இந்த பைக் அறிமுகமானால் ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களுக்கு ஒருத்தரும் போக போறது இல்ல! டிரையம்ப் களமிறக்கும் பைக்

டிரையம்ப் (Triumph) ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பூட்டும் செய்தியாக மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய 'பான்னவில் 400' (Bonneville 400) மோட்டார்சைக்கிள், உற்பத்திக்குத் தயாரான நிலையில் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டம் செய்யப்படும் புதிய ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டிரையம்ப்பின் ரெட்ரோ ரோட்ஸ்டர் பைக், இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்தைக்கு வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதன் பின்புற தோற்றம் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்பீடு 400, ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் மற்றும் ஸ்பீடு டி4 பைக் மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கிளாசிக் பான்னவில் ஸ்டைலில் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களைக் கொண்டுள்ளது.

triumph bonneville 400 spotted

வட்ட வடிவ டெயில்லேம்ப், நீளமான சிங்கிள்-பீஸ் இருக்கை மற்றும் பிளாக் பீஷூட்டர் எக்ஸாஸ்ட் குழாய் ஆகியவை இதன் பாரம்பரியத் தோற்றத்தை மேலும் மெருகூட்டுகின்றன. இந்த ஸ்பை படங்களில் நமக்குக் கிடைக்கும் மற்றொரு ஆச்சரியம், இதன் கம்பீரமான வயர்-ஸ்போக் சக்கரங்கள் ஆகும். சாலைகளில் சீறிப்பாய்வதற்கு ஏற்ற டயர்களுடன், இந்த மாடலுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சப்-ஃபிரேம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்களைத் தன்வசம் இழுக்கும் நோக்கில், டிரையம்ப் தனது பெரிய பான்னவில் பைக்குகளின் கம்பீரமான வடிவமைப்பையே இந்த 400சிசி பைக்கிலும் கொண்டுவர முயல்வது அப்பட்டமாகத் தெரிகிறது. முன்புறத்தில் ரப்பர் கெயிட்டர்களுடன் கூடிய டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், நிமிர்ந்த ரைடிங் பொசிஷன், அகலமான ஹேண்டில்பார் மற்றும் வட்ட வடிவ கண்ணாடிகள் என இதன் கிளாசிக் லுக் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

triumph bonneville 400 spotted

இதன் வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் திரை மற்றும் டாப்-வேரியண்ட்டுகளில் வரவிருக்கும் பெரிய டிஎஃப்டி (TFT) டிஸ்ப்ளே போன்றவை ஆர்வத்தை மேலும் தூண்டுகின்றன. அதுமட்டுமா, தற்போதைய டிரையம்ப் 400சிசி பைக்குகளில் உள்ள 13-லிட்டர் டேங்க்கை விட இதில் பெரிய பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

நீண்ட தூரப் பயணங்களுக்கும், அன்றாடப் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இதன் சொகுசான வடிவமைப்பு அமைந்துள்ளது. இந்த புதிய பான்னவில் மாடல், 350சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் & அசிஸ்ட் கிளட்ச், ரைடு-பை-வயர் த்ராட்டில் மற்றும் டூயல்-சேனல் ABS போன்ற அதிநவீன தொழிற்நுட்பங்கள் இடம்பெறக்கூடும்.

மேலும், கிளாசிக் பைக் பிரியர்களுக்காக வயர்-ஸ்போக் சக்கரங்கள் மற்றும் க்ரோம் ஃபினிஷிங் கொண்ட ஒரு வேரியண்ட்டும், நவீன ரசனைக்கு ஏற்ப அலாய் சக்கரங்கள் மற்றும் டார்க் ஃபினிஷிங் கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. அறிமுகத்திற்குப் பிறகு, இந்த பான்னவில் 400 பைக் மாடலானது டிரையம்ப் நிறுவனத்தின் ஸ்பீடு 400, ஸ்பீடு டி4, ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ்சி ஆகியவற்றுடன் இணைந்து களம் காணும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, யெஸ்டி 350 மற்றும் ஹோண்டா சிபி350 போன்ற ஜாம்பவான்களுக்கு இந்த புதிய டிரையம்ப் பான்னவில் 400 மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்சமயம் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வரும் இந்த பைக் இந்திய பைக் பிரியர்களின் இதயங்களை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Article Published On: Tuesday, June 30, 2026, 11:15 [IST]
English summary
Triumph bonneville 400 spotted testing once again in india ahead of launch
மேலும்... #triumph motorcycles #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out