எலெக்ட்ரிக் 2-வீலர் வாங்க மக்கள் அதிகம் நம்பி செல்லும் 7 பிராண்ட்கள்! பஜாஜ்க்கு சிம்ம சொப்பமனமாக டிவிஎஸ்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்துவரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த முதல் ஏழு நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகளுடன், அந்த முதல் ஏழு எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களை இறங்கு வரிசையில் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
7. ரிவர் மொபிலிட்டி (River Mobility): ரிவர் இண்டீ (Indie) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக மார்க்கெட்டில் கவனத்தை பெற்றுவரும் ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 ஆயிரத்து 198 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் சந்தை பங்குகளுள் பெரும்பகுதியை யமஹா (Yamaha) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. ஆம்பியர் (Ampere): இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஆம்பியர் ஆனது பருத்தி தொழிலில் நூறாண்டுகளுக்கும் மேலாக ஈடுப்பட்டுவரும் க்ரீவ்ஸ் காட்டன் குழுமத்தின் கீழ் செயல்படும் இவி பிராண்ட் ஆகும். ஆம்பியர் மேக்னஸ் நியோ (Magnus Neo) மற்றும் நெக்ஸஸ் (Nexus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நிலையான விற்பனையை பதிவு செய்துவரும் நிலையில், ஆம்பியர் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6 ஆயிரத்து 884 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
5. ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric): இந்திய எலெக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட்டில் குறுகிய காலத்தில் கவனத்தை ஈர்த்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை கடந்த சில மாதங்களாக வெகுவாக சரிந்துவந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓரளவிற்கு மீண்டும் முன்னேற்றம் காண துவங்கியுள்ளது. ஓலாவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 166 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

4. ஹீரோ விடா (Hero Vida): ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிரிவான விடாவில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 230 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஹீரோ விடா நிறுவனம் கடந்த 2025ஆம் ஆண்டில் இதே ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 148% அதிகமாகும்.
3. ஏத்தர் எனர்ஜி (Ather Energy): சில வருடங்களுக்கு முன்பு வரையில், பெர்ஃபார்மன்ஸ் மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கிவந்த ஏத்தர் எனர்ஜி, ரிஸ்டா (Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தின் மூலமாக பட்ஜெட் விலை இ-ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்யும் நிறுவனமாக கவனத்தை பெற்று வருகிறது. ஏத்தரில் இருந்து கடந்த மாதத்தில் 27 ஆயிரத்து 24 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2. பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto): சேத்தக் (Chetak) என்கிற ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக 2வது இடத்தில் பஜாஜ் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 32 ஆயிரத்து 883 பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
1. டிவிஎஸ் மோட்டார் (TVS Motor): இந்தியாவில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. 2025 ஏப்ரலில் 19 ஆயிரத்து 176 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்த டிவிஎஸ் நிறுவனம், இந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிகமாக 37 ஆயிரத்து 661 எலெக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் மோட்டார் இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்திருப்பினும், 2வது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ வெறும் ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக முன்னிலை வகிப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதில், இருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களுக்கு இடையே எந்த அளவிற்கு போட்டி உள்ளது என்பதை அறியலாம். அதேநேரம், ஏத்தர் எனர்ஜி, ஓலா எலெக்ட்ரிக் போன்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கவனத்தை பெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications
