இந்தியாவில் 7 புதிய பைக்குகளை வெளியிட்டுள்ள நிறுவனம்.. ஒவ்வொன்னும் சும்மா தரமா இருக்கு!

இந்தியா உட்பட சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் பல்வேறு பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளை ட்ரையம்ப் நிறுவனம் அப்டேட் செய்தது. தற்போது அந்த அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை மொத்தமாக இந்தியாவில் வெளியிட்டுள்ளது. தற்போது 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஸ்பீடு ட்வின் 1200 கஃபே ரேஸர் எடிஷன், போனவில் T120, போனவில் பாபர், போனவில் ஸ்பீடு மாஸ்டர், டைகர் 900 சிறப்பு எடிஷன் மற்றும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 RX ஆகிய பைக்குகளை இந்தியாவிலும் வெளியிட்டுள்ளது ட்ரையம்ப்.

2026 ஸ்பீடு ட்வின் 1200 கஃபே ரேஸர் எடிஷன்:

2026ம் ஆண்டிற்காக ஸ்பீடு ட்வின் 1200 (Speed Twin 1200) பைக்கின் சிறப்பு எடிஷனான கஃபே ரேஸர் எடிஷனை (Cafe Racer Edition) வெளியிட்டுள்ளது ட்ரையம்ப். மெக்கானிக்கலாக இன்ஜின் அல்லது மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. காஸ்மெடிக் ரீதியாக டூயல் டோனில் கிரீன் மற்றும் சில்வர் நிறங்கள் கொண்ட புதிய பெயிண்ட் ஸ்கீம், டேன் லெதர் சீட் ஆகியவை இந்த சிறப்பு எடிஷனில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Triumph Speed Twin 1200 Cafe Racer Edition

கஃபே ரேஸர் என்ற பெயருக்கு ஏற்ப க்ளிப்-ஆண் ஹேண்டில் பார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஜின் அதே 1,200 சிசி, பேரலல் ட்வின், லிக்விட்-கூல்டு யூனிட் தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 105 hp பவர் மற்றும் 112 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஸ்டாண்டர்டு பைக்கை விட சற்று அதிகமாக 17.99 லட்சம் ரூபாய் என்ற விலையில் வெளியாகியுள்ளது புதிய ஸ்பீடு ட்வின் 1200 கஃபே ரேஸர் எடிஷன்.

2026 போனவில் T120:

2026ம் ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்ட போனவில் T120 (Bonneville T120) பைக்கில் புதிய LED முகப்பு விளக்கு மற்றும் DRL செட்டப், கார்னரிங் ABS, ட்ராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் வசதிகள், க்ரூஸ் கண்ட்ரோல், USB-C சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது. இதனைத் தவிர மெக்கானிக்கலாக இன்ஜினிலோ மற்ற பாகங்களிலோ எந்த மாற்றமும் இல்லை.

Triumph Bonneville T120

இந்த பைக்கில் 1,200 சிசி, 270 டிகிரி கிராங்க், பேரலல் ட்வின், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 80 hp பவர் மற்றும் 105 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் இந்த பைக்கிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பை விட கொஞ்சம் அதிகமாக 12.17 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் மேம்படுத்தப்பட்ட போனவில் T120 பைக் விற்பனை செய்யப்படவுள்ளது.

2026 பாபர் மற்றும் ஸ்பீடுமாஸ்டர்:

போனவில் T120 பைக்குடன் ஒப்பிடும் போது பாபர் (Bobber) மற்றும் ஸ்பீடுமாஸ்டர் (Speedmaster) பைக்குகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் இன்னும் சில மாற்றங்களையும் சேர்த்து செய்திருக்கிறது ட்ரையம்ப். குறிப்பாக புதிய பாபர் பைக்கில் 2 லிட்டர் கூடுதலாக சற்று பெரிய 14 லிட்டர் எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. பைக்கின் பாடிவொர்க்கையும் சற்று மாற்றியிருக்கிறது ட்ரையம்ப். இதன் ஒற்றை சீட்டை சற்று அகலமாகவும், அதிக பேடிங்குடனும் கொடுத்திருக்கிறது.

ஸ்பீடுமாஸ்டரில் ரைடர் மற்றும் பில்லியன் ஆகிய இரண்டு சீட்களையும் முன்பை விட சற்று அகலமாகவே புதிய பைக்கில் ட்ரையம்ப் கொடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களைத் தவிர இரண்டு பைக்குகளிலும் போனவில் பைக்கில் கொடுக்கப்பட்ட எலெக்ட்ரானிக் அம்சங்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்படத் தொடங்கியிருக்கிறது.

போனவில் T120 பைக்கில் பயன்படுத்தப்பட்ட அதே 1,200 சிசி இன்ஜின் தான் பாபர் மற்றும் ஸ்பீடுமாஸ்டர் பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ட்யூனிங் பைக்கிற்கு ஏற்ப சற்றே மாறுபடும். இதனால் பவர் மற்றும் டார்க் அளவுகளிலும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருக்கும். இரண்டு பைக்குகளையும் இப்போது 13.52 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் ட்ரையம்ப் விற்பனை செய்யவுள்ளது.

டைகர் 900 சிறப்பு எடிஷன்கள்:

ட்ரையம்ப் உலகமெங்கும் விற்பனை செய்து வரும் 900 சிசி பைக்காக டைகர் 900 (Tiger 900) இருக்கிறது. இந்த பைக்கின் ஆல்பைன் (Alpine) மற்றும் டெஸர்ட் எடிஷன்களை (Desert Editions) தற்போது இந்தியாவில் வெளியிட்டுள்ளது ட்ரையம்ப். ஆல்பைன் எடிஷனை 15.35 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டெஸர்ட் எடிஷனை 16.05 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் ட்ரையம்ப் வெளியிட்டுள்ளது.

ரோடு மற்றும் டூரிங் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஆல்பைன் எடிஷனையும், ரக்கடான ஆஃப்-ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான பைக்காக டெஸர்ட் எடிஷனையும் உருவாக்கியிருக்கிறது ட்ரையம்ப். இரண்டு பைக்குகளிலும் 888 சிசி, 3 சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 108 hp பவர் மற்றும் 90 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

2026 ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 RX:

ஓராண்டிற்கு மட்டுமே இந்த பைக்கை விற்பனையில் வைத்திருப்போம் என்ற அறிவிப்புடன் இந்த மேம்படுத்தப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 RX பைக்கை இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது ட்ரையம்ப். 13.91 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த RX வெர்ஷன் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது.

RS வெர்ஷனை விட இன்னும் அதீத ட்ராக் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மிகவும் அக்ரஸிவ்வான ரைடிங் பொசிஷனுடன் புதிய RX பைக்கை வடிவமைத்திருக்கிறது ட்ரையம்ப். ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷனுக்கு ஏற்ற வகையில் கிளிப்-ஆன் ஹேண்டில்பாரும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காஸ்மெடிக் ரீதியாகவும் சில்வர் நிற பெயிண்ட் ஸ்கீமுடன் தனித்துவமாகவே இருக்கிறது இந்த பைக்.

இந்த ஸ்ட்ரீட் ட்ரிபிள் 765 RX பைக்கில் 765 சிசி, இன்லைன் ட்ரிபிள், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 130 hp பவர் மற்றும் 80 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் பை-டேரக்ஷனல் க்விக்ஷிப்டர் வசதியையும் ட்ரையம்ப் ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டிலிருந்து தாங்கள் சர்வதேச அளவில் அப்டேட் செய்து வந்த பைக்குகள் மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு எடிஷன் மாடல்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் இந்தியாவிலும் வெளியிட்டுவிட்டது ட்ரையம்ப் நிறுவனம். அனைத்து வகையான ப்ரீமியம் பைக்குளையும் இந்தியாவில் விற்பனை செய்யும் நிறுவனங்களில் ட்ரையம்ப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, May 23, 2026, 12:28 [IST]
English summary
Triumph launched 7 new updated and special edition bikes in india
மேலும்... #triumph motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+