ரூ.9.99 லட்சத்தில் புதிய டிரையம்ப் டேடோனா 660 பைக் விற்பனைக்கு அறிமுகம்: என்னென்ன மாற்றங்கள்?

இங்கிலாந்தை சேர்ந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப், இந்தியாவில் தன் பிரபலமான மிட்-வெயிட் ஸ்போர்ட்ஸ் பைக்கான 2026 டேடோனா 660 மாடலை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது இதன் விலை வெறும் ரூ.11,000 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதே மாடலில் உள்ள மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளுடனேயே இந்த 2026 மாடல் இந்திய சந்தைக்கும் வந்துள்ளது. சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் அன்றாட பயன்பாட்டிற்கும், நீண்டதூர பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு பைக்கை எதிர்பார்க்கும் இந்திய பைக் பிரியர்களுக்கு இந்த புதிய மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

Triumph Daytona 660 Launched

முந்தைய மாடலை விட புதிய டேடோனா 660 பைக்கில் கவனிக்கத்தக்க சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இதன் முன் பகுதியில் வழங்கப்பட்டுள்ள 41 மிமீ ஷோவா அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சாலை நிலைகளுக்கு ஏற்பவும், ரைடரின் விருப்பத்திற்கு ஏற்பவும் சஸ்பென்ஷன் செட்டிங்கை மாற்றியமைத்துக் கொள்ள முடியும். பின் பக்கத்தில் உள்ள மோனோஷாக் சஸ்பென்ஷன் முந்தைய மாடலை போலவே ப்ரீ-லோட் அட்ஜஸ்ட்மென்ட் வசதியுடன் 130 மிமீ டிராவல் கொண்டதாக இருக்கிறது.

மற்றொரு பெரிய மாற்றம் என்னவென்றால், கிளட்ச் பயன்படுத்தாமல் கியர் மாற்ற உதவும் பை-டைரெக்ஷன் குயிக் ஷிப்ட்டர் (Bi-directional Quickshifter) வசதி இப்போது நிரந்தரமான வசதியாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கூடுதல் கட்டணத்துடன் கூடிய வசதியாக மட்டுமே கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதிவேக பயணங்களின் போதும், நகர்ப்புற நெரிசலில் அடிக்கடி கியர் மாற்றும்போதும் இந்த குயிக் ஷிஃப்ட்டர் ரைடருக்கு மிகுந்த வசதியைத் தரும்.

Also Read

அதேபோல், அதிக தரைப்பிடிப்பு மற்றும் பிடிமானத்துடன் செல்லும் வகையில், முன்பு வழங்கப்பட்ட மிச்செலின் பவர் 6 டயர்களுக்குப் பதிலாக
புதிய மெட்ஸீலர் எம்9ஆர்ஆர் (Metzeler M9RR) டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிசைனைப் பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், 2026 மாடலை வேறுபடுத்திக் காட்டும் வகையில் மூன்று புதிய வண்ண தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அலுமினியம் சில்வர் மற்றும் காஸ்மிக் யெல்லோ என்ற மஞ்சள் வண்ணத் தேர்வு ஆகிய இரண்டு நிறங்களும் சஃபயர் பிளாக் ஷேட் என்ற கருப்பு வண்ணக் கலவையிலும், மூன்றாவது தேர்வாக முழுமையான சஃபயர் பிளாக் பினிஷிங் கொண்டதாகவும் கிடைக்கும்.

Also Read

இந்த பைக்கில் தொடர்ந்து 660 சிசி 3-சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 95 எச்பி பவரையும், 68 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனுடன் 6 பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 3 சிலிண்டர் எஞ்சின் சிறப்பான டார்க்கையும், செயல்திறனையும் வெளிப்படுத்துவதால், நகர்ப்புற பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயன்பாட்டிற்கு ஏற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய சந்தையில் கவாஸாகி நிஞ்ஜா 650 மற்றும் ஏப்ரிலியா ஆர்எஸ் 457 போன்ற நடுத்தர எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களுக்கு இந்த புதிய டிரையம்ப் டேடோனா 660 முக்கிய போட்டியாக விளங்கும். புதிய அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் மற்றும் குயிக் ஷிஃப்ட்டர் வசதிகளுடன் வந்துள்ளதால், இந்த விலைப் பிரிவில் பிரீமியம் பைக் வாங்குபவர்களை இது வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, September 25, 2026, 17:07 [IST]
English summary
Triumph daytona 660 2026 launched india price features updates
மேலும்... #triumph motorcycles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out