ராயல் என்ஃபீல்டு மட்டுமில்ல, ஹோண்டாவுக்கும் போட்டியாக டிரையம்ப் பைக்! 2 லட்ச ரூபாய்க்கு மேல் விலை...!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் ஸ்பீடு 400 (Speed 400) பைக்கை 350சிசி என்ஜினுக்கு சமீபத்தில் மாற்றியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இதன் மூலமாக, விற்பனையில் இந்த பைக்கிற்கு ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda Highness CB350) நேரடி போட்டியாக அமைகிறது. இந்த இரு 350சிசி பைக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தோற்றம் மற்றும் ஸ்டைல்: 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ள டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல், நியோ-ரெட்ரோ தோற்றத்தை, மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளுடன் பழமையான கிளாசிக் பைக்குகளின் லுக்கில் கொண்டுள்ளது. இந்த பைக்கில், எல்இடி ஹெட்லைட், சிங்கிள்-பீஸில் இருக்கை, பவுடர்-கோட்டிங்கில் என்ஜின் பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆனது ஸ்பீடு 400 பைக்கை காட்டிலும் அதிக ரெட்ரோ தோற்றத்தை கொண்டுள்ளது. எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்மோக்டு எஃபெக்ட்டில் டெயில்லைட்டை கொண்டிருந்தாலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை போன்று பழமையான கிளாசிக் தோற்றத்தை இந்த ஹோண்டா பைக் கொண்டுள்ளது. பிரீமியம் தரத்தில் காட்டுவதற்காக, பைக்கை சுற்றிலும் க்ரோம் ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ள நிலையில், இருக்கைகள் இரண்டாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
என்ஜின்: இந்த இரண்டு பைக்குகளுமே கிட்டத்தட்ட ஒரே அளவிலான என்ஜினை கொண்டிருப்பினும், ஸ்பீடு 400 ஆனது இந்த இரண்டில் பவர்ஃபுல்லான பைக்காக விளங்குகிறது. இதற்கு காரணம், இதில் அதிநவீன லிக்யுடு-கூல்டு மற்றும் DOHC தொழிற்நுட்பங்கள் என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஸ்பீடு 400 பைக்கில் என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
| Specification | Triumph Speed 400 | Honda Highness CB350 |
| Engine | 349cc Single Cylinder | 348.36cc Single Cylinder |
| Power | 37 PS @ 8500 rpm | 21 PS @ 5500 rpm |
| Torque | 32 Nm @ 7000 rpm | 30 Nm @ 3000 rpm |
| Gearbox | 6 Speed | 5 Speed |
| Cooling System | Liquid Cooled DOHC | Air Cooled SOHC |
| Key Advantage | High Performance / Modern Tech | Relaxed Cruising / Retro Feel |

பரிமாண அளவுகள்: ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆனது அளவில் பெரிய மோட்டார்சைக்கிள் ஆகும். இதனால், இருவர் அமர்ந்து செல்வதற்கு இது கூடுதல் இடவசதியை வழங்குகிறது. இதனால் இது தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதுவே, ஸ்பீடு 400 ஆனது கொஞ்சம் சிறிய இருக்கையை சிங்கிள்-பீஸில் கொண்டுள்ளது. மேலும், இந்த பைக்கை ஓட்டும் பொசிஷனும் ரைடரை முன்னோக்கி தள்ளுவதால், இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
| Dimension / Specification | Triumph Speed 400 | Honda Highness CB350 |
| Length | - | 2163 mm |
| Width | 829 mm | 789 mm |
| Height | 1096 mm | 1107 mm |
| Wheelbase | 1386 mm | 1441 mm |
| Ground Clearance | 164 mm | 166 mm |
| Kerb Weight | 179 kg | 181 kg |
| Seat Height | 803 mm | 800 mm |
| Fuel Tank Capacity | 13L | 15L |
மெக்கானிக்கல் பாகங்கள்: சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் டிரையம்ப் பைக் என்பதால் ஸ்பீடு 400 அதிநவீன மெக்கானிக்கல் பாகங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, சஸ்பென்ஷனுக்கு ஹைனெஸ் சிபி350 பைக்கில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் இரட்டை ஹைட்ராலிக் ஷாக்குகள் வழங்கப்படும் நிலையில், ஸ்பீடு 400 பைக்கில் தலைகீழான ஃபோர்க்குகளும், கேஸ் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. ஆனால், ஸ்பீடு 400 பைக்கின் சக்கரங்கள் அளவில் சிறியவை ஆகும்.
| Chassis & Hardware | Triumph Speed 400 | Honda Highness CB350 |
| Chassis | Hybrid Spine / Tubular Steel | Half Duplex Cradle |
| Front Suspension | 43mm USD Forks | Telescopic |
| Rear Suspension | Gas Monoshock | Twin Hydraulic Shocks |
| Wheels | 17-inch Alloys | 19-inch (F) / 18-inch (R) Alloys |
| Tyres (Tubeless) | 110/80-17, 150/70-17 | 100/90-19, 130/70-18 |
| Braking (Front/Rear) | 300mm / 230mm ByBre Disc | 310mm / 240mm Disc |
| ABS | Dual Channel | Dual Channel |
தொழிற்நுட்ப அம்சங்கள்: இரண்டுமே மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்தவை தான். ஆனால், சிபி350 பைக்கில் மட்டுமே கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படுகின்றன. இது தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களின் போது மிகவும் அவசியமானதாக இருக்கும். ஸ்பீடு 400 பைக்கை விட குறைந்த விலையில் கிடைக்கும் ஹைனெஸ் சிபி350 பைக்கில் கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
| Features & Technology | Triumph Speed 400 | Honda Highness CB350 |
| Lighting | All LED setup with LED DRLs | All LED Setup |
| Instrument Cluster | Semi Digital Cluster | Semi Digital Cluster |
| Throttle & Control | Ride By Wire Throttle | Hazard Switch |
| Clutch System | Torque Assist Clutch | Assist and Slipper Clutch |
| Safety & Security | Switchable Traction Control, Steering Lock, Antitheft Immobiliser, Secure Ignition Key | Honda Selectable Torque Control (HSTC) / Traction Control |
| Connectivity & Utilities | - | USB Charger, Bluetooth and Navigation (Headphone), Eco Indicator |
| Maintenance | Class Leading 16k Service Interval | Standard Intervals |
விலை: சமீபத்தில் 350சிசி என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்பீடு 400 பைக்கிற்கும், அதன் முந்தைய விலைக்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. ஆனால், ஸ்பீடு 400 ஏற்கனவே விலைமிக்கதாக இருந்தது. அதுவே, ஹைனெஸ் சிபி350 ஆனது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக விளங்க வேண்டும் என்பதற்காக குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
| Model | Price (Ex-Showroom) |
| Triumph Speed 400 (350) | ₹ 2.31 Lakh |
| Honda Highness CB350 | ₹ 1.92 Lakh |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு பைக்குகளை பொறுத்தவரையில், அதிக செயல்படுதிறனில் பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு டிரையம்ப் ஸ்பீடு 400 ஏற்றதாக இருக்கும். முரட்டுத்தனமாக பைக்கை ஓட்ட விரும்புபவர்களுக்கு இந்த டிரையம்ப் பைக்கின் ரைடிங் பொசிஷன் ஏற்றதாக இருக்கும். அதுவே, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆனது மென்மையான நெடுஞ்சாலை இயக்கத்தை, சவுகரியமான ரைடிங் பொசிஷன் உடன் விரும்புபவர்களுக்கானது.


Click it and Unblock the Notifications