ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 தான் மெயின் டார்க்கெட்! 2 லட்ச ரூபாயில் எதை வாங்குவதுனு பெரிய போட்டியே வர போகுது

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் புதியதாக பொன்னேவில்லே 400 (Bonneville 400) என்கிற புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. பெயரில் '400' என இருந்தாலும் 350சிசி என்ஜினை கொண்ட பைக்காகவே புதிய பொன்னேவில்லே 400 களமிறக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பைக்கின் விலை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கின் ஆதிக்கத்தை முறியடிக்க பல பிராண்ட்களில் இருந்து போட்டிகள் வலுத்த வருகின்றன. குறிப்பாக, பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரையம்ப் நிறுவனம் மத்திய அரசின் ஜிஎஸ்டி (GST) குறைப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தனது 400சிசி பைக்குகளை 350சிசி-க்கு மாற்றி அறிமுகம் செய்து வருகிறது.

triumph bonneville 400 bike price

ஏற்கனவே விற்பனையில் இருந்த ஸ்பீடு 400 (Speed 400), ஸ்க்ராம்ப்ளர் 400 (Scrambler 400) பைக்குகளை 350சிசி என்ஜினுக்கு மாற்றியது மட்டுமின்றி, வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் தனது 400சிசி பைக்குகளையும் நேரடியாக 350சிசி என்ஜின் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் 'டிராக்கர் 400' (Tracker 400) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது அதற்கு உதாரணம் ஆகும்.

அந்த வரிசையில் அடுத்ததாக பொன்னேவில்லே 400 பைக்கை டிரையம்ப் களமிறக்குகிறது. பழமையான ரெட்ரோ ரோட்ஸ்டர் ஸ்டைலிலான பொன்னேவில்லே மோட்டார்சைக்கிள்கள் உலகளவில் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. அந்த வரிசையில் இடம்பெற்ற பொன்னேவில்லே 400 ஆனது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாக விளங்குகிறது. தோற்றத்தில் மட்டுமின்றி, விலையிலும் கிளாசிக் 350 பைக்கிற்கு பொன்னேவில்லே 400 போட்டியாக இருக்கும்.

triumph bonneville 400 bike price

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய பொன்னேவில்லே 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.2 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படலாம். தற்போதைக்கு ரூ.2 லட்சத்திற்குள் கிடைக்கும் 350சிசி டிரையம்ப் பைக்காக ஸ்பீடு டி4 (Speed T4) விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் தற்போதைக்கு இந்தியாவில் விலை குறைவான டிரையம்ப் பைக் ஆகும்.

புதிய பொன்னேவில்லே 400 அதனை காட்டிலும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், அதுதான் விலை குறைவான டிரையம்ப் பைக்காக விளங்கும். இந்த பைக்கின் இந்திய அறிமுகத்தை உறுதிச் செய்யும் வகையில், சமீபத்தில் பொன்னேவில்லே 400 பைக் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு இருந்தது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி புதிய பொன்னேவில்லே 400 பைக்கின் அறிமுகம் ஆனது வருகிற ஜூலை- செப்டம்பர் மாதத்தில் இருக்கலாம். இந்த பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் எந்தவொரு 400சிசி டிரையம்ப் பைக்கிலும் இல்லாத புதுமையான டிசைனில் உள்ளது. குறிப்பாக, சப்-ஃபிரேம் செட்-அப் ஆனது புதுமையானதாக உள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் பைக்குகளில் பின்பக்க சஸ்பென்ஷனுக்கு மோனோஷாக் (Monoshock) வழங்கப்படும் நிலையில், புதிய பொன்னேவில்லே 400 பைக்கில் வித்தியாசமாக இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. மற்றப்படி, முன்பக்க டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளில் வித்தியாசம் இல்லை. பிரேக் சிஸ்டத்தில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகளை டார்க்கெட் செய்து புதிய பொன்னேவில்லே 400 பைக்கை டிரையம்ப் களமிறக்குகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி ரூ.2 லட்சத்திற்குள் இந்த பைக் களமிறக்கப்பட்டால், மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. புதிய டிரையம்ப் பொன்னேவில்லே 400 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களுக்கு நமது டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 18, 2026, 13:24 [IST]
English summary
Triumph bonneville 400 expected price under 2 lakhs in india check all details here
மேலும்... #triumph motorcycles #bike price #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+