ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஓட விட வருது புத்தம் புதிய 350 சிசி பைக்.. வசதிகளைக் கேட்டா அசந்துருவீங்க!

ட்ரையம்ப்பின் சிறிய இன்ஜின் கொண்ட தொடக்க நிலை பைக்குகள் வரிசையில் விரைவில் புதிதாக இணையவிருக்கிறது போனவில் 400 (Bonneville 400). இந்தியாவில் தற்போது ஸ்பீடு 400, ஸ்பீடு T4, ஸ்கிராம்பிளர் 400 X, ஸ்கிராம்பிளர் 400 XC, ட்ராக்கர் 400 மற்றும் த்ரக்ஸ்டன் 400 ஆகிய ஆறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ட்ரையம்ப். இந்த வரிசையில் ஏழாவது மாடலாக புதிதாக இணையவுள்ளது போனவில் 400.

இந்தப் புதிய பைக் மாடல் தற்போது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் தொடக்கநிலை ட்ரையம்ப் பைக்குகளை விட கிளாஸியான மற்றும் மிகவும் ப்ரீமியமான லுக்கைக் கொண்டிருக்கிறது புதிய பைக். ஸ்பீடு 400, ஸ்கிராம்பிளர் 400 மற்றும் த்ரக்ஸ்டன் 400 ஆகிய பைக்குகள் எல்லாமே, ட்ரையம்ப்பின் பெரிய இன்ஜின் பைக்குகளின் டிசைனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவை தான்.

Triumph Boneville T120

அந்த வகையில் புதிய போனவில் 400 பைக் மாடலும், பெரிய இன்ஜின் கொண்ட போனவில் T120 மற்றும் போனவில் T100 ஆகிய பைக் மாடல்களின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. போனவில் T100 பைக் மாடலானது இந்தியாவில் ரூ.10.85 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், போனவில் T120 பைக் மாடலானது ரூ.11.85 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

400 எனக் குறிப்பிட்டிருந்தாலும் ட்ரையம்ப்பின் தொடக்கநிலை பைக்குகளில் சமீபத்தில் தான் 350 சிசி இன்ஜின் கொடுத்து அப்டேட் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரிச்சலுகைகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் புதிதாக வெளியிடப்படவிருக்கும் போனவில் 400 பைக் மாடலிலும் அதே 350 சிசி இன்ஜினே கொடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

Triumph Bonneville T100

ஸ்பைஷாட்டில் சிக்கிய பைக்கில், பின்பக்கம் ட்வின் ஷாக் சஸ்பென்ஷன் சிஸ்டம், ஃப்ரஷ்டு அலுமினியம் ஃபினிஷ் கொண்ட இன்ஜின் கேஸிங் மற்றும் பீ ஷூட்டர் எக்சாஸ்ட், குரோம் கிராப் ரெயில், ஃபிளாட்டான சிங்கிள் பீஸ் சீட், பெரிய வட்ட வடிவ டிஸ்பிளே ஆகிய டிசைன் அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இரண்டு பக்கமும் பெரிய டயர்களுடன், டூயல் சேனல் ABS வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆங்காங்கே குரோம் எலமெண்ட்களுடன் மிகவும் கிளாஸியான டிசைனைக் கொண்டிருக்கிறது புதிய ட்ரையம்ப் போனவில் 400. ஸ்பைஷாட் பைக்கானது கிட்டத்தட்ட தயாரிப்பு நிலைக்கு ரெடியான மாடல் போலவே தான் இருக்கிறது. உருவாக்கம் முழுவதுமாக முடிந்து இந்த பைக் சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ட்ரையம்பிடம் பல்வேறு 350 சிசி பைக்குகள் இருந்தாலும் அவை எதையும் ராயல் என்ஃபீல்டின் கிளாஸியான பைக்குகளுக்கு நேரடிப் போட்டியாக சொல்ல முடியாது. ஆனால் இந்த போனவில் 400-ஐ சொல்லலாம். 350 சிசி இன்ஜினுடன், ராயல் என்ஃபீல்டின் கிளாஸிக் 350 மற்றும் புல்லட் 350 ஆகிய பைக் மாடல்களுக்கு நேரடிப் போட்டியாக இந்த ட்ரையம்ப் போனவில் 400 இருக்கும்.

ஆனால், பெர்ஃபாமன்ஸ் என்று வரும் போது ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட இந்த ட்ரையம்ப் பைக் ஒருபடி மேலேயே தான் இருக்கும். இந்த 2026ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பண்டிகை காலத்தையொட்டி இந்தப் புதிய பைக் மாடலை ட்ரையம்ப் வெளியிடலாம் எனத் தெரிகிறது. ரூ.2 லட்சம் முதல் ரூ.2.70 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் ட்ரையம்பின் 400 சீரிஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை என்ன விலையில் அந்நிறுவனம் வெளியிடுகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில வருடங்களுக்கு முன்பு ஸ்பீடு 400 பைக்கில் தொடங்கிய பயணம் தற்போது சுமார் 6 பைக் மாடல்களுக்கும் மேலாக வந்து நிற்கிறது. தொடக்கநிலை பிரிவில் அனைத்த வகையான வாடிக்கையாளர்களும் தேர்ந்தெடுக்கும் வகையில் ரூ.1 லட்சம் வரை பரந்து விரிந்து பைக் லைன்-அப்பை பிளேஸ் செய்துள்ளது ட்ரையம்ப். புதிய போனவில் 400 அதில் மற்றொரு மைல்கல்லாக வந்தமரவிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 14, 2026, 19:34 [IST]
English summary
Triumph bonneville 400 spied testing in india launch expected soon
மேலும்... #triumph motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+