7 பேர் போற மாதிரி சூப்பர் கார்.. 26 கிமீ மைலேஜ்.. விலையும் ரொம்ப கம்மி

இந்தியாவில் டொயோட்டாவின் ரூமியான் எம்பிவி மாடல் 50,000 யூனிட்டுகள் விற்பனை என்ற புதிய மைக்கல்லை எட்டியுள்ளது. 2023ல் இந்தியாவில் வெளியிடப்பட்டதில் இருந்து 32 மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது ரூமியான். டொயோட்டாவின் குறைவான விலை கொண்ட எம்பிவி காரான இது தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எம்பிவிக்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ரூ.20 லட்சத்திற்கும் கீழாக டொயோட்டா விற்பனை செய்து வரும் நான்கு கார் மாடல்களில் ஒன்று ரூமியான். இது மாருதி சுஸூகி எர்டிகாவின் ரீபேட்ஜ் வடிவமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், ரூ.20 லட்சத்திற்கும் கீழாக குறைவான விலையைக் கொண்டிருக்கும் டொயோட்டாவின் நான்கு கார்களுமே மாருதி சுஸூகியின் ரீபேட்ஜ்டு வடிவங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Toyota Rumion

இது அடிப்படையாகக் கொண்டிருக்கும் மாருதி எர்டிகாவிற்கு அடுத்தபடியாக, குறைவான விலை கொண்ட எம்பிவி காராக இந்த ரூமியான் இருக்கிறது. இதனை ரூ.9.55 லட்சம் முதல் ரூ.13.86 லட்சம் வரையிலான விலையில் எட்டு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. 2023 ஆகஸ்ட் மாதம் இந்தக் காரை இந்தியாவில் வெளியிட்டது டொயோட்டா. 2024ல் குறைவான விற்பனையையே பதிவு செய்தாலும், அதன் பின்பு விற்பனை அதிகரித்தது.

கடந்த இரண்டு நிதியாண்டுகளாக இந்தியாவில் டொயோட்டாவின் ஒட்டுமொத்த கார் விற்பனையில் 7% பங்குகளை இந்த ரூமியான் எம்பிவி மாடலே கொண்டுள்ளது. வெளியானதில் இருந்து இப்போது வரை மொத்தமாக 52,271 ரூமியான் எம்பிவி கார்கள் டீலர்ஷிப்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா, கியா கேரன்ஸ் மற்றும் மாருதி XL6 ஆகிய எம்பிவி மாடல்களுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனை செய்யப்படும் எம்பிவியாக இருக்கிறது டொயோட்டா ரூமியான்.

Toyota Rumion MPV

7 பேர் வரை பாதுகாப்பாக அமர்ந்து பயணம் செய்யும் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது ரூமியான். பாதுகாப்பிற்காக இந்தக் காரில் 6 ஏர்பேக்குகள் (அனைத்து வேரியன்ட்களிலும்), எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர் (அனைத்து சீட்களுக்கும்), ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் கேமரா ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் காரில் 103 hp பவர் மற்றும் 137 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மாருதியின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் CNG கிட் பொருத்தப்பட்ட வேரியன்ட் ஒன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

CNG எரிபொருளில் இயங்கும் மாடலானது 88 hp பவர் மற்றும் 121.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. CNG பவர்ட்ரெயினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. CNG எரிபொருளில் இயங்கும் போது கிலோவுக்கு 26.11 கிமீ வரையிலான மைலேஜையும் இந்த ரூமியான் கொடுக்கிறது. பெட்ரோல் இன்ஜினானது லிட்டருக்கு 20.51 கிமீ வரையிலான மைலேஜையே கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டாவிற்கு அதன் சொந்த கார் மாடல்களுக்கு இணையாக இந்த ரீபேட்ஜ்டு கார் மாடல்களும் விற்பனையாகி வருகின்றன. மாருதியினுடையது தான் என்றாலும், டொயோட்டா பிராண்டை விரும்புபவர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மாருதியின் எர்டிகா மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளுமே இந்த ரூமியான் எம்பிவியிலும் இருக்கும். மேலே கூறியது போல 4 மீட்டர்களுக்கும் மேலான நீளத்தில் எர்டிகா எம்பிவிக்கு அடுத்தபடியாக விலை குறைவான இரண்டாவது எம்பிவி கார் மாடல் இந்த டொயோட்டா ரூமியான் தான்.

Article Published On: Tuesday, April 28, 2026, 21:48 [IST]
English summary
Toyota rumion reached 50000 units sales milestone 32 months from the launch
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+