருப்பதால், குறைந்த உயரம் கொண்டவர்களுக்கும் கையாள்வது சிரமமாக இருக்காது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் செய்தால் 80 கிமீ வரை பயணிக்க முடியும்.

இதில் 1.5 கிலோவாட் மின்கலம், 1.8 கிலோவாட் உச்ச திறன் கொண்ட மின்மோட்டார், 50 கிமீ அதிகபட்ச வேகம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. தினசரி அலுவலகம், கடை, பள்ளி அல்லது அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வருபவர்களுக்கு இந்த அளவிலான செயல்திறன் போதுமானதாக இருக்கும். மேலும், 26 லிட்டர் பொருட்கள் வைக்கும் இடம் இருப்பதால், வீட்டின் தினசரி தேவைகளுக்கும் இது வசதியான தேர்வாக அமையும். ரூ.91,000 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Also Read

5. ஓலா எஸ்1 எக்ஸ்

இந்த பட்டியலில் ஓலா எஸ்1 எக்ஸ் கொஞ்சம் வித்தியாசமான தேர்வாக இருக்கிறது. 2kWh பேட்டரி கொண்ட இந்த மாடல் 101 கிலோ எடையில் வருகிறது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர் பயண தூரத்தை வழங்குவதுடன், அதிகபட்சமாக மணிக்கு 101 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பயன்பாட்டிற்கு இவ்வளவு வேகம் அவசியமில்லை என்றாலும், இளம் உறுப்பினர்களும் பயன்படுத்தப் போகிறார்கள் என்றால் கூடுதல் செயல்திறன் ஒரு கூடுதல் வாய்ப்பாக இருக்கும்.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டரின் இருக்கை உயரம் சுமார் 805 மில்லிமீட்டர் என்பதால், சேத்தக் அல்லது ஆர்பிட்டர் போன்ற குறைந்த இருக்கை உயரம் கொண்ட ஸ்கூட்டர்களை விட சிலருக்கு கால்களை தரையில் ஊன்றுவது சற்று சிரமமாக இருக்கலாம். எனவே இந்த மாடலை தொழில்நுட்ப விவரங்களைப் பார்த்து மட்டும் தேர்வு செய்யாமல், குடும்பத்தில் பயன்படுத்தப் போகும் அனைவரும் நேரில் ஓட்டிப் பார்த்த பிறகே முடிவு செய்வது நல்லது. ரூ.84,999 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Also Read

கூடுதல் தேர்வு: டிவிஎஸ் ஐக்யூப்

பொதுவாக 110 கிலோவுக்குள் இருக்க வேண்டும் என்பது நமது முக்கியமான அளவுகோல் என்பதால் ஐக்யூப்பை ஐந்து மாடல்களில் சேர்க்கவில்லை. ஆனால் குடும்பப் பயன்பாட்டுக்கான மின்சார ஸ்கூட்டர் பற்றி பேசும்போது ஐக்யூப்பை முழுமையாக புறக்கணிப்பதும் சரியாக இருக்காது. 2026 ஜூன் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் 10 லட்சம் வாடிக்கையாளர்களை கடந்ததாக அறிவித்தது. இதனால் இந்திய சந்தையில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாக இது உள்ளது.

மேலும் ஐக்யூப்பில் 32 லிட்டர் பொருட்கள் வைக்கும் இடம், வசதியான இருக்கை மற்றும் பல்வேறு மின்கலத் தேர்வுகள் உள்ளன. சில மாடல்களில் 212 கிலோமீட்டர் வரை சான்றளிக்கப்பட்ட பயண தூரம் கிடைக்கிறது. எடை குறைவாக இருக்க வேண்டும் என்பது உங்கள் முதல் நிபந்தனை என்றால் மேலே உள்ள ஐந்து மாடல்களை முதலில் பாருங்கள். ஆனால் எடை சற்று அதிகமாக இருந்தாலும் நன்கு நிரூபிக்கப்பட்ட குடும்ப மின்சார ஸ்கூட்டர் வேண்டும் என்றால் ஐக்யூப்பையும் நேரில் ஓட்டிப் பார்ப்பது நல்லது.

பெரிய பைக் இருந்தால்...

உங்களிடம் ஏற்கனவே ஒரு பெரிய மோட்டார்சைக்கிள் இருந்தால், இரண்டாவது வாகனமாக வாங்கும் மின்சார ஸ்கூட்டரில் 200 கிலோமீட்டர் பயண தூரம் அல்லது மிகப்பெரிய மோட்டார் போன்றவற்றைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. தினசரி 10 முதல் 20 கிலோமீட்டர் பயன்பாட்டுக்கு குறைந்த எடை, குறைந்த இருக்கை உயரம், பொருட்கள் வைக்கும் இடம், எளிதான மின்னேற்றம் மற்றும் நம்பகமான சேவை ஆகியவையே முக்கியம்.

இந்த கணக்கில் டிவிஎஸ் ஆர்பிட்டர், பஜாஜ் சேத்தக் சி2501, விடா விஎக்ஸ்2 கோ மற்றும் ஹோண்டா க்யூசி1 ஆகியவை குறிப்பாக கவனிக்கத்தக்கவை. ஓலா எஸ்1 எக்ஸ் அதிக செயல்திறன் விரும்புபவர்களுக்கு மாற்றான தேர்வாக இருக்கும். அதே நேரத்தில் எடையில் சிறிது விட்டுக்கொடுக்க முடிந்தால், டிவிஎஸ் ஐக்யூப் மிகவும் நம்பகமான தேர்வாக இருக்கும். இறுதியாக, குடும்பத்தில் யார் யார் ஓட்டப் போகிறார்களோ அவர்கள் அனைவரும் ஒருமுறை நேரில் ஓட்டிப் பார்ப்பதே சரியான முடிவுக்கு எடுக்க உகந்ததாக இருக்கும்.

Article Published On: Saturday, October 3, 2026, 17:41 [IST]
English summary
Top 5 ev scooters for big bike owners daily usage india
மேலும்... #electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X