அறிமுகம் செய்த இரண்டே மாதங்களில் இரண்டாவது முறையாக விலையை உயர்த்திய டிரையம்ப்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் 350சிசி பைக்குகளின் விலைகளை சமீபத்தில் உயர்த்தி இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை உயர்த்தி உள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் உற்பத்தி செலவுகள், ரூபாய் மதிப்பிழப்பை காரணம் காட்டி டிரையம்ப் கொண்டுவந்துள்ள இந்த விலை உயர்வு குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் 400சிசி பைக்குகளை 350சிசி-க்கு மாற்றி சமீபத்தில் அறிமுகம் செய்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மத்திய அரசாங்கம் 350சிசி மற்றும் அதற்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கான GST-ஐ குறைத்ததை அடுத்து டிரையம்ப் உள்பட பல பைக் நிறுவனங்கள் இவ்வாறான நடவடிக்கையில் இறங்கின.

triumph 350cc motorcycles price once again

350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்ட டிரையம்ப் பைக்குகளின் விலைகளில் பெரியதாக எந்தவொரு அதிகரிப்போ அல்லது குறைப்போ கொண்டுவரப்படவில்லை. இருப்பினும், அடுத்த மாதமே அதாவது கடந்த ஜூன் மாத துவக்கத்தில் 350சிசி டிரையம்ப் பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக இந்த பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேற்காசிய நாடுகளில் நிலவிவந்த போர் பதற்ற சூழலினாலும், அதனால் உருவான மெட்டீரியல்களின் விலை உயர்வு மற்றும் உலகளாவிய விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளினாலும் கடந்த ஜூன் மாதத்தில் டிரையம்ப் தனது 350சிசி பைக்குகளின் விலைகளை உயர்த்தி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது, உற்பத்தி செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளின் அதிகரிப்புகளால் இந்த புதிய விலையுயர்வை கொண்டுவந்துள்ளது.

triumph 350cc motorcycles price once again

இதன்படி பார்த்தால், 400சிசி-இல் இருந்து 350சிசி-க்கு மாற்றப்பட்ட இரு மாதங்களில் இரு முறை பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அடுத்தடுத்த விலையுயர்வுகளால் முன்பு 400சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்ட போது கொண்டிருந்த விலைகளை காட்டிலும் தற்போது 350சிசி என்ஜின் உடன் அதிகமான விலையை இந்த டிரையம்ப் பைக்குகள் கொண்டுள்ளன.

இந்தியாவில் தற்சமயம் ஆறு டிரையம்ப் 350சிசி பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 350சிசி என்ஜினை கொண்டிருப்பினும், இன்னமும் இந்த பைக்குகளின் பெயர்களில் '400' என்கிற எண்ணே பயன்படுத்தப்படுகிறது. புதிய விலை உயர்வை தொடர்ந்து 350சிசி டிரையம்ப் பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் எந்த அளவிற்கு உள்ளன என்பதை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Motorcycle Model Ex-Showroom Price
Triumph T4 ₹2,08,977
Triumph Speed 400 ₹2,39,877
Triumph Tracker 400 ₹2,49,253
Triumph Scrambler 400X ₹2,64,978
Triumph Thruxton 400 ₹2,75,335
Triumph Scrambler 400 XC ₹2,99,333
Average Portfolio Price ₹2,56,292

இந்த அட்டவணையின்படி பார்க்கும்போது, குறைந்தப்பட்சமாக டிரையம்ப் T4 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,08,977 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக, ஸ்க்ராம்ப்ளர் 400XC பைக் சுமார் ரூ.2,99,333 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிராக்கர் 400 பைக்கின் விலை ரூ.3,000 அதிகரிக்கப்பட்டு ரூ.2,49,253 ஆக தற்சமயம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே பல பிராண்ட்களில் இருந்து அறிவிக்கப்பட்டு வரும் விலையுயர்வுகளால் ஏமாற்றம் அடைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ப்பின் புதிய விலை அதிகரிப்பு மேலும் கவலை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. அதிலிலும் குறிப்பாக, முன்பு விற்கப்பட்ட 400சிசி டிரையம்ப் பைக்குகளை காட்டிலும், தற்போது 350சிசி டிரையம்ப் பைக்குகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவது நிச்சயம் பெரிதும் ஏமாற்றமாகவே இருக்கும்.

இவ்வாறு தொடர்ச்சியாக விலைகள் அதிகரிக்கப்பட்டாலும், செயல்படுதிறன் மற்றும் ஒட்டுமொத்த பயண அனுபவத்தில் டிரையம்ப் 400 பைக்குகள் இன்னமும் சிறந்த பைக்குகளாகவே விளங்குகின்றன. இதன் மூலமாக, இந்தியாவில் ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்ஃபீல்டு, ஹோண்டா, ஜாவா, யெஸ்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியளிக்கக் கூடியதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் விளங்குகிறது.

Article Published On: Tuesday, July 7, 2026, 15:36 [IST]
English summary
Triumph motorcycles hiked its 350cc motorcycles price once again in just two months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out