தப்பித் தவறி கூட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிடாதீங்க.. ஏன் தெரியுமா?

இந்தியாவில் குறைவான விலையில் என்னென்ன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது நமக்குத் தெரியும். அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தப் பிரிவிலேயே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட ஆர்வமும் காட்டி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிக விலையிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.

BMW மோட்டார்ராடு CE 04

BMW நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் CE 04. இதன் விலையைக் கேட்டால் நமக்குக் கொஞ்சம் தலை சுற்றுகிறது. ஆம், 15.25 லட்சம் ரூபாய் என்ற மிக அதிக எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். பார்ப்பதற்கு வழக்கமான ஸ்கூட்டர்களில் இருந்து தனித்துத் தெரியும் வகையில் வித்தியாசமான டிசைன் மற்றும் ப்ரீமியமான கட்டமைப்பையே இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

BMW CE 04

இந்த ஸ்கூட்டரில் 42 hp பவர் மற்றும் 62 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார், லிக்விட்-கூல்டு அம்சத்துடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. விலை அதிகமான ஸ்கூட்டர் என்பதால் அதிக ரேஞ்சு எல்லாம் இல்லை. நிறைய பட்ஜெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விடக் குறைவாக 130 கிமீ என்ற அளவிலேயே சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த இந்த BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

BMW மோட்டார்ராடு CE 02

இந்தியாவில் அதிக விலையைக் கொண்டிருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் BMW-வுடையது தான். மேலே நாம் பார்த்த CE 04 அதிக விலையைக் கொண்டிருக்கிறது என விலை குறைவான CE 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை என்ன தெரியுமா, 'வெறும்' 4.50 லட்சம் ரூபாய் தான்.

BMW CE 02

இந்த CE 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, பார்ப்பதற்கு ப்ரீமியமான எலெக்ட்ரிக் சைக்கிள் என்று சொல்லும் வகையிலான கட்டமைப்பையே கொண்டிருக்கிறது. மேலே நாம் பார்த்த CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 231 கிலோ எடையைக் கொண்டிருக்கும் நிலையில், இந்த காம்பேக்டான CE 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 142 கிலோ எடையைக் கொண்டுள்ளது. 15 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புடன், 108 கிமீ வரையிலான ரேஞ்சை கொண்டுள்ளது CE 02.

டிவிஎஸ் X

இந்தியாவில் தற்போது முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனமாக இருந்து வருவது டிவிஎஸ் தான். அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். ஐக்யூப் மற்றும் ஆர்பிட்டர் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிக விற்பனையை மையப்படுத்தி டிவிஎஸ் விற்பனை செய்து வரும் நிலையில், இந்த X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வித்தியாசமான டிசைன் மற்றும் ப்ரீமியமான அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது.

இந்த X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2.64 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். 4.4 kWh பேட்டரி பேக் மற்றும் 11 kW பவரை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புடன் 140 கிமீ வரையிலான ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. 10.25 இன்ச் TFT டிஸ்பிளே, கனெக்டட் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளும் உண்டு.

ஏத்தர் 450 ஏபெக்ஸ்

ஏத்தரின் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 450 ஏபெக்ஸ். 1.90 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெர்ஃபாமன்ஸை மையப்படுத்தி ஏத்தர் விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. மணிக்கு 0-40 கிமீ வேகத்தை 2.9 நொடிகளில் எட்டும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார், 157 கிமீ சான்றளிக்கப்பட்ட ரேஞ்சு ஆகிய அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

சுஸூகி e அக்சஸ்

இந்தியாவில் சுஸூகியின் முதல் எலெகட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்த e அக்சஸ். இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் எரிபொருள் ஸ்கூட்டரான அக்சஸின் பிராண்டினை e அக்சஸ் ஸ்கூட்டரில் சுஸூகி பயன்படுத்தியிருக்கிறது. 1.88 லட்சம் ரூபாயில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரின் டிசைன், அம்சங்கள் எல்லாம் ஓகே தான். ஆனால் விலை மிகவும் அதிகம்.

இந்த e அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட போது வாடிக்கையாளர்கள் இதன் வெளியீட்டிற்காக ஆர்வமாகக் காத்திருந்தார்கள். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களை வைத்துப் பார்த்த போது 1 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மேலே கூறியது போல மிகவும் அதிக விலையில் வெளியாக ஏமாற்றத்தை அளித்தது e அக்சஸ்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால் இவற்றை வாங்கக்கூடாது என்று இல்லை. ஆனால் நாம் கொடுக்கும் விலைக்கு இவை நியாயம் செய்கின்றனவா என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்க்க வேண்டும். BMW-வின் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் மதிப்பை வழங்கவில்லை என்றாலும், அதன் வகையில் ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக அவை இருப்பதோடு, BMW-வின் பிராண்டு வேல்யூவும் அவற்றுக்கு இருப்பதை நாம் மறுக்க முடியாது.

டிவிஎஸ் X மற்றும் சுஸூகி e அக்சஸ் ஆகிய நல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் என்றாலும், அவ்வளவு விலை கொடுத்து ஏன் அவற்றை நாம் வாங்க வேண்டும் என் தன்னுடைய விலைக்கு அவை நியாயம் கற்பிக்கவில்லை. இந்தப் பட்டியலில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதை பரிசீலனை செய்யலாம் என்றால் அது ஏத்தரின் 450 ஏபெக்ஸ் தான். நாம் கொடுக்கும் விலைக்கான பெர்ஃபாமன்ஸ் மற்றும் அம்சங்களை அது கொண்டிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Tuesday, May 12, 2026, 11:10 [IST]
English summary
Top 5 high priced electric scooters on sale in india check all details here
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out