ரூ.2.55 லட்சத்தில் புதிய டிரையம்ப் போனிவில் டி4 மாடல் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350க்கு நேரடி போட்டி

இந்திய பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்திய டிரையம்ப் போனிவில் டி40, டி40 பிளாக் மற்றும் போனிவில் டி4 மோட்டார்சைக்கிள்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிரையம்ப் நிறுவனத்தின் பிரபலமான போனிவில் மோட்டார்சைக்கிள் குடும்பத்தில் இது விலை குறைவான தேர்வுகளாக இந்தியாவிற்கு வந்துள்ளன.

புதிய டிரையம்ப் போனிவில் மோட்டார்சைக்கிள்கள் டி4, டி40 மற்றும் டி40 பிளாக் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கும். இதில் போனிவில் டி40 மற்றும் டி40 பிளாக் மாடல்களின் விலை ரூ.2,79,999 ஆகவும், போனிவில் டி4 மாடலின் விலை ரூ.2,54,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டி40 மற்றும் டி40 பிளாக் மாடல்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (அக்டோபர் 7) மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

Triumph Bonneville T40

வடிவமைப்பை பொறுத்தவரை, மூன்று மாடல்களிலும் போனிவில் குடும்பத்தின் பாரம்பரிய தோற்றம் அப்படியே தொடர்கிறது. கண்ணீர்த்துளி வடிவ எரிபொருள் டேங்க், வட்ட வடிவ முகப்பு விளக்கு, நீளமான மட்கார்டுகள், ஸ்போக் வீல்கள் மற்றும் இரட்டை பின்புற அதிர்வுதாங்கிகள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

Also Read

போனிவில் டி40 மாடல்

புதிய டி40 மற்றும் டி40 பிளாக் மாடல்களில் 350 சிசி, ஆயில்கூல்டு டிஆர் சீரிஸ் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 29 எச்பி பவரையும், 31 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. குறிப்பாக குறைந்த எஞ்சின் சுழல் வேகத்திலேயே அதிக டார்க் கிடைக்கும் வகையில் இது ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்களில் டி40 மற்றும் டி40 பிளாக் மாடல்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன. இந்த மாடல்களில் எல்இடி ஹெட்லைட், 4 அங்குல வட்ட வடிவ கலர் டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், மொபைல்போன் இணைப்பு, வழிகாட்டி வசதி, இசை மற்றும் அழைப்பு கட்டுப்பாடு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் Road, Rain மற்றும் Eco என்ற வகையில் 5 ரைடிங் மோடுகளும் உள்ளன.

Triumph Bonneville T40

பாதுகாப்பு அம்சங்களிலும் டிரையம்ப் முக்கியமான வசதிகளை வழங்கியுள்ளது. டி40 மற்றும் டி40 பிளாக் மாடல்களில் மேம்படுத்தப்பட்ட ஏபிஎஸ், வேகக் கட்டுப்பாட்டு வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. வளைவுகளில் செல்லும்போது பைக் அபாயகரமாக சாயும் நிலையில் பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த பாதுகாப்பு வசதிகள் செயல்படுகின்றன.

Also Read

போனிவில் டி4

மறுபுறத்தில் போனிவில் டி4 மாடலிலும் நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் வண்ண எல்சிடி திரை, வழிகாட்டி வசதி, 3 ரைடிங் மோடுகள் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. மொபைல்போன் இணைப்பு மூலமாக அழைப்புகள் மற்றும் தொடர்புகளை கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.

Triumph Bonneville T40

ஓட்டுனர் அனுபவத்தை எளிமையாக வைத்திருக்கும் வகையில் மூன்று மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தரையிலிருந்து 790 மிமீ இருக்கை உயரம் கொண்ட இவற்றுக்கு கூடுதலாக குறைந்த உயர இருக்கையையும் தேர்வு செய்யலாம். இதன் மூலம் இருக்கை உயரத்தை 770 மிமீ வரை குறைக்க முடியும். இந்த பைக் 195 கிலோ எடை மற்றும் நேராக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை, ஹேண்டில்பார் ஆகியவை நகரப் பயன்பாட்டுக்கும் ஏற்றதாக உள்ளன.

முன்புறத்தில் 18 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் வழங்கப்பட்டுள்ளன. இவை இலகுரக அலுமினிய விளிம்புகளுடன் பாரம்பரியமான மோட்டார்சைக்கிள் என்பதை காட்டும் விதத்தில் ஸ்போக்ஸ் கொண்டதாக உள்ளன. டி40 மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. டி4 மாடலுக்கு பாண்டம் பிளாக், கார்னிவல் ரெட் மற்றும் காம்பிடிஷன் கிரீன் நிறங்கள் வழங்கப்படுகின்றன.

டி40 பிளாக் மாடல் மற்ற இரண்டிலிருந்தும் வித்தியாசமான தோற்றத்தை பெறுகிறது. மேட் பியூட்டர் கிரே மற்றும் மேட் பாண்டம் பிளாக் நிறங்களுடன் கருப்பு நிற உதிரிபாகங்கள், கருப்பு பூச்சு கொண்ட எஞ்சின் கவர் வழங்கப்பட்டுள்ளன. பாரம்பரிய போனிவில் வடிவமைப்புடன் இது சற்று முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது.

புதிய போனிவில் டி40 மாடலின் டெலிவரி வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என டிரையம்ப் தெரிவித்துள்ளது. போனிவில் டி4 மாடலின் டெலிவரி ஜனவரி 2027 இரண்டாவது வாரத்தில் தொடங்கும். இதன் மூலம் டிரையம்ப் நிறுவனத்தின் 400 சீரிஸ் குடும்பத்தில் போனிவில் பெயரும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் ஹோண்டா சிபி350 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Article Published On: Tuesday, October 6, 2026, 17:24 [IST]
English summary
Triumph bonneville t4 t40 t40 black launched india price features specs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X