ரூ.11,500 மிச்சமாவது ஒன்னும் சும்மா இல்ல... டிரையம்ப் பைக் வாங்க இதை விட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!!

120 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார்சைக்கிள் பாரம்பரியம் கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம், தனது 400சிசி பைக்குகளான ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்பீடு டி4 (Speed T4) பைக்குகளுக்கு புத்தாண்டு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. மேலும், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் விதத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த சிறப்புச் சலுகையின் கீழ், நாடு முழுவதும் இந்த இரண்டு டிரையம்ப் பைக்குகளில் ஏதேனும் ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.11,500 மதிப்புள்ள அசல் டிரையம்ப் ஆக்சஸரீஸ் (Accessories) இலவசமாக வழங்கப்படும். இந்த இலவச ஆக்சஸரீஸ் தொகுப்பில் பைக்கிற்கான டேங்க் பேட், விண்ட்ஸ்க்ரீன், ரைடரின் கால் முட்டிகளை பாதுகாக்கும் பேட்கள், தாழ்வான என்ஜின் பார்கள் மற்றும் பேக்ரெஸ்ட் ஆகியவை அடங்கும்.

triumph motorcycles announces free accessories

இந்தச் சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. பெரும்பாலும், இந்த ஜனவரி மாதம் முழுவதும் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையின்படி, டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் ரூ.2.39 லட்சத்திலும், ஸ்பீடு டி4 பைக் ரூ.1.95 லட்சத்திலும் கிடைக்கின்றன.

தொலைத்தூர பயணங்களை அவ்வப்போது விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்பீடு டி4 பைக் மாடல்கள், டிரையம்பின் தனித்துவமான வடிவமைப்பு, ஈர்க்கும் செயல்பாடு மற்றும் தினசரி பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றை கொண்டுள்ளன. இலவசமாக வழங்கப்படும் ஆக்சஸரீஸ், பைக்குகளின் அன்றாட நடைமுறைப் பயன்பாட்டை மேலும் மேம்படுத்துகின்றன.

triumph motorcycles announces free accessories

இந்தச் சலுகை அறிவிப்பு ஆனது டிரையம்ப் இந்தியாவில் தனது அனைத்து 400சிசி பைக்குகளின் விலைகளை உயர்த்திய அதே நேரத்தில் வெளிவந்துள்ளது. ஸ்பீடு 400 பைக் அதிகபட்சமாக ரூ.5,246 விலை உயர்வைக் பெற்றுள்ளது. மற்ற டிரையம்ப் 400சிசி பைக்குகளின் விலைகள் ரூ.2,246 முதல் ரூ.2,461 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

டிரையம்ப் 400சிசி பைக்குகளில் ஸ்பீடு மாடல்கள் மட்டுமில்லாமல், ஸ்க்ராம்ப்ளர் (Scrambler) மற்றும் த்ரக்ஸ்டன் (Thruxton) பைக் மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் ரூ.2.70 லட்சம், ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ்சி பைக் ரூ.2.97 லட்சம் மற்றும் அழகிய தோற்றம் கொண்ட த்ரக்ஸ்டன் 400 பைக் ரூ.2.76 லட்சம் (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை) என்ற விலைகளில் கிடைக்கின்றன.

Model Old Price (Approx.) New Price (Ex-Showroom) Price Hike
Speed T4 ₹1,92,539 ₹1,95,000 ₹2,461
Speed 400 ₹2,33,754 ₹2,39,000 ₹5,246
Scrambler 400 X ₹2,67,731 ₹2,69,977 ₹2,246
Thruxton 400 ₹2,74,137 ₹2,76,383 ₹2,246
Scrambler 400 XC ₹2,94,671 ₹2,96,917 ₹2,246
triumph motorcycles announces free accessories

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்பின் இந்த புத்தாண்டுச் சலுகை ஆனது பிரீமியம் தரத்திலான 400சிசி மோட்டார்சைக்கிள் உலகிற்குள் நுழைய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் உலக புகழ்பெற்ற டிரையம்ப் மோட்டார்சைக்கிள் உரிமையாளர் ஆவதற்கான ஒட்டுமொத்த செலவை அதிகரிக்காமல், கூடுதல் மதிப்பைப் பெற முடியும்.

இலவச ஆக்சஸரீஸ் மூலம் ரைடர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள்களைத் தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இது, ஒட்டுமொத்த பைக் உரிமையாளர் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது. இந்த புத்தாண்டுச் சலுகை, இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தனித்துவமான வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கான வசதியுடன், சிறப்பான உரிமையாளர் அனுபவத்தை வழங்குவதில் டிரையம்ப் தொடர்ந்து கவனம் செலுத்துவதைப் பிரதிபலிக்கிறது.

தற்போதைய விலை உயர்வைச் சரிக்கட்டவும், ஷோரூம்களில் விற்பனை மற்றும் வருகையை உறுதிப்படுத்தவும் இந்த புத்தாண்டுச் சலுகை ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம். இந்த விலை உயர்வுகளுக்குப் பிறகும், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 400சிசி பைக்குகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான மாடல்களாகவே உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2026, 11:06 [IST]
English summary
Triumph motorcycles announces free accessories as new year offer check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X