பல்சர் அப்பாச்சி எல்லாம் ஓரமா போக வேண்டியது தான்.. இனி இந்த பைக்க தான் எல்லாரும் வாங்க போறாங்க!

350 சிசி இன்ஜின் கொண்ட புதிய ட்ரையம்ப் (Triumph) பைக்குகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. கடந்தாண்டு புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியது மத்திய அரசு. அதில் 350 சிசி அல்லது அதற்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரியை 28%-தத்தில் இருந்து 18% ஆகக் குறைத்தது. அதேபோல் 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரி 40% ஆக உயர்த்தப்பட்டது.

ட்ரையம்ப் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் தான் 400 சிசி கொண்ட தொடக்க நிலை பைக் மாடல்கள் பலவற்றை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தது. இந்த ஜிஎஸ்டி வரி உயர்வால், இந்த தொடக்க நிலை பைக் மாடல்களின் விலை உயர்ந்து விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் இருந்தது. இதனால் இன்ஜின் அளவை 350 சிசியாகக் குறைத்து அதன் மூலம் வரிக்குறைப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டது ட்ரையம்ப்.

Triumph Scrambler 400X

இந்தத் திட்டத்தின் கீழ் தான் 350 சிசி இன்ஜின் கொண்ட ட்ரையம்ப் பைக் மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக விற்பனைக்கு வரவிருக்கும் 350 சிசி பைக்குகளின் இன்ஜின் குறித்த தகவல்கள் தற்போது கசிந்திருக்கின்றன. குறிப்பாக புதிய 350 சிசி இன்ஜினின் பெர்ஃபாமன்ஸ் குறித்த தரவுகள் கிடைத்திருக்கின்றன. அது குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

ட்ரையம்ப் 400 சிசி இன்ஜின்: முதலில் தற்போது விற்பனையில் இருக்கும் 400 சிசி இன்ஜினின் பெர்ஃபாமன்ஸ் குறித்த தகவல்களைப் பார்த்து விடலாம். அப்போது தான் புதிய இன்ஜினின் பெர்ஃபாமன்ஸ் எந்தளவிற்கு குறைந்திருக்கிறது என்பதனை நாம் எளிதாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.

Triumph Thruxton 400

ட்ரையம்பின் 400 சிசி இன்ஜினானது 8,000 rpm-ல் 40 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது மணிக்கு 60 கிமீ வேகத்தை 3 நொடிகளிலும், மணிக்கு 100 கிமீ வேகத்தை 7.4 நொடிகளிலும் எட்டும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்த இன்ஜினானது மணிக்கு 146 கிமீ முதல் 148 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது.

இந்த பெர்ஃபாமன்ஸ் அளவுகளானது ஸ்பீடு 400, ஸ்கிராம்பிளர் 400X, XC பைக் மாடல்களுக்கானது. த்ரக்ஸ்டன் 400 பைக் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 400 சிசி இன்ஜினானது இதனை விட சற்று கூடுதல் பெர்ஃபாமன்ஸைும், ஸ்பீடு T4 பைக்கில் இதனை விட சற்று குறைவான வெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் வகையிலும் ட்ரையம்ப் ட்யூன் செய்திருக்கும்.

புதிய 350 சிசி இன்ஜின்: புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் 350 சிசி இன்ஜினானது ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பிளர் 400 சீரிஸ் பைக் மாடல்களில் 37 hp பவர் மற்றும் 32 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது 8 hp வரை குறைவான பவர் மற்றும் 5.5 Nm வரை குறைவான டார்க்காகும்.

இந்த இன்ஜினுடன் மணிக்கு 60 கிமீ வேகத்தை 3.1 நொடிகளிலும், 100 கிமீ வேகத்தை 8.1 நொடிகளிலும் எட்டும் திறனைப் பெறுகிறது ஸ்பீடு 400 பைக். மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 148.7 கிமீ-ல் இருந்து மணிக்கு 147 கிமீ ஆகக் குறைந்திருக்கிறது. இதனால் க்ரூஸ் செய்யும் வேகத்திலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது, அல்லது வேறுபாட்டை பெரியளவில் நாம் உணர முடியாது என்றே தெரிகிறது.

தற்போதைய ட்ரையம்ப் 400 சிசி பைக்கின் பெர்ஃபாமன்ஸ் வேண்டும் என்பவர்கள் புதிய 350 சிசி இன்ஜின் கொண்ட த்ரக்ஸ்டன் 400 பைக்கை வாங்கலாம். அதில் பவர் 2 hp மட்டுமே குறைந்து 40 hp ஆக உள்ளது டார்க் அளவு 32 Nm தான். அதிகபட்ச வேகம் மணிக்கு 157 கிமீ ஆக இருக்கிறது.

இந்தப் புதிய இன்ஜினுடன் தற்போது இருப்பதை விட குறைவான விலையில் புதிய பைக்குகள் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் முன்பை விட கூடுதல் விற்பனையை ட்ரையம்ப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் 400 சிசி பைக்குகளைத் தவிர்த்து, ட்ராக்கர் 400 மற்றும் போனவில் 400 ஆகிய புதிய பைக்குகளையும் இந்தியாவில் ட்ரையம்ப் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 400 சிசி இன்ஜினை விட சிறிய இன்ஜின் தான் என்றாலும், தினசரிப் பயன்பாட்டில் பெரியளவில் வேறுபாட்டை நாம் உணர மாட்டோம். அந்த வகையிலேயே மேம்பாடுகளை ட்ரையம்ப் செய்திருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். கொஞ்சம் குறைவான பெர்ஃபாமன்ஸ் என்றாலும், விலையும் குறையும் என்பது பிளஸ் பாயிண்ட். குறைவான விலையில் நாம் எதிர்பார்க்கும் வகையிலான பைக்கை இந்தப் புதிய இன்ஜின் கொண்ட ட்ரையம்ப் பைக்குகள் மூலம் நாம் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2026, 16:05 [IST]
English summary
Triumph new 350 cc engine details leaked check all details here
மேலும்... #triumph motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+