இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வாரம் ஒரு முறை சார்ஜ் போட்டா போதும்.. ஓட்டிக்கிட்டே இருக்கலாம்!

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஸ்டாரட்-அப் நிறுவனம் சிம்பிள் எனர்ஜி (Simple Energy). தற்போது வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் டாப் 10 நிறுவனங்களுள் ஒன்றாகவும் இந்த சிம்பிள் எனர்ஜி இருந்து வருகிறது.

ஏற்கனவே சிம்பிள் ஒன் மற்றும் சிம்பிள் ஒன் எஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் இந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் 'சிம்பிள் அல்ட்ரா' (Simple Ultra) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட்டது. அதிக ரேஞ்சு, ப்ரீமியமான வசதிகளுடன் சிம்பிள் எனர்ஜியின் ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக தற்போது இந்த சிம்பிள் அல்ட்ராவே உள்ளது. இந்த ஸ்கூட்டர் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

Simple Ultra Electric Scooter

அதிக ரேஞ்சு:

அதிக ரேஞ்சு என்று சொல்லும் போது ஏதோ கொஞ்சம் அதிகமாக இருக்கும் என நினைத்துவிட வேண்டாம். இந்தியாவிலேயே தற்போது அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இது தான். சுமார் 400 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் 350 கிமீ வரையிலான தினசரி பயன்பாட்டு ரேஞ்சையாவது இந்த ஸ்கூட்டரில் இருந்து நாம் பெற்று விட முடியும்.

இந்தியாவில் மிகவும் குறைவான அளவு தூரத்திற்கே பெரும்பான்மையானவர்கள் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துகிறார்கள், அதிகபட்சமாக நாளொன்றுக்கு 20 கிமீ முதல் 30 கிமீ வரையிலேயே நிறைய பேரின் ஸ்கூட்டர் பயன்பாடு இருக்கிறது. 40 கிமீ என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஏழு முதல் எட்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்தால் போதும். இது சிறப்பான விஷயம் இல்லையா.

Simple Ultra EV

பெர்ஃபாமன்ஸ்:

அதிக ரேஞ்சு மட்டுமல்ல, இந்தியாவில் க்விக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இந்த சிம்பிள் அல்ட்ராவை நாம் சொல்ல முடியும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் மணிக்கு 0-40 கிமீ வேகத்தை வெறும் 2.77 நொடிகளில் நாம் எட்ட முடியும். அது மட்டுமின்றி, அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

ஸ்போர்ட்டியான டிசைன்:

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்போர்ட்டியான டிசைனைக் கொடுத்திருக்கிறது சிம்பிள் எனர்ஜி. ஏத்தர் எனர்ஜியின் 450 சீரிஸ் ஸ்கூட்டர்களின் நினைவு வருவதையும் தடுக்க முடியவில்லை. க்விக்கான ஸ்கூட்டர் என்ற பெயருக்கு ஏற்றது போலான, ஷார்ப்பான டிசைனைக் கொண்டுள்ளது இந்த சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். அதிலும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆரஞ்சு நிறம் கண்களைக் கவர்கிறது. இந்திய இளைஞர்களை கட்டியிழுக்கும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கே பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இதனை நாம் கூறலாம்.

வசதிகள்:

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் அனைத்து விதமான மேம்பட்ட வசதிகளையும் கொண்டதாகவே இந்த சிம்பிள் அல்ட்ரா இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, LED விளக்குகள், நான்கு ட்ராக்ஷன் மோடுகள், கனெக்டட் வசதிகள், பல்வேறு ரைடிங் மோடுகள் என நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நாம் பார்க்க முடியாத மேம்பட்ட வசதிகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறது சிம்பிள் எனர்ஜி.

என்ன விலையைக் கொண்டுள்ளது?

மேம்பட்ட வசதிகளைக் கொண்ட ப்ரீமியமான ஸ்கூட்டராக இருக்கும் போது, அதற்கேற்ப விலையும் ப்ரீமியமாகத் தானே இருக்கும். ரூ.2.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது இந்தப் புதிய சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 அல்லது கிளாஸிக் 350 பைக் மாடலின் டாப் எண்டு வேரியன்டை ஒத்த விலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விற்பனை மற்றும் டெலிவரி ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. எனவே இப்போதே சிம்பிள் எனர்ஜி ஷோரூமுக்குச் சென்று இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டுக்கு ஓட்டி வரலாம். இந்தியாவில் 70-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். ஒரு நல்ல விஷயம் தமிழகத்திலும், சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இதனை டீலர்ஷிப்கள் செயல்பட்டு வருகின்றன என்பது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை சற்று அதிகமாக இருந்துவிட்டாலும், மற்ற அனைத்து வகைகளிலும் மிகச்சிறப்பான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இந்த சிம்பிள் அல்ட்ரா இருக்கிறது. விலையைப் பற்றி கவலையில்லை, ஆனால் அதிக ரேஞ்சு மற்றும் சிறப்பான பெர்ஃபாமன்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேண்டும் என்னும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிம்பிள் அல்ட்ரா மிகச்சிறப்பான ஒரு தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 21, 2026, 10:05 [IST]
English summary
Top 5 things you should know about simple ultra electric scooter
மேலும்... #simple energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+