ரொம்ப கம்மி விலையில் 125 சிசி ஸ்கூட்டர் வாங்கனுமா.. அப்போ இது தான் நீங்க தேடுறது!
பெர்ஃபாமன்ஸ், மைலேஜ், பிராக்டிகாலிட்டி என அனைத்து பாக்ஸ்களையும் டிக் அடிப்பவையாக 125 சிசி ஸ்கூட்டர் சந்தை பரிணமித்திருக்கிறது. குறைவான விலையில் தொடங்கி, ஒரு லட்சத்திற்கும் நிகரான விலையில் அனைத்து வசதிகளுடனும் கூடி 125 சிசி ஸ்கூட்டர்களும் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. சரி, தற்போதை நிலையில் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிகவும் விலை குறைவான முதல் 5 125 சிசி ஸ்கூட்டர் மாடல்கள் எவை எவை என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
ஹீரோ டெஸ்டினி பிரைம் 125: 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் மிகவும் குறைவான விலை கொண்ட ஸ்கூட்டர் தான் வேண்டும் என்றால், இந்த டெஸ்டினி பிரைம் தான் உங்களது முதல் சாய்ஸாக இருக்க வேண்டும். ரூ.71,630 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் ஒரேயொரு வேரியன்டாக இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது ஹீரோ. குறைவான விலை கொண்ட ஸ்கூட்டர்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகவே இதனை தொடர்ந்து விற்பனையில் வைத்திருக்கிறது அந்நிறுவனம்.

யமஹா ரேZR 125 Fi ஹைபிரிட்: 125 சிசி ஸ்கூட்டர்களிலேயே கொஞ்சம் ஸ்போர்ட்டிான லுக் மற்றும் பெர்ஃபாமன்ஸ் கொண்ட ஸ்கூட்டர் வேண்டும் என்றால் யமஹாவின் ரேZR 125 Fi உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்கூட்டரை ரூ.74,300 என்ற எக்ஸ-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது யமஹா. ஸ்போர்ட்டியான லுக்கைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, SMG ஹைபிரிட் அசிஸ்ட், டிஜிட்டல் கன்சோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களையும் இந்த ஸ்கூட்டர் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
யமஹா ஃபேஸினோ 125 Fi ஹைபிரிட்: ஸ்போர்ட்டியான பேZR-ன் கிளாஸியான 125 சிசி சிப்லிங் இந்த ஃபேஸினோ 125. இதனை கொஞ்சமே கொஞ்சம் கூடுதலாக ரூ.74,910 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது யமஹா. ரேZR-ஐ போலவே, இந்த ஃபேஸினோவிலும் SMG ஹைபிரிட் அசிஸ்ட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் 125 சிசி ஸ்கூட்டர்களிலேயே கிளாஸியான லுக்கைக் கொண்டிருக்கும் சில ஸ்கூட்டர் மாடல்களில் இந்த ஃபேஸினோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ டெஸ்டினி 125: குடும்பப் பயன்பாடு கொண்ட 125 சிசி ஸ்கூட்டராக டெஸ்டினி 125-யை பிளேஸ் செய்து விற்பனை செய்து வருகிறது ஹீரோ. கடந்தாண்டு தான் இந்த ஸ்கூட்டரை அப்டேட் செய்தது அந்நிறுவனம். தற்போது இந்த ஸ்கூட்டரை வாங்க சந்தையில் கடும் போட்டியே நிலவி வருகிறது. ரூ.75,838 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த டெஸ்டினி 125 ஸ்கூட்டரை நாம் வாங்கலாம். ஃபேஸினோவைப் போவலே இந்த டெஸ்டினி 125-ம் கிளாஸியான மற்றும் தனித்துவமான லுக்கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று டிவிஎஸ்ஸின் ஜூப்பிட்டர். அதன் 125 சிசி இன்ஜின் கொண்ட இந்த மாடலை ரூ.77,000 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி வாடிக்கையாளர்கள் வாங்கலாம். LED முகப்பு விளக்கு, டிஜிட்டல் டிஸ்பிளே, பெரிய பூட் ஸ்பேஸ் எனப் பல்வேறு பிராக்டிகாலிட்டி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்கூட்டராக இந்த ஜூப்பிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மற்ற 125 சிசி ஸ்கூட்டர்கள்: இந்த டாப் 10 பட்டிலைக் கடந்தும் நிறைய 125 ஸ்கூட்டர்கள் குறைவான விலையில் விற்பனையில் இருக்கின்றன. சுஸூகி அக்சஸ் 125, ஹீரோ ஸூம் 125, டிவிஎஸ் என்டார்க் 125, சுஸூகி அவெனிஸ் 125, ஹோண்டா டியோ 125, ஹோண்டா ஆக்டிவா 125, சுஸூகி பர்க்மன் ஸ்ட்ரீட் ஆகிய ஸ்கூட்டர் மாடல்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இந்த அனைத்து 125 சிசி ஸ்கூட்டர் மாடல்களுமே ரூ.1 லட்சத்திற்குள்ளான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான விலை கொண்ட 125 சிசி ஸ்கூட்டர்கள் பலவும் விற்பனையில் இருந்தாலும், சில ஆயிரங்களை சேர்த்து செலவழித்தால் நிறைய மேம்பட்ட வசதிகள் கொண்ட ஸ்கூட்டரையுமே நாம் வாங்க முடியும். எனவே, ஸ்கூட்டரை வாங்கும் போது விலையை மட்டும் பார்க்காமல், வசதிகளிலும் கவனம் செலுத்துவது சிறப்பாக செயலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








