நல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான்.. வசதிகளும் நல்லா தான் இருக்கு.. ஆனால் வாங்கலாமா?

நால்டாஜியாவை விரும்பும் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேர்வாக கைனடிக் DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலைச் சொல்லலாம். 1990-களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஐகானிக்கான கைனடிக் ஹோண்டா DX ஸ்கூட்டர் மாடலின் டிசைனை, புதிய கைனடிக் DX ஸ்கூட்டரிலும் கிட்டத்தட்டக் கொண்டு வந்து விட்டது 'கைனடிக் வால்ட்ஸ் & வோல்ட்ஸ்' (Kinetic Watts & Volts) நிறுவனம்.

DX மற்றும் DX+ என இரண்டு வேரியன்ட்களாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. DX வேரியன்டானது ரூ.1.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், DX+ வேரியன்டானது ரூ.1.17 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரைப் பற்றிக் கேள்விப்பட்டு, இதனை வாங்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறீர்கள் என்றால் தொடர்ந்து படியுங்கள். இந்த ஸ்கூட்டரை ஏன் வாங்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதற்கான காரணங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

Kinetic DX electric scooters

கைனடிக் DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான காரணங்கள்:

முதலில் டிசைன். 1990கள் மற்றும் 2000களில் இருந்த ஸ்கூட்டர் போலான தனித்துவமான டிசைனைக் கொண்டுள்ளது. வளைவு நெளிவுகளைக் கொண்டில்லாமல், பாக்ஸியான டிசைன் லாங்குவேஜையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. இந்த டிசைன் சாலையில் செல்பவர்கள் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பது மட்டும் உறுதி. மேலும், மெட்டல் பாடி பேனல்களுடன் சாலிடான பில்ட் குவாலிட்டியையும் இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

இரண்டாவது சிறப்பான சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம். சாலைகளில் செல்லும் போது மேடு பள்ளங்கள் பெரிதாக நம் கவனத்திற்கு வராத அளவிற்கான சஸ்பென்ஷன் செட்டப்பைக் கொண்டுள்ளது இந்த கைனடிக் DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். டிரைவர் மற்றும் பில்லியன் இருவருமே சொகுசாக பயணம் செய்யும் வகையிலான சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்டப்பைக் கொண்டிருக்கிறது.

Kinetic DX

ஆன்-போர்டு சார்ஜர். இந்த பிளஸ் பாயிண்ட் இந்தியாவில் இருக்கும் வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இல்லை. மற்ற மாடல்களைப் போல, சார்ஜர்களையோ, சார்ஜிங் கேபிள்களையே தூக்கி அலையும் பிரச்சினை இந்த கைனடிக் DX ஸ்கூட்டரிஸ் இல்லை. முன்பக்க ஏப்ரனில் ஸ்கூட்டருடன் சேர்ந்தது போலவே த்ரீ பாயிண்ட் பின் கொண்ட சார்ஜிங் கேபிளைக் கொடுத்துள்ளது கைனடிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் நிறுவனம்.

பிளக் பாயிண்டிற்கு அருகில், எளிதாக த்ரீ பின் பிளக்கை மாட்டி சார்ஜ் செய்து போய்க் கொண்டே இருக்கலாம். சார்ஜிங் அனுபவம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அவ்வளவு எளிமையாக இருக்கிறது. இத்துடன் 37 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் (இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இரண்டானது அதிகபட்ச அண்டர்சீட் ஸ்டோரேஜ் அளவு இது தான்), ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதிகளுக்காக மொபைல் செயலி ஆகிய அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

கைனடிக் DX ஸ்கூட்டரை ஏன் தவிர்க்கலாம்?

ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கியமான அம்சத்தைக் குறைவாகக் கொடுத்துள்ளகு கைனடிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் நிறுவனம். வெறும் 2.6 kWh LFP பேட்டரி பைக்கைக் கொடுத்துள்ளது. இந்த பேட்டரி பேக்கானது 117 கிமீ வரையிலான ரேஞ்சையே கொடுக்கும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. தினசரிப் பயன்பாட்டில் இது இன்னும் சற்று குறைவாகவே இருக்கும். ரூ.1.11 லட்சம் என்ற விலையில் இதனை ஒரு ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே நாம் கருத முடியும். இந்த விலையில் இது சிறிய பேட்டரி பேக் தான்.

இது தவிர ஸ்கூட்டரின் எர்கனாமிக்ஸிலும் சில குறைபாடுகள் இருப்பதாக பயன்படுத்திப் பார்த்த வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். பின்பக்க பயணிகளுக்கான ஃபுட் பெக் முன்பக்கம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டரை நிறுத்தும் போது இருவரின் கால்களும் இடிப்பது போன்ற நிலை இருக்கிறது. இது தவிர ரைடர் காலை உயர்த்தி வைக்க வேண்டி இருக்கும் அளவிற்கு சீட் மற்றும் ஃப்ளோர் போர்டின் உயரம் சற்று குறைவான இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் கண்டிப்பாக நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய குறைபாடுகள். இது தவிர இது ஒரு புதிய நிறுவனம் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கைனடிக் என்ற பெயரில் ஏற்கனவே சில எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அவையெல்லாம் கைனடிக் கிரீன் நிறுவனத்தைச் சேர்ந்தவை.

இந்த கைனடிக் DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது கைனடிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது. இரண்டுமே கைனடிக் குழுமத்தைச் சேர்ந்த, இருவேறு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நிறுவனமாக இருப்பதால் டீலர்ஷிப்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்களும் போதுமான அளவில் இருக்காது என்றே தெரிகிறது. எனவே இந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால் இந்த விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுகள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் புதிது புதிதாக பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. அந்த ஸ்கூட்டர்களை எல்லாம் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே எங்கள் நோக்கம். எனவே, கைனடிக் DX ஸ்கூட்டரை வாங்கும் முன் மேலே குறிப்பிட்டிருக்கும் தகவல்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, April 20, 2026, 12:56 [IST]
English summary
Top reasons to buy or skip kinetic dx electric scooter on sale in india
மேலும்... #kinetic #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+